பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iii

8. உயிரியல், வேளாண்மை, சூழ்நிலையியல்கள், 9. கடலியல், கப்பல் கட்டுதல், 10. ஆற்றல் அறிவியல்.

முதன்மைப் பதிப்பாசிரியருக்கு உதவியாகச் செய்தி திரட்டுவோர் ஒருவரையும் பணியிலமர்த்த முடிவு செய்யப்பட்டது.

அறிவியல் துறைகளைச் சார்ந்த வல்லுநர் பட்டியலை உருவாக்கிப் பின் அவர்களிடமிருந்து கட்டுரைகள் கேட்டுப் பெறவேண்டுமென்றும், பெற்ற கட்டுரைகளைச் சீர்தூக்கிப் பதிப்பிற்குச் செப்பம் செய்வதுடன் துறையிலேயும் கட்டுரைகளைப் பதிப்பாசிரியர்களும் எழுத வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. பதிப்பு செய்த கட்டுரைகளைத் துறை வல்லுநர் குழுக்கள் திறனாய்வு செய்ய அவர் களுக்கு நாட்படியும், பயணப்படியும், உரிய பிற செலவுகளும் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

களஞ்சியப் பணியை நன்கு புரிந்துகொண்டு விரைவுபடுத்தும் நோக்கத்துடன் ஒரிய மொழிக் கலைக்களஞ்சிய ஆசிரியரும் அறிஞருமாகிய திரு கனுங்கோ, மலையாள மொழிக் களஞ்சியப் பதிப் பாசிரியர் திரு பி. பாஸ்கர பணிக்கர், கன்னட மொழி அறிவியல் களஞ்சிய ஆசிரியர் திரு நாராயணராவ், வங்காள மொழிக் களஞ்சிய ஆசிரி யர் திரு பிரத்யும்ன பட்டாச்சாரியா. குஜராத் பல் கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் ரமன்லால் ஜோஷி. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் முதுமுனைவர் வ. அய். சுப்பிரமணியம் அறிவியல் களஞ்சிய முதன்மைப்பதிப்பாசிரியர் திரு பி. எல். சாமி முதலிய வல்லுநர்கள் அடங் கிய கருத்தரங்கு ஒன்று 1983ஆம் ஆண்டு செப் டம்பர்த் திங்களில் சென்னையில் நடத்தப்பட்டது. களஞ்சியம் உருவாக்குவதற்குரிய வழிமுறைகளை விளக்கிப் பயனுள்ள பல செய்திகளை விவாதித்தது. அக்கருத்தரங்கில் முன்களஞ்சியம், பெருங்களஞ்சியம் நுண்களஞ்சியம் என்ற மூவகைக் களஞ்சியங்களை என் சைக்ளோப் பீடியா பிரிட்டானிக்காவைப்போன்றுஉ வாக்குவதில் உள்ள நன்மைகள் விவாதிக்கப்பட்டன. எனினும் தற்போது பின் கூறிய இரண்டு கூறுகள் மட் டும் ஒருங்கே அமைந்த களஞ்சியத்தைத் தயாரிப்பதே நடைமுறைக்கு ஒத்தது என முடிவு செய்யப்பட்டது.

கோட் அறிவியல் களஞ்சியத்தில் அறிவியல் பாடும், இயற்பியல், வேதியியல், வானியல், கணிதம், புள்ளியியல், மக்கள்தொகையியல், நிலவியல், நில வரையியல்,வானிலையியல், கடலியல், பொறியியல் தொழில்நுட்பத் துறைகள், தாவரவியல், வேளாண் மையியல் கானியல், தோட்டக்கலை, சூழலியல், விலங்கியல், உடல் இயங்கியல், உயிர்வேதியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், சித்த மருத் துவம், ஆகிய இயற்கை அறிவியல் சார்ந்த அறிவுத் துறைகளும் உள்ளடங்குகின்றன. நிலக்கோளம் பற்றிய அறிவுப் பரப்பில் மானிட நிலவரையியல், உளவியல் ஆகியன அறிவியல் களஞ் சியத்தில் அடங்கா. அப்பகுதி வாழ்வியல் களஞ்சியத் தில் விவரிக்கப்படும். மேற்கூறிய துறைகள் தவிர்த்த பிற வாழ்வியல், சமுகவியல் சார்ந்த அறிவுத் துறை கள் அனைத்தும் வாழ்வியல் களஞ்சியத்தில் அடங்கும் களஞ்சிய ஆக்கம். களஞ்சிய ஆக்கத்தில் ஆதா ரச் சான்றுடைமை, செறிவுடைமை, தெளிவுடைமை எளிதாக புரியும் தன்மை, செய்திகளின் துல்லியத் தன்மை, அனைத்துலகப் பொது நோக்கு ஆகிய களஞ்சியத்துக்கே உரிய பண்புகளுக்கு ஆழ்ந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பதிப்புக்கொள்கை. களஞ்சியப் பதிப்பில் பின் வரும் கொள்கைகள் பின்பற்றப்பட்டுள்ளன. அ. கட்டுரைகள் எளிதாகப் புரிய வேண்டும் . 1. கட்டுரை, அறிவு தேடும் ஆர்வம் கொண்ட பயிற்சியற்ற பொதுக் கல்விமட்டுமே பெற்ற ஒருவர் எளிதாகப் புரிந்து கொள்ளும் தெளிந்த நடையில் அமையவேண்டும். கூட 2.படிப்பவருக்கு கட்டுரை அமையும் துறையில் சிறப்பு அறிவு இல்லாமலிருந்தாலும் அடிப்படையில் அதில் உள்ள விளக்கங்கள் எளிதில் புரிய வேண்டும். 3. அறிவுப் பரப்பை முழுமையாக்க சேர்க்கப் படும் உயர்நிலைக் கணித அறிவியல், தொழில் நுட்பக் கருத்துக்கள் அடங்கிய கட்டு ரைகளும் ஓரளவாவது பொது வாசகர்கட் குப் புரிதல் வேண்டும். மேலும் இத்தகைய கட்டுரைகள் மிகச் சிலவாகவே அமைய வேண்டும். 4.உரிய தலைப்பில் மேலும் விரிவான செய்தி களைப் பெறத்தக்க நூல்கள் அடங்கிய நூலோதியை ஒவ்வொரு கட்டுரையிலும் தர வேண்டும். இந்நூலோதியில் உள்ள நூல்கள் எளிதில் கிடைப்பனவாகவும், கட்டுரையில் விவரிக்கப்படும் செய்திகளின் ஆதாரச் சான் றாகவும், மேலும் கூடுதல் விளக்கமும், ஆழ மும் பெற ஏற்றனவாகவும் அமைய வேண்டும். 5. கட்டுரைகள் எளிமையாகப் புரிதற்குரிய பட விளக்கங்களை ஆங்காங்கே தரவேண்டும் ஆ. கட்டுரைகள் முரணற்ற ஒருங்கிணைந்த தொய் வற்ற கட்டமைப்பைப் பெற்றிருக்க வேண்டும். 1. குறிப்பிட்ட அறிவுப் பரப்பின் முழுமைக்கும்,