பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Mus

437

Myr


உடற்பகுதியைச் சுற்றி பல திருகு சுழல் வட்டங்கள் உள்ள ஒரு திருகு. இதன் மூலம் ஓரிழைத் திருகின் மூலம் கிடைக்கும் இயக்கத்தை விட அதிக வேக இயக்கத்தைப் பெறலாம்

Multiplier : (மின்.) விசைப் பெருக்கி : மின் விசை ஆற்றலளவைப் பன்மடியாகப் பெருக்குவதற்குரிய சாதனம்.

Multipolar motor : (மின்,) பல் துருவ மின்னோடி : நான்கு அல்லது அவற்றுக்கு புலக்காந்தத் துருவங்களையுடைய ஒரு மின்னோடி.

Multispeed motor : (மின்.) பன்முகவேக மின்னோடி : எவ்வளவு பாரமிருந்தாலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு வேகங்களில் இயங்கவல்ல ஒரு மின்னோடி, \

Muntz metal : (உலோ.) மண்ட்ஸ் உலோகம் : 60-62 பகுதி செம்பும், 38- 40 பகுதி துத்ததாகமும் கலந்த உலோகக் கலவை.இது கப்பற் கவசத்தட்டுகள் செய்யப் பயன்படுகிறது.

Muriatic acid : (வேதி.) நீரகப்பாசிகை அமிலம் : ஹைடிரோ குளோரிக் அமிலத்தின் (HCI) வாணிகப் பெயர்.

Mushet steel.: (உலோ.) முஷட் எஃகு : 9% டங்ஸ்டன், மாங்கனிஸ், 1.85% கார்பன் கொண்ட எஃகு. இது வெட்டுக் கருவிகள் செய்வதற்கு முக்கியமாகப் பயன்படுகிறது.

Muslin : மென்துகில் (மஸ்லின்) : பெண்டிர் உடைகளுக்கும், திரைகளுக்கும் உதவும் நுண்ணயமுடைய பருத்தியாலான மென் துகில்,

Mutual inductance : (மின்.) பிறிதின் துண்டல் : ஒரு சுருணையின் காந்தப்புலம், இன்னொரு சுருணையின் மீது செயற்படுவதன் மூலம் உண்டாகும் விளைவு.

ஒரு மின் சுற்று வழியில் ஏற்படும் மின்னோட்ட மாறுதலினால் இன்னொரு மின் சுற்று வழியில் உண்டாகும் மின்தூண்டல்.

Mutule t (க.க.) பிதுக்கற் கவரணை : டோரிக் என்னும் கிரேக்கக் கலைப் பாணியின் படி தூணின் மேல் வரம்பிலுள்ள பிதுக்கக் கவரணை.

Myrtle : புன்னை : இதனைக் கலிபோர்னியாப் புன்னை என்றும் கூறுவர். இதன் மரம் கடினமானது; வலுவானது; பசு மஞ்சள் நிறமுடையது. இந்தப் பசுமை மாறாத தன்மையுடைய இது பல நோக்க மரம். அமெரிக்காவின் மேற்குக் கரையில் இது மிகுதியாக வளர்கிறது

.