பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Mor

433

Mot


தற்குப் பயன்படும் பெரிய பெட்டி அல்லது தொட்டி.

Mortar joints : சாந்து இணைப்புகள் : செங்கல் அல்லது காரைக் கட்டுமானப் பணிகளில் சாந்து கொண்டு இணைப்பதற்கான பல் வேறு பாணிகள்.

Mortise : ( அச்சு.) துளைப் பொருத்து : பொருத்து முளையிடும் துளைச் சட்டம்.

அச்சுக் கலையில் அச்சுத் தகட்டில் எழுத்துகளைச் செருகுவதற்கான வாயில்.

Mortise chisel: (மர.வே.) துளைப் பொருத்து உளி : துளை பொருத்திடும் தடித்த அலகுடைய உளி.

Mortise gauge:(மர.வே.) துளைச் சட்டமானி : தேவையான அகலத்திற்குத் துளைச் சட்டத்தினை வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு கருவி.

Mortise lock: (க.க.) துளைச் சட்டப் பூட்டு : துளைச்சட்டத்துடன் பொருத்தப்படும் ஒரு பூட்டு.

Mortising machine: (மர.வே.) துளைப் பொருத்து எந்திரம்: மரத்தில் உளியாலோ சுற்று வெட்டு மூலமாகவோ துளைச் சட்டம் வெட்டுவதற்கான ஒர் எந்திரம்.

Mosaic: பல் வண்ணப் பட்டை: தரையில் பல வண்ணப் பட்டைகளினால் அணிசெய்தல்:

Mother-of-pearl : முத்துக் கிளிஞ்சல் : கிளிஞ்சல்களின் உட்புறத்தி லுள்ள பளபளப்பான பொருள். பொத்தான் போன்ற சிறிய பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

Motion : (இயற்.) இயக்கம் : ஒரு பொருள் இயங்கி நிலை மாற்றம் பெறுதல்.

Motion study: (க.க.) இயக்க ஆய்வு: சில பணிகளைச் செய்திடும் தொழிலாளர்களின் நடமாட்டங்களைக் கண்காணித்தல். தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்த்து இயக்கத் திறனை அதிகரிக்கும் நோக்குடன் இந்த ஆய்வு செய்யப் படுகிறது.

Motive power (பொறி.) எந்திர விசை: எந்திரத்தில் இயக்கத்தைத் தோற்றுவிக்கும் திறமுடைய ஆற்றல்.

Motometer : (எந்.) இயக்க மானி : நீராவி எஞ்சினின் வேகத்தைக் கணித்திடும் கருவி. இதனை வேகமானி என்றும் கூறுவர்.

Motor : (மின்.) (1) மின்னோடி : மின் விசையை எந்திர ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி.

(2) விசைப் பொறி : எந்திரத்திற்கு இயக்க ஆற்றலை அளிக்கும் பகுதி.

Motor analyzer : (தானி.) இயக்கப் பகுப்பாய்வுக் கருவி : உந்து