பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமன்பாடுகள்‌ ஆகியவற்றின்‌ துணையோடு இத்‌ தொகுதி வெளிவருகின்றது. இதுதான்‌ அறிவியலுக்‌ கெனத்‌ தமிழில்‌ தனியாக வெளியிடப்படும்‌ முதல்‌ களஞ்சியம்‌. தமிழ்‌ வளர்ச்சிக்‌ கழகம்‌ வெளியிட்ட கலைக்‌ களஞ்சியத்தினின்றும்‌ இத்‌ தமிழ்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌ வெளியிட்ட களஞ்சியங்கள்‌ பல வகையிலும்‌ வேறுபடுகின்றன, தஞ்சைத்‌ குமிழ்ப்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ சார்பில்தான்‌ இவ்வாறு முதன்‌ முதலாக

அறிவியலுக்கெளத்‌ தனிக்‌ களஞ்சியமும்‌ வாழ்‌ வியலுக்கென தனிக்‌ களஞ்சியமும்‌ வெளியிடப்‌ படுகின்றன,

நன்றி: தமிழக முதல்வர்‌ மாண்புமிகு முனைவர்‌ எம்‌, ஜி, இராமச்சந்திரனார்‌ தஞ்சையில்‌ தமிழ்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌ தோன்றுவதற்கு முதற்காரணமாக இருந்ததோடு, களஞ்சியத்தை தெறிப்படுத்தும்‌ குழுவின்‌ காப்பாளராகவும்‌ இருத்து வருகிறார்‌. இப்பல்கலைக்‌ கழக இணைவேத்தரும்‌ தமிழகக்‌ கல்வி அமைச்சருமாகிய மாண்புமிகு செ. , அரங்கநாயகம்‌ அவர்களும்‌ இக்குழுவின்‌ தலைவராசு இருந்து பல வழிகளில்‌ ஊக்கம்‌ அளித்து வருகிறார்‌. இவ்விருவருக்‌ கும்‌ முதற்கண்‌ நமது நன்றி உரித்தாகிறது. தமிழ்ப்‌ பல்கலைக்‌ கழகத்‌ துணைவேந்தர்‌ :முதுமுனைவா வ.அய்‌. சுப்பிரமணியம்‌, எம்‌.ஏ.,பிஎச்‌.டி.,டி.,லிட்‌,. அவர்கள்‌ பல்வேறு வகையிலும்‌ களஞ்சியப்‌ பணி சிறப்பாகக்‌ அமைய ஊக்கமூட்டி வருகின்றனர்‌. இவருