பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Nec

440

Neg


Neck : (க.க.) தூண் கழுத்து :(1) தூணின் தலைப்பை அடுத்த கீழ்ப் பகுதி.

(2) மரத்தண்டின் இடை இணைப்புப் பகுதி.

Needle bearing : ஊசித் தாங்கி : ஒருவகை உருள் தாங்கி. இதிலுள்ள உருளிகள் ஊசிகளைப்போல் மெல்லிதாக இருக்கும்.

Needle point ; ஊசிப் பின்னல் வேலை : திரைச்சீலைகளில் கம்பளி இழைகளினால் செய்யப்படும் நுட்பமான ஊசிப் பின்னல் வேலை.

ஊசிமுனை : (எந்.) எந்திரவியலில் ஊசிபோல் கூர்முனையுடைய ஒரு கருவி.

Needle valve : (எந்.) ஊசி ஓரதர் : ஒரு குண்டுசியை அல்லது ஊசியைச் சீரமைவு செய்வதன் மூலம் திரவம் அல்லது வாயு பாய்வதை முறைப்படுத்தக்கூடிய ஒரதர். இது அடிப்பகுதியில் ஒரு சிறிய துவாரத்தில் கூம்பு வடிவப் பள்ளத்தில் பொருத்தப்பட்டிருக்கும்.

Negative ; மறிநிலைத்தகடு : ஒளிப்படக் கலையில் ஒளியும் நிழலும் நேர்மாறாகப் பதிந்திருக்கும் ஒளிப்பட உருவப்படிவம்.

Negative brushes of a dynamo : (மின்.) நேர்மின்னாக்கி மறி நிலைத் தூரிகை : எதிர்மின் வாயுடன் இணைக்கப்பட்டுள்ள மின்னோட்ட அலைகளைத் திருப்பி விடும் கருவியின் தூரிகை

Nagative garbon : (மின்.) எதிர் மின் கார்பன் : ஒரு தொடர் மின்னோட்டச் சுடர் விளக்கில் கீழ் நிலைக் கார்பன்.

Negative charge : (மின்.) எதிர் மின்னேற்றம் : எலெக்ட்ரான்கள் சற்று மிகுதியாகவுடைய ஒரு மின்னழுத்த நிலை.

Negative conductor : (மின்.) எதிர்மின் கடத்தி : எதிர் மின்வாயிலிருந்து செல்லும் ஒரு மின் கடத்தி.

Negative ghosts : மறிநிலைத் இரட்டைத் தோற்றம் : தொலைக்காட்சியில் காலந்தாழ்த்தி அனுப்பப்பட்ட அடையாள அலையுடன் பின் அலை கலப்பதால் கறுப்பு வெள்ளைப் பகுதிகள் ஒன்றுக்கொன்று மாறி ஏற்படும் இரட்டைத் தோற்றக் குளறுபடி.

Negativ plate : (மின்.) எதிர் மின் தகடு : (1) ஒரு சேமக்கலத்தில் உள்ள கடற்பஞ்சு போன்ற ஈயத் தகடு. இது மின்னியக்கத்தின் போது எதிர்மின் தகடாக அல்லது எதிர்மின் வாயாகச் செயற்படுகிறது.

(2) ஓர் அடிப்படை மின்கலத்தில் கார்பன், செம்பு, பிளாட்டினம் முதலியவை எதிர்மின் வாயாகச் செயற்படுகின்றன.

Negative side of circuit : (மின்.) மின் சுற்றுவழியின் எதிர் மின்பாதை : ஒரு மின்சுற்று வழியில் மின் விசை நுகர்வுச் சாதனத்திலிருந்து மின் வழங்கும் ஆதாரத்திற்குத் திரும்பிச் செல்லும் மின் கடத்து பாதை.