பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Occ

450

Oer


புப்பக்கம். பின் புறத்திற்கு நேர் எதிரான முன்புறம்.

Occasional furniture: துணை அறைகலன்: பல்வேறு வடிவுகளிலுள்ள பல்வேறு பயன்பாடுகளுக்கான சிறிய அறைகலன். இக் காலத்தில் வரவேற்பு அறை, பகல் நேர அறை போன்றவற்றிலுள்ள அறைகலன்கள்.

Ocher: (வண்.) மஞ்சட்காவி: சதுப்பு நிலங்களில் இரும்பும் சுண்ணாம்பும் கலந்த நீரில் உண்டாகும் மஞ்சட்காவி மண். இதனை நேர்த்தியான தூளாகச் செய்து ஆளிவிதை எண்ணையுடன் கலந்து வண்ணச் சாயம் தயாரிக்கப்படுகிறது.

Octagan: எண்கோணம்: எட்டுப் பக்கங்களும் எட்டுக் கோணங்களும் உடைய ஒருசமதள உருவம்.

Octane selector: {தானி.)நீர்க்கரிமத் தொடர்மத் தேர்வுமுறை: பல்வேறு தரமுடைய கேசோலினிலிருந்து மிக உயர்ந்த அளவு திறம் பாட்டினைப் பெறுவதற்காக நேரத்தைச் சரியமைவு செய்வதற்கான ஒருமுறை.

Octant: (வானூ.) எண்ம வட்ட மானி: வானியலிலும் கடற்பயணத்திலும் பயன்படுத்தப்படும் அரைக்கால் வளாகம். 90 0 வரையில் கோண அளவுகளில் இருக்கும். இதன் செயற்கை வானவிவிம்பு குமிழில் வடிவில் இருக்கும்.

Odd leg caliper: (எந்.) இணையிலாக்கால் விட்டமானி: மிதமான

அளவில் விளைந்த கால்களையுடைய விட்ட மானி. இதில் இரு சால்களும் ஒரே திசையில் விளைந்திருக்கும். இது தலையடிப் பகுதிக் தொலைவுகளை அளவிடுவதற்குப் பயன்படுகிறது.

Odeum: (க.க.) இசையரங்கு: பண்டையக் கிரேக்க ரோமானியர்களிடையே இசை நிகழ்ச்சிகளுக்கான அரங்கு. இக்காலத்தில் ஒரு மண்டபம் ; நீண்ட அறைக்கூடம்.

Odometer: தொலைவு மானி: பயணஞ் செய்த தொலைவினை அளவிடுவதற்கான ஒரு சாதனம். இது சக்கரத்தின் குடத்துடன் இணைக்கப் பட்டிருக்கும்.

Odontograph: (எந்.) பல்லிணை ஆர அட்டவணை: பல்லிணைப் பற்களின் உருவரைகளை அமைப்பதற்கான ஆரங்களின் அட்டவணை

O.D. pipe: (பொறி.) புறவிட்டக் குழாய்: கொதிகலன் குழாய்களின் பெயரளவிலான வடிவளவுகளைக் குறிக்கும். 12" விட்டத்திற்கு அதிகமான மென்குழாய்களையும் குறிக்கிறது.

Oersted, Hans Christian (1777-1851): ஒயர்ஸ்டெட், ஹான்ஸ் கிறிஸ்டியன் (1777-1851): டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மருத்துவ அறிஞர். காந்த முள்ளின் மீது மின் னோட்டத்தின் விளைவுகளைக் கண்டுபிடித்தவர்.

0ersted: (மின்.) ஒயர்ட்ஸ்டெட்.: