பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோமிள்‌ அறிகுறிகள்‌

அச்சமே நோயின்‌ முக்கிய அறிகுறி. இவவச்சத்தால்‌ யயம்‌-பதற்றம்‌ தோன்றுகிறது. இது மிதமாகவோ அல்லது மிகுந்தோ காணப்படும்‌, நெஞ்சு படபடப்பு, அதிக வியர்வை, தலைசுற்றல்‌, மயக்கம்‌, கடல்‌ ,களர்ச்ி, குமட்டல்‌, கை கால்களில்‌ நடுக்கம்‌ மூதலியன அச்ச நோயில்‌ அடிக்கடி காணப்படும்‌ அறிகுறிகளாகும்‌. இலருக்குப்‌ பெருமூச்சும்‌, மூச்சுத்‌ இணறலும்‌ ஏற்படும்‌. இலர்‌ மயங்கிக்‌ கழே விழுந்துவிடுவர்‌, இதனால்‌ பிணி யாளர்‌ எக்காரியத்திலும்‌ ஈடுபட முடியாமல்‌ தவிப்ப துண்டு. எனவேதான்‌ இத்துன்பங்களிலிருந்து விடு படச்‌ இலை குறிப்பிட்ட சூழ்நிலைகள்‌, உயிரினங்கள்‌ BAUM DOGS SI ஒதுங்க முயல்கிறார்கள்‌.

அச்ச நோய்‌ வகைகள்‌

அச்சப்படும்‌ பொருளைப்‌ பொறுத்து இந்நோய்‌ பல வகைகளாகப்‌ பிரிக்கப்படும்‌. உயரமான இடங்களைப்‌ பற்றிய பயம்‌ (Acrophobia), திறந்த வெளியில்‌ பயம்‌ (Agoraphobia), மின்னல்‌, இடிக்குப்‌ பயம்‌, (Astra- phobia), மூடியஅறைகளிலும்‌ , மின்சாரலிஃப்ட்களிலும்‌. இருத்தல்‌ பற்றிய பயம்‌ (Claustrophobia), தண்ணீர்ப்‌ பயம்‌ (Hydrophobia), நோய்ப்‌ பயம்‌ (Pathophobia) வெளிச்சத்தில்‌ பயம்‌ (Photophobia), புதிய மனிதர்‌ களைப்‌ பார்ப்பதில்‌ பயம்‌ (Zenophobia), விலங்கு பயம்‌ (Zoophobia), கூட்டத்திற்குப்‌ பயம்‌ (Ochlo~ phobia) எனப்‌ பல வகை அச்ச நோய்கள்‌ உள்ளன... இப்பல்வேறு வகை அச்ச நோய்களில்‌ மிகவும்‌ பரவ: லானது Hoss வெளிப்பயம்‌. அடுத்து நோய்ப்‌ பயமும்‌, மிருக பயமும்‌ ஆகும்‌. குழந்தைப்‌ பருவத்தில்‌ மனம்‌ புண்படும்படியான ஒரு Roy நிகழ்ச்சகூட ஆழ்மனத்தில்‌ புதைந்து பின்னாளில்‌ அச்ச நோயாக உருவெடுக்கும்‌.

அச்சம்‌ தோன்றத்‌ தூண்டுதலாக இருக்கும்‌ பொருள்‌ களும்‌, சூழ்நிலைகளும்‌ வேறுபட்டாலும்‌ கூட, அறி குறிகளைப்‌ பொறுத்தவரை எல்லாம்‌ ஒரே மாதிரி யாசுவே இருக்கும்‌. ஆனால்‌ மிதமான அச்சத்தி லிருந்து பயந்து நடுநடுங்கி, மயங்கிக்‌ 8ழே விழுவது. வரை அறிகுறிகளின்‌ தீவிரம்‌ வேறுபடலாம்‌.

சிகிச்சை முறைகளும்‌ தடுப்பும்‌

மனத்‌ இல்தோன்றும்‌ அளவிட முடியாக அச்சத்தைப்‌ போக்க,. முதலில்‌ அதற்கான மாத்திரைகளை உட்‌ கொள்ள வேண்டும்‌. பயம்‌, பதற்றம்‌ அதனால்‌ தோன்‌ றும்‌ மனத்தளர்ச்சி (Depression) முதலியவற்றை நீக்க, அதற்குத்‌ தகுந்த பயம்‌-பதற்றம்‌ போக்கும்‌ மருந்து களையும்‌ CAnxiolytic drugs), மனத்தளர்ச்சி நீக்கும்‌ மருந்துகளையும்‌ (Anti depressant drugs) உட்கொள்ள வேண்டும்‌. அத்தோடு மட்டுமன்றி அக்குறிப்பிட்ட அச்சநோய்‌ தோன்ற அடிப்படைக்‌ காரணம்‌ எதுவென்‌. பதை மனநல மருத்துவர்‌ மூலம்‌ கண்டறிந்து அவற்றைக்‌.

