பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Per

468

Phe


Perpendicular: செங்குத்துக் கோடு: ஒழி கோட்டிற்கு அல்லது தளத்திற்குச் செங்குத்தாக உள்ள கோடு.

Perron: (க,க.) வாயிற்படிமேடை: ஒரு கட்டிடத்திற்கு வெளியே முதல் மாடிக்குச் செல்ல அமைந்துள்ள வாயிற் படி,

Perspective: பரப்புத் தோற்றம்: ஒரு சமதளப் பரப்பில் உள்ள பொருள்கள் கண்ணுக்குத் தோன்றுகிற அதே தோற்றத்தில் காட்சிப் படங்களை வரைந்து காட்டுதல்.

Pet cock: அடைகுமிழ்: நீராவி முதலியவற்றை வெளியிடுவதற்கான அடைப்புக் குமிழ்.

Petrography : கற்பாறையிய்ல் : கற்பாறைகளின் அமைப்பு, உருவாக்கம் முதலியவற்றை ஆராய்ந்தறிதல்.

Petrol : கல்லெண்ணெய் (பெட்ரோல்) : பொறி வண்டிகளுக்கும், விமானம் முதலியவற்றுக்கும் பயன்படும் தூய்மையாக்கப்பட்ட நில எண்ணெய். அமெரிக்காவில் இதனை கேசோலின்' என்பர்.

Petroleum : (வேதி.) பெட்ரோலியம் : உள் வெப்பாலைகளிலும் பிறபொறிகளிலும் எரிபொருளாகப் பயன்படும் நிலப்படுகைக்குரிய தாது எண்ணெய்.

Pewter : (உலோ.) பீயூட்டர் : வெள்ளீயமும் காரீயமும் கலந்த சாம்பல் நிற உலோகக் கலவை.

Pharmaceuticals: (வேதி.) ஆக்க மருந்து: மருந்துக் கடைகளில் ஆக்கம் செய்து விற்பனை செய்யப்படும் மருந்துகள் மற்றும் வேதியியற் பொருள்கள்.

Phase : (மின்.) மின்னோட்டப் படிநிலை : மாறுபட்ட அலை இயக்கத்தில் செல்லும் மாற்று மின்னோட்ட இயக்கப் படிநிலை.

Phase angle : (மின்.) மாற்று நிலைக் கோணம் : மாற்று மின்னோட்டச் சுற்று வழியில் மின்னோட்ட இயக்கப் படிநிலையைக் குறிக்கும் கோணம். -

Phase meter : {மின்.) மின்னோட்டப் படிநிலை மானி : மின் சுற்று வழியில் அலைவெண்ணைக் குறிக்கும் மானி. இதனை அலைவெண் மானி என்றும் கூறுவர்.

Phenol (வேதி.) கரியகக் காடி (C6H5OH) : ஒரு படிகப் பொருள். கரி எண்ணெயிலிருந்து (கீல்) ஒரளவு எடுக்கப்படுகிறது. சோடியம் பென்சைன் சல்ஃபோனேட்டை காரச்சோடாவுடன் இணைத்துச் செயற்கை முறையிலும் தயாரிக்கப்படுகிறது. கிருமி நீக்கியாகப் பயன்படுகிறது.

Phenolic resins moiding type: (வேதி. குழை,) பெனோலிக் பிசின் வார்ப்படம் : பிளாஸ்டிக் குடும்பத்தில் மிகப் பழமையானது; மிக முக் கியமானது. குறைந்த செலவில் கிடைக்கக்கூடியது; பயனுள்ள பண்பியல்புகளைக் கொண்டது