பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Ozo

259

Pai


வைப்பதற்கும். வெட்டுவதற்கும் இந்த வாயு பயன்படுகிறது.

Oxygen: (வேதி.) ஆக்சிஜன்: சுவையற்ற, நிறமற்ற வாயுத் தனிமம். காற்றின் கன அளவில் ஐந்தில் ஒரு பகுதி ஆக்சிஜன். இது எரிவதை ஊக்குவிக்கிறது, உயிர்கள் உயிர்வாழ இன்றியமையாத வாயு. இதனால் இதனை 'உயிரகம்’ என்றும் கூறுவர்.

Ozocerite: (வேதி.) மெழுகு அரக்கு: மெழுகுதிரி, மின்காப்பு ஆகியவற்றில் பயன்படும் மெழுகு போன்ற புதைபடிவ அரக்குப்

P

Pack harden: (உலோ.) கார்பனாக்குதல் (1) கார்பனாக்குதல் அல்லது கெட்டிப்படுத்துதல்

(2) மென் எஃகிற்குக் கடினமான புறப்பரப்பினைக் கொடுக்கும் முறை.

எஃகினை ஒரு கார்பன் பொருளுடன் சேர்த்துப் பக்குவப்படுத்தி எண்ணெயில் அமிழ்த்துவதன் மூலம் இது செய்யப்படுகிறது.

Padlock: பூட்டு: நாதாங்கியுடன் இணைவாகப் பயன்படுத்தப்படும் பிரித்தெடுக்கக்கூடிய ஒருவகைப் பூட்டு.

Pad lubrication:திண் மசகிடல்:எண்ணெய்ப் பூரிதமாகிய அடை பொருள். கரையாத பிசின் செய்யப் பயன்படுகிறது.

Ozone: (வேதி.) ஓசோன்: கார நெடி கொண்ட நிறமற்றவாய (O3) சலவை எண்ணெய்கள். மெழுகுகள், மாவு, மரப்பொருள் முதலியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. சில சமயம், குடி நீரைக் கிருமி நீக்கம் செய்வதற்கும் பயன்படுகிறது. ஒரு தனிவகைச் சாதனத்திலுள்ள உலர்ந்த மற்றும் குளிர்ந்த காற்றின் வழியே உயர் அழுத்த மின்விசையைச் செலுத்துவதன் மூலம் இந்த வாயு தயாரிக்கப்படுகிறது.

பஞ்சுடன் இணைத்து மசகிடும் முறை.

pad saw: பொதி இரம்பம்: ஒரு வகைக் கை ரம்பம். நீண்ட கூம்பு வடிவ அலகினைக் கொண்டிருக்கும் இந்த அலகு ஒரு குதை குழிக்குள் அல்லது பொதிவுக்குள் பொருத்தப்பட்டிருக்கும். பயன்படுத்தப்படாதபோது இந்த அலகு கைப்பிடியாகவும் பயன்படும்.

Pagoda: கூருருளையோடு: கூர்ங் கோபுரம் வடிவிலான ஒரு முகடு.

Paint: (வேதி.) வண்ணம்: எண்ணெய் அல்லது நீருடன் கலந்த அல்லது உலர்ந்த வண்ணப் பூச்சு.