பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Mol

431

Mon


னும் உலோகத்தின் தாது. இது பசைத் தன்மையுடன் காரீயகப் பொருள் போல் இருக்கும். இது கருங்கல், அடுக்குப்பாறை, சுண்ணாம்புக்கல் ஆகியவற்றுடன் கலந்திருக்கும்.

Molybdenum: (உலோ.) முறி வெள்ளி: (மாலிப்டினம்): தகர்வியல்புடடைய வெள்ளிநிறம் கொண்ட உலோகம். அதிவேக வெட்டுக் கருவிகளைச் செய்வதற்கான எஃகு உலோகக் கலவைகளைச் செய்வதற்குப் பயன்படுகிறது.

Moment: (பொறி.) நெம்புதிறன்: ஒரு விசைக்கும், அந்த விசை செயற்படும் புள்ளியிலிருந்து அதன் செயல்வினைக் கோட்டின் செங்குத்துக் கோட்டுக்குமிடையிலான பெருக்குத்தொகை . சுழலச் செய்யும் ஆற்றலின் அளவீடு.

Moment of a couple: (கணி.) இருவிசை இணைவு நெம்புதிறன்: விசைகளில் ஒன்றுக்கும், விசைகளின் செயல்விசைக் கோடுகளுக்கிடையிலான செங்குத்துத் துரத்திற்குமிடையிலான அளவுகளின் பெருக்குத்தொகை.

Moment of inertia: (பொறி.) மடிமை நெம்புதிறன்: நகரும் பொருளிின் ஒவ்வொரு துகளினையும் அவற்றின் நடுநிலை அச்சிலிருந்து அத்துகள்களின் தொலைவுகளின் வர்க்கங்களால் பெருக்கி வரும் பெருக்குத் தொகைகளின் கூட்டுத் தொகை.

Momentum. உந்துவிசை: இயக்க உந்து விசையின் அளவு. இது ஒரு பொருளிின் பொருண்மையை அதன் வேக விகிதத்தினால் பெருக்குவதால் கிடைக்கும் பெருக்குத் தொகையாகும்.

Mond "seventy” alloy;(உலோ.) மாண்ட்"70"உலோகக் கலவை:நிக்கலும், செம்பும் கலந்த ஒர் உலோகக் கலவை. இதன் விறைப்பாற்றல் 40823 கிலோகிராம் வரை உயர்வாக இருக்கும்.

Monkey wrench: இயங்கு குறடு: இயங்கு அறுவடைத் திருகு குறடு. இதனைக் கண்டுபிடித்தவர் தாமஸ் மங்கி. அவர் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

<ப>Monobloc: (எந்.) ஒற்றைப் பாளம்: ஒரே துண்டாகவுள்ள வார்ப்படம்.

Monograph; (அச்சு.) தனி வரைவு நூல்: ஒரே பொருள் அல்லது ஓரினப் பொருள்கள் பற்றிய தனிநூல்.

Monolith: ஒற்றைப் பாளக்கல்: தன்னந்தனியாக நிற்கும் மிகப் பெரிய அளவிலான ஒரே பாளமாகவுள்ள கல்.

Monomer: (வேதி:குழைம.)எண் முகச் சேர்மம்: ஒரே முற்றுறா வாய் பாடுடைய சேர்மங்களின் தொடரில் மிக எளிய சேர்மம். பிளாஸ்டிக் தயாரிப்பில் இவற்றின் வினைகள் ஒரு மீச்சேர்மத்தை உண்டாக்கும்.

Monomial: (கணி.) ஓருறுப்புக்கோவை: இயற்கணிதத்தில் ஒரே உறுப்பினை க் கொண்ட கோவை.