பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Non

445

Non


றும் கூறுவர். இது சோடியத் துடன் கலந்து கெட்டியாக்கிய ஈயத்தைக் கொண்ட உராய்வுத் தடுப்பு உலோகம். Noil: கம்பளிச் சீவல்: குறுகிய கம்பளிச் சீவல். உல்லன் நூல்களுக்குப் பயன்படுகிறது.

Nomenclature. (பொறி.) கலைச் சொல்: ஒரு குறிப்பிட்ட கலையில் அல்லது அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் தனிச் சொற்களின் தொகுதி.

Nonconductor: (மின்.) மின் கடத்தாப் பொருள்: தன்வழியாக மின் விசை செல்வதை அனுமதிக்காத ஒரு பொருள்.

Noncorrosive flux: அரித்திடா உருகு பொருள்:பற்றாசு வைத்தல், ஒட்டவைத்தல் போன்றவற்றில் பயன்படுத்தப்படும்போது அரிமானம் உண்டாக்காத ஒருவகை உருகுங் கலவைப் பொருள்.

Nondeforming steel: (உலோ.) உருத்திரியா எஃகு : 1.5% மாங்கனிஸ் கலந்த கடினமாக்கிய எஃகு. இது கருவிகள் செய்யவும், வார்ப்படங்கள் செய்யவும் பயன்படுகிறது.

Nonferous metals: (பொறி.) அயமிலா உலோகங்கள்: இரும்புஅடங்கியிராத உலோகங்கள்.

Noninductive circuit: (பொறி.) தூண்டா மின் கற்றுவழி: மின்னோட்டத்தின் காந்த விளைவு மிகக் குறைந்த அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ள அல்லது அடியோடு இல்லாமல் செய்யப்பட்டுள்ள ஒரு மின் சுற்றுவழி.

Non inductive resistance: (பொறி.) தூண்டா மின்தடை : தன் தூண்டலிலிருந்து விடுபட்ட மின்தடை.

Non inductive winding: (பொறி.) தூண்டாச் சுருணை: கம்பிச் சுருளின் ஒரு பாதியில் பாயும் மின்னோட்டத்தில் ஏற்படும் காந்தப் புலம், மறுபாதியில் எதிர்த்திசையில் பாயும் மின்னோட்டத்தினால் ஏற்படும் காந்தப் புலத்தின் மூலம் செயலற்றதாக்கப்படும் வகையில் அமைக்கப்பட்ட சுருணை.

Nonmetallic sheath cable: (பொறி.) உலோகமிலா உறை பொதிக் கம்பிவடம்: உலோகமல்லாத ஒர் உறையில் அல்லது தறி போன்ற உறையில் பொதியப்பட் டுள்ள இரண்டு அல்லது மூன்று மின் கடத்திகளைக் கொண்ட ஒரு வகை மின் கம்பிப் பொருள்.

Nonpareil: (அச்சு.) தனி நிலை அச்செழுத்து: அச்செழுத்தின் அளவு வகைகளில் ஒன்று. இது 6 புள்ளி அளவினைக் குறிக்கும்.

Non pressure: அழுத்தமிலா ஒருங்கிணைப்பு: அழுத்தம் எதுவுமின்றிப் பற்றவைப்பதற்குரிய பற்றவைப்பு முறைகளில் ஒன்று.

Nonrigid airship:(வானூ.) விறைப்பிலா வான்கலம் : வாயுப்