பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Nes

441

Neu


Neon light : (மின்.) செவ்வொளி விளக்கு : மின் இழைக்குப் பதிலாக இரு மின் முனைகளைக் கொண்ட ஒருவகை விளக்கு. குழாயினுள்ளிருக்கும் செவ்வொளி வாயு அயனியாகும்போது ஒளி உண்டாகிறது. விளம்பரங்களில் இந்த விளக்குகள் பெருமளவில் பயன்படுகின்றன.

Neon - lightignition timing : (தானி.) செவ்வொளிச் சுடர்மூட்ட நேரம் : உந்து ஊர்தியின் எஞ்சினில் ஒரு சிறிய செவ்வொளி விளக்கினை கம்பிகள் மூலமாகத் தொட ரிலிலுள்ள சுடர் மூட்டக் கம்பியின் துணை மின் சுற்றுவழியின் கம்பிகளை முதல் எண் சுடர்ப்பொறிச் செருகுடன் இணைப்பதன் வாயிலாக, முறிப்பான் தொடும்போதும் விடும்போதும் ஒளி மின்னுகிறது. சமனுருள் சக்கரத்தில் அல்லது அதிர்வு அடக்கியில் உள்ள காலக் குறியீட்டில் நேரடியாக ஒளி மின்னும்போது எஞ்சின் உரிய இயக்க நேரத்தில் இருப்பதாகக் கண்டு கொள்ளலாம்.

Nep : பருத்தி முடிச்சு : பருத்தியில் குறைந்த உருட்சி அல்லது மட்டமான விதை நீக்கம் காரணமாக ஏற்படும் சிறிய முடிச்சுகள்.

Nernst lamp : (மின். ) நெர்ன்ஸ்ட் விளக்கு : ஒருவகை வெண்சுடர் விளக்கு. இதிலுள்ள ஒளிரும் பகுதியில் அரிய மண்களின் உருகா ஆக்சைடுகளினாலான ஒரு பென்சில் இருக்கும்.

Nested tables : கூண்டு மேசை : பயன்படுத்தாத போது ஒன்றுக்குள் ஒன்றைச் செருகிவைத்துக் கொள்ளத் தக்கவாறு அமைக்கப்பட்டுள்ள ஒரு மேசைத் தொகுப்பு. இது பொதுவாக நான்கு அடுக்குகளைக் கொண்டிருக்கு ம்.

Nest of saws : (மர.வே.) தொகுப்பு ரம்பம் : ஒரே கைப்பிடியில் பயன்படுத்தக் கூடிய, பல்வேறு நீளங்களைக் கொண்ட அலகுகள் அமைந்த வட்ட வடிவ ரம்பங்களின் தொகுதி. இலேசான வேலைப்பாடுகளுக்குப் பயனபடுகிறது.

Nest plate : (குழை.) தொகுப்புத் தகடு : வார்ப்படங்களை உட்செலுத்துவதற்குப் பயனபடும் உட்குழிவுப் பாளங்களுக்கான பள்ளப் பகுதியைக் கொண்ட காப்புத்தகடு.

Neutral : (தானி.) இயங்காநிலை : விசையூக்க எந்திரத்தில் இயக்கம் ஊட்டாது இயங்கும் பகுதியின் நிலை. இந்நிலையில் வேகமாற்றப் பல்லிணை பொருந்தாமலிருக்கும்.

மின்னியலில் நேர் மின்னாகவோ எதிர்மின்னாகவோ இல்லாமல் இருக்கும் நடுநிலை இணைவு.

Neutral axis : (பொறி.) நொதுமல் அச்சு : ஓர் எளிய விட்டத்தில் மேற்புற இழைகள் எப்போதும் அமுக்கத்தில் இருக்கும். அப்புற இழைகள் எப்போதும் விறைப்புடனிருக் கும். எனவே, இழைகள் அமுக்கத்திலோ விறைப்புடனோ இல்லாத