பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Pho

469

Pho


இவற்றின் வெப்பத்தை எதிர்க்கும் தன்மையும், பெரும்பாலான அரி மானப் பொருள்களை எதிர்க்கும் தன்மையும் முக்கியமானது. இது மின் கடத்தாப் பொருளாகும். எனவே இதைக் கொண்டு மின் செருகிகள் இணைப்புக் கைபிடிகள். அடைப்பான்கள் போன்ற சாதனங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

Pheno plast: (வேதி;குழை.) பெனோபிளாஸ்ட்: பெனால் ஆல்டி ஹைட் பிசின்களைக் குறிக்கும் பொதுவான சொல். இதனை "பெனோலிக்ஸ்" என்றும் கூறுவர்.

Phosphor bronze: (உலோ.) பாஸ்போர் வெண்கலம்: தாமிரம், வெள்ளீயம் ஆகியவற்றுடன் சிறிதளவு பாஸ்பரம் கலந்த ஓர் உலோகக் கலவை. இது பெரும்பாலும் தாங்கிகள் செய்யப்பயன்படுகிறது.

Phosphorus: (வேதி.) பாஸ்பரஸ்: இளமஞ்சள் நிறமுள்ள மெழுகு போன்ற திடப்பொருள். ஒப்பு அடர்த்தி 1.83; உருகுநிலை 44.4°C. இது எளிதில் தீப்பிடிக்கக் கூடியது. இதனை எப்போதும் தண்ணிரிலேயே அமிழ்த்து வைத்திருக்கவேண்டும். இது சிறுசிறு குச்சிகளாக விற்பனை செய்யப்படு கிறது.

Photo composing:(அச்சு.) ஒளிப்பட அச்சுக்கோப்பு: ஒளிப்படமுறையில் அச்சுக்கோக்கும் முறை.

Photo electric cell:(மின்.) ஒளி

மின்கலம்: ஒலியாற்றலை மின்னாற்றலாக மாற்றக் கூடிய ஒரு சாதனம். ஒளி ஆதாரத்தின் மூலம் தானாகக் கட்டுப்படுத்துவதற்கு இது முக்கியமாகப் பயன்படுகிறது.

Photo-engraving: (அச்சு.) ஒளிச் செதுக்கு வேலை: ஒளிப்பட உத்தி மூலமாக செதுக்கு வேலைப்பாடுகள் செய்யும் முறை.

Photography:T***(வேதி.) ஒளிப் படக்கலை: ஒலியுணர்வுடைய தகடு, படச்சுருள், தாள் ஆகியவற்றில் ஒளி படியச் செய்து, சில வேதியியற் பொருள்களைக் கொண்டு அவற்றைப் பக்குவம் செய்வதன் வாயிலாக உருவங்களைப் பதிவு செய்யும் முறை.

Photogravure: (அச்சு.) ஒளிப்பட மறிபடிவத் தகட்டுச் செதுக்குரு: ஒளிப்பட மறிபடிவத்தை உலோகத் தகட்டில் பதியவைத்துச் செதுக்குவது மூலமாக ஒப்புருவம் எடுத்தல்.

Photometer: (இயற்.) ஒளிச் செறிவுமானி: ஒளியின் செறிவினை அளவிடுவதற்கு அல்லது பல்வேறு ஒளிகளின் செறிவினை ஒப்பிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி.

Photomicrograph: (உலோ.) உருப்பெருக்கு ஒளிப்படம்: உருப் பெருக்காடியினால் விரிவாக்கம் செய்யப்பட்ட பொருளின் ஒளிப்படம். உருப் பெருக்காடியையும், ஒளிப்படக் கருவியையும். இணைத்து இந்தப்படம் எடுக்கப்