பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Par

462

Par


வடிவச் சாதனம். இதன் குடை வடிவம் வானிலிருந்து இறங்கும் போது காற்றை எதிர்த்து வேகத்தைக் குறைத்து மெதுவாகத் தரையிறங்குவதற்கு உதவுகிறது.

parachute canopy: (வானூ.) வான்குடை மேற்கட்டி: ஒரு வான் குடையின் முக்கிய ஆதார மேற் பரப்பு.

Parachute flare: (வானூ.) வான் குடை மின்னொளி : ஒரு குறிப்பிட்ட உயரத்தில் விமானத்திலிருந்து குதிக்கும்போது ஒரு பரந்த பரப்பளவில் மின்னொளி பரவும்படி வடிவமைக்கப்பட்ட சாதனம் பொருத்திய வான்குடை.

Parachute harness : (வானூ.) வான்குடைச் சேணம் : வான் குடையை அணிந்து கொள்பவர் தன்னோடு பிணைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் பட்டைகள் பட்டைப்பிடிகள், இணைப்பான்கள் அமைந்த ஒரு கூட்டு அமைப்பு.

Paraffin : (வேதி.) பாரஃபின் மெழுகு : பெட்ரோலியத்தைக் காய்ச்சி வடித்தல் மூலம் கிடைக்கும் ஒருவகை மெழுகு. இது ஒளி, ஊடுருவக்கூடியது; திண்மையானது.

Parallax : (மின்.) மாறு கோணத் தோற்றப் பிழை : நோக்கு மயக்கம்; பார்வைக் கோணத்தால் பொருள் நிலையில் தோன்றும் மாறுதல் கோண அளவு.

Parallel: இணை கோடு: ஒரு

போக்குடைய இணைகோடுகள். இவை ஒரே திசையில் செல்பவை, எல்லா முனைகளிலும் இணை தொலைவுடையவை.

Parallel circuit , (மின்.) இணைச் சுற்று வழி : பொதுவான ஊட்டு வாயும், பொதுவான திரும்புவாயும் உடைய ஒரு மின்சுற்றுவழி. ஊட்டு வாய்க்குமிடையே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கருவிகள் இணைக்கப்படுகின்றன. ஒவ்வொரு கருவிக்கும் பொது ஊட்டு வாயிலிருந்து தனித்தனி அளவு மின்னோட்டம் பாயும்.

Parallel connected transformer : (மின்.) இணை இணைப்பு மின்மாற்றி : ஒரே மின் வழங்கு ஆதாரத்துடன் .தொடக்கச் சுருணைகள் இணைக்கப்பட்டுள்ள ஒன்று அதற்கு மேற்பட்ட மின் மாற்றிகள். இதில் அழுத்தப்பெற்ற மின்னழுத்தம் ஒவ்வொரு நேர்விலும் மின் வழியிலுள்ள அதே அளவுக்கு இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும்.

Parallel forces : (எந்.)இணை விசை : இரண்டு விசைகள் இணையாக இருந்து, ஒரே திசையிலிருந்து தொடங்காமல் ஆனால் ஒரே திசையில் செயற்படுமானால், அதன் கூட்டு விளைவாக்கம் இரண்டு விசைகளுக்கும் இணையாகவும், அவற்றின் கூட்டுத் தொகைக்குச் சமமாகவும் இருக்கும். இரு விசைகளும் எதிர்த் திசைகளில் செயற்படுமானால், அப்போது கூட்டு விளைவாக்கம், அவ்விரு விசை