பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Min

427

Min



Milling machine universal: (பட்.) பொதுத்துளையிடு எந்திரம் : எல்லாவகையான பரப்புகளையும் கொண்ட உலோகத் தகடுகளிலும் துளையிடுவதற்கான எந்திரம்.

Milling machine vertical: (பட்.) செங்குத்துத் துளையிடு எந்திரம் : துளையிடுவதற்குச் செங்குத்தான கதிர் கொண்ட எந்திரம், இது இடைமட்ட எந்திரத்திலிருந்து வேறுபட்டது.

Millivolt: (மின் ) மிலிவோல்ட்: ஓர் பகுதி. 0.001 வோல்ட்.

Millwright: ஆலை அமைப்பாளர்: ஒர் ஆலையில் அல்லது பட்டறையில் எந்திரங்களை திட்டமிட்டு அமைப்பவர்.

Mimeograph: படியெடுப்பான்: கையெழுத்து அல்லது தட்டெழுத்துப் படியின் பல படிகளை எடுப்பதற்கான தகடு ஆக்க அமைவு.

Minaret: (க.க.) தூபி: பள்ளி வாயில் தூபி.

Mineralogy: கனிமயியல் : கனிமங்களின் பண்பியல்புகள், வகைப்பாடு முதலியவை பற்றி ஆராயும் அறிவியல்.

Miners safety lamp: சுரங்க காப்பு விளக்கு: பார்க்க: டேவிகாப்பு விளக்கு.

Minimum: குறுமம்: மிகக்குறைந்த அளவு; மிகக் குறைந்த எல்லை.

Minimum flying speed :(வானூ .) குறும பறக்கும் வேகம் : ஒரு விமானம் தனது இறகுகளின் இடையகல் அளவுக்கு அதிகமான உயரத்தில் பறக்கும் மட்டத்தில் ஒரே சீராகப் பேணக்கூடிய மிகக் குறைந்த அளவு வேகம்.

Minimum gliding angle: (வானூ.) குறுமச் சறுக்குக் கோணம் : விமானத்தின் முற்செலுத்தி அழுத்தம் கொடுக்கா திருக்கும் போது, விமானத் தின் கிடைமட்டப் பாதைக்கும், ஏறத்தாழ அதன் கிடைமட்டப் பாதைக்குமிடையிலான கூர்ங்கோணம்.

Minimum speed: (வானூ.) குறும வேகம்: விமானத்தில் எந்தக் குறைந்த அளவு வேகத்தில் ஒரே சீராகப் பறக்க முடியுமோ அந்தக் குறைந்த அளவு வேகம்.

Mining: சுரங்கத் தொழில்: பூமியிலிருந்து உலோகம், கணிப்பொருள் கள் ஆகியவற்றை அகழ்ந்தெடுத்தல்.

Mining engineer:சுரங்கப் பொறியாளர்: சுரங்கங்களைத் தோண்டி, அவற்றிலிருந்து உலோகத் தாதுப் பொருள்களை அகழ்ந்தெடுக்கும் பணிகளைச் செய்யும் பொறி யாளர்,

Minion: (அச்சு.) குறும் அச்செழுத்து : மிகச்சிறிய அளவு அச்செழுத்து. இது 7 புள்ளி அளவுக்குச் சமமானது. அச்செழுத்தில் புள்ளி முறை பயனுக்கு வருவதற்கு முன்பு இப்பெயர் வழங்கியது.