களைய முயலவேண்டும்‌. அப்போதுதான்‌ நோய்‌

- அணுகுமுறையைப்‌

அச்ச நோய்‌ 94

மூழுதும்‌ நீங்கும்‌. தோய்க்‌ காரணம்‌ கண்டறியவும்‌, அதை முழுக்கக்‌ குணப்படுத்தவும்‌ தற்போது பல்வேறு மருந்து முறைகள்‌ பயன்படுகின்றன. அவற்றில்‌ தளர்ச்சி மருத்துவம்‌ (Relaxation therapy), மனவசிய மருத்துவம்‌ (Hypno-therapy), நடத்தை மாற்று மருத்துவம்‌ (Behaviour modification), மனவழி மருத்‌ துவம்‌ (Psycho - therapy) போன்றவை குறிப்பிடத்‌ தக்கவை. இவற்றிலும்‌ மு;ழுப்ப வனை நிலையாக அளிப்பது நடத்தை மாற்று மருத்துவமே. அறிஞர்‌ பாவ்லோவின்‌ அடிப்படைக்‌ கொள்கையை அடிப்படை யாகக்‌ கொண்டு உருவாக்கப்பட்டது நடத்தை மாற்று மருத்துவமாகும்‌.

இச்சி௫ச்சையில்‌ பல்வேறு நிலைகள்‌ உருவாக்கப்படு: இன்றன. பின்‌ ஒவ்வொரு நிலையிலும்‌ ஒழுங்கு முழை யாகத்‌ இட்டமிட்டபடி, தக்க சூழ்நிலைகளை அமைத்து அதில்‌ பிணியாளரை ஆட்படுத்துகிறார்கள்‌ . ஒவ்வொரு கட்டத்திலும்‌ பிணியாளர்‌ முறைப்படி ஆட்படுத்தப்படும்போது அவரது அச்சத்தின்‌ தீவிரம்‌ குறைந்து ஆரம்பிக்கிறது. கடைசிக்‌ கட்டத்‌ இல்‌ அவரது அச்சம்‌ அறவே போய்விடுகிறது. பூனையைப்‌ பற்றிப்‌ பேசினாலோ, பூனைவயைத்‌ தொலைவில்‌ பார்த்தாலோ நெஞ்சு படபடத்து, வியர்த்து விறு விறுத்துப்‌ பயந்து நடுங்கு பிணியாளர்கடை௰க்கட்டத்‌ இல்‌ பூனையைத்‌ தொட்டுப்‌ பின்‌ தூக்க மடியில்‌ வைத்‌ துக்‌ கொள்ளுமளவுக்கு முற்றிலும்‌ குணமாஇிவிடுவார்‌. இது போலவே திறந்த வெளிக்கும்‌, மக்கள்‌ கூட்டத்‌ திற்கும்‌ பயந்த பிணியாளர்‌ இவ்வாறு இட்டமிட்டுப்‌ பல்வேறு நிலைகளில்‌ கொடுக்கப்படும்‌ நடத்தை மாற்று மருத்துவத்தால்‌ முழுமையாகக்‌ குணம்‌ பெறு, கிறார்‌.

௮ச்ச நோய்‌ வராமலேயே தடுக்கவேண்டுமானால்‌ குழந்தைப்‌ பருவத்திலேயே பெற்றோர்கள்‌, தங்கள்‌ குழந்தையை மிகவும்‌ அன்போடும்‌, ஆதரவோடும்‌ வளர்க்க வேண்டும்‌. அவர்களது மனத்திலேயே எந்த விதமான ஏக்க உணர்வோ அதன்‌ விளைவால்‌ தோன்‌ றும்‌ பகைமை உணர்வோ தோன்றாதவண்ணம்‌ பார்த்துக்‌ கொள்ளவேண்டும்‌. குழந்தைகளின்‌ உள்ளத்‌ இல்‌ தோன்றும்‌ தேவைகளை அன்போடும்‌ பரிவோடும்‌. கேட்டு, அவற்றை நிறைவேற்ற வேண்டும்‌. இத்தகைய பெற்றோர்‌. கடைப்பிடித்தால்‌ குழந்தையின்‌ பிற்கால வாழ்க்கையில்‌ அச்ச நோய்‌ மட்டு மன்றி, இது போன்ற வேறு எந்த நோயும்‌ வராது. ip. gg.

நூலோதி

1) Kaplan (Harold 1) Stat? Comprehensive Text Books. Psychiatry Hf 3rd Edition;

Williams & Wilkios Baltimore, 1980.