பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Nic

448

Nic


தொடர்ந்து அசையா நிலையிலோ, ஒரு நேர்கோட்டில் ஒரே சீரான இயக்கத்திலோ இருந்து வரும். இரண்டாம் விதி : “ஒரு பொருகளின் முறுக்கமானது (அதாவது, அதன் வேக வளர்ச்சி வீதம்),அந்தப் பொருளின் மீதான நிகர விசையினை அந்தப் பொருளின் பொருண்மையினால் வகுப்பதால் கிடைக்கும் ஈவுக்குச் சமம்" மூன்றாம் விதி :ஒவ்வொரு வினைக்கும், அதாவது, ஒவ்வொரு இயற்பியல் விசைக்கும் சமமான எதிர் வினை உண்டு’

Nibbler: (எந்.) கொந்து கருவி: உலோகத் தகடுகளைச் சிறுகச் சிறுகக் கொந்தி விசித்திரமான வடிவங்களை உருவாக்கப் பயன்படும் உலோக வேலைப்பாட்டுக் கருவி.

Wibs: பேனா அலகு : பேனாவின் கூர்மையான அலகு.

Niche: (க.க.) சுவர்மாடம்: சிலையுருக்கள் வைப்பதற்குரிய சுவர் மாடம் :

Nichrome: (உலோ.) நிக்ரோம்: நிக்கலும், குரோமியமும் கலந்த ஓர் உலோகக் கலவையின் வாணிகப் பெயர். இது எளிதில் பற்றிக் கொள்ளும். மின் அடுப்புகள், பிற மின் தடைச் சாதனங்கள் தயாரிக்கப்படுகிறது.

Nickel: (உலோ,) நிக்கல்: உலோகக் கலவைகளில் பெரிதும் பயன்படுத்தப்படும் கெட்டியான ஒளிரும் பொருள். இதன் ஒப்பு அடர்த்தி 8 68. நிக்கல் மூலாம்பூசவும், உலோகக் கலவைகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

Nickel aluminum : நிக்கல் அலுமினியம் : 80 % அலுமினியமும், 20% நிக்கலும் கலந்த உலோகக் கலவை. நிக்கல் கலப்பதால் அலுமினிய உலோகக் கலவைகளின் விறைப்பாற்றல் அதிகமாகிறது.

Nickel copper: (உலோ.) நிக்கல் செம்பு : நிக்கலும் செம்பும் கலந்த உலோகக் கலவை. அமிலம் அரிக்காத வார்ப்படங்கள் தயாரிக்கவும், உராய்வுத் தாங்கு வெண்கலமும் தயாரிக்கவும் பயன்படுகிறது. இதில் 60% நிக்கல், 88% செம்பு, 8.5% மாங்கனீஸ், 8.8% இரும்பு கலந்திருக்கும்.

Nickel malybdenum iron : (உலோ) நிக்கல் மாலிப்டினம் இரும்பு : 20%-40% மாலிப்டினம், 60% நிக்கல், சிறிதளவு கார்பன் கலந்த ஒருவகை உலோகக் கலவை. இது அமில அரிப்புத்தடுப்பானாகப் பயன்படுகிறது.

Nickel plating : (மின்.) நிக்கல் முலாம் : உலோக மேற்பரப்பில் நிக்கல் மூலாம் பூசுதல். ஒரு நிக்கல் உப்பு நீரில் உலோகத்தை மூழ்க வைத்து குறைந்த அழுத்த மின்னோட்டத்தைச் செலித்தினால் உலோகத்தில் நிக்கல் முலாம் படியும்.