பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

One

454

Ope


சமயத்தில் பலபடித் தகடுகளை வெட்டி எடுக்கலாம்.

Oneside coated: ஒரு பக்க படலத் தாள்: ஒரு பக்கம் மட்டுமே படலப் பூச்சுடைய கற்பாள அச்சுத்தாள் .

Onion skin: சருகுத் தாள்: தட்டச்சில் படியெடுப்பதற்குப் பயன்படும் மிக மெல்லிய தாள்.

Onyx: (வேதி.) பல்வண்ண மணிக்கல்: பற்பல வண்ண அடுக்குகள் கொண்ட மணிக்கல் போன்ற சலவைக் கல் .

Oolitic limestone: (க.க.) மணிக்கல சுண்னம்: மிக நுட்பமானக் கோளவடிவத் துகள்களினாலான பரல் செறிவுடைய கண்ணக்கல்.

Ooze leather : தோல் மெருகு: தோல் பதனிடுவதற்கான ஒரு முறை. தோலுக்கு வெல்வெட்டு போன்ற மென்மையான தன்மையளிப்பதற்கு இந்த முறை பயன்படு கிறது.

Opaci meter : ஒளிபுகாத் திறன் மானி : காகிதத்தின் ஒளியை ஊடு ருவிச் செல்லவிடாத திறனை அளவிடுவதற்கான ஒரு கருவி.

Opacity : ( அச்சு.) ஒளிபுகாத் திறன் : காகிதத்தின் ஒளியை ஊடுருவிச் செல்லவிடாத தன்மை.

Opaque : ஒளிபுகா : ஒளியை ஊடுருவிச் செல்ல விடாத இயல்பு:

Open circuit: (மின்.) திறப்பு மின் சுற்று வழி : மின்சுற்று முழுமை பெறாமலும், மின்னோட்டம் இல்லாமலும் இருக்கும் ஒரு மின்கற்று வழி.

Open circuit cell ; (மின்.) திறப்பு மின்சுற்று வழிக்கலம் ! இடையிடைப் பணிகளுக்காக திறப்பு மின் சுற்று வழியில் வைக்கப்பட்டுள்ள மின் கலம்.

Open hearth : திறந்த உலை : ஆழமற்ற மூட்டு அனல் உலை. இது எஃகு செய்வதற்கான திறந்த உலை முறையில் பயன்படுகிறது.

Open mold : (வார்.) திறப்பு வார்ப்படம் : நீண்ட சலாகைகளும், தகடுகளும் தயாரிக்கப் பயன்படும் வார்ப்படம். சமதள மணற்படுகை அமைக்கப்பட்டு அதில் உருவமைக்கப்பட்டு அழுத்தப்படுகிறது. உருவமைப்பினை எடுத்து விட்டு, அதில் உருகிய உலோகத்தை ஊற்றலாம்.

Open string stairs : (க.க.) திறப்பு மென் படிக்கட்டுகள் : ஒரு பக்கம் சுவரும் மறுபக்கம் கைப்பிடியும் உடைய மாடிப்படி, மிதி கட்டைகளும் செங்குத்துப் பகுதியும் பக்கவாட்டிலிருந்து புலனாகுமாறு கட்டப்படுகிறது.

Open wíring : (மின்.) திறப்பு வகை மின் கம்பியமைப்பு : மின் கடத்திகள் வெளி தெரியுமாறு மின் கம்பிகளை அமைத்தல். இந்த முறையில் மின்கடத்திகள் பீங்கான் குமிழ்களில் அல்லது முளைகளில் பொருத்தப்பட்டிருக்கும்.