பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Ord

455

Orn


Operating speed: (வானு.) இயக்க வேகம்: விமானத்தில் எஞ்சின் வேகத்தின் 87.5% வேகத்திற்கு இணையாகப் பறக்கும் வேகம்.

Operator: (எந்.) இயக்குபவர்: அல்லது அவற்றின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துபவர்.

Optical altimeter: (வானூ.) விழாக்காட்சி உயரமானி: பொருத்தமான பார்வை முறை மூலம் கட்டுப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட ஒருவகை உயரமானி.

Optical center: (அச்சு.) விழிக் காட்சிமையம்: அச்சிட்ட பக்கத்தில் அல்லது வரைபடத்தில் நமது கண் நாடும் ஒரு மையப்பகுதி. இது உள்ளபடியான மையத்திற்கு மேலே, மொத்த உயரத்தில் எட்டில் ஒரு பகுதியாக இருக்கும்.

Optical distortion: (குழை.) காட்சித் திரிபு: ஒளி ஊடுருவும் பிளாஸ்டிக் வழியாகப் பார்க்கும் போது தோன்றும் தோற்றத் திரிபு.பிளாஸ்டிக்கின் ஒரு சீர்மையற்ற காட்சித் தன்மையினால் உண்டாகிறது.

Optical pyrometer: ஒளியியல் மின்முறை வெப்பமானி: கடும் வெப்பத்தினால் உண்டாகும் நிறத்தையும், மின்னோட்டத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குச் சூடாக்கப்பட்ட கம்பியின் நிறத்தையும் ஒப்பிட்டுப்பார்த்து உயர்ந்த அளவு வெப்பத்தை அளவிட உதவும் சாதனம்.

Ordinate: (சணி.) நாண்வரை: வரைவிளக்கப் படத்தில் நடுச்சுட்டு வரையிலிருந்து மற்ற நடுச்சுட்டுக்கு இணையானவரை.

Ore (கனிம.) தாது: உலோகம் கலந்துள்ள பாறை. இதிலிருந்து உலோகங்கள் எடுக்கப்படுகின்றன.

Organic: (வேதி.) கரிமப் பொருள்: விலங்குகளிலிருநதோ, தாவரங்களிலிருந்தோ இயற்கையாகவோ கரிமச்சேர்க்கையுடைய பொருள்,

Oriel: (க.க.) தொங்கற் பலகணி: கவர் ஆதாரத் தண்டயக் கைகள் மீதமர்ந்த பல்கோணத் தொங்கற் பலகணி.

Orient; கீழ்த்திசை: கீழ்த்திசைக் குரிய.

Oriental walnut: கீழ்த் திசை வாதுமை: இது ஒருவகை மரம். இதனைக் கீழ்த்திசை மரம்' என்றும் கூறுவர். பெரிய வடிவளவில் வளரும் ஆஸ்திரேலிய மரவகை. அலங்கார அறைகலன்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

Orifice: புழைவாய்: ஓர் உட்குழிவிலுள்ள ஒரு சிறிய துவரம்.

Ormolu: பளபளப்பு வெண்கலம்: தட்டு முட்டுச் சாமான்களை அணி செய்யப் பயன்படும் பளபளப்பான வெண்கலம்.

Ornament: அணிவேலைப்பாடு: அணி ஒப்பனை செய்யப் பயன்படும் அழகு வேலைப்பாடு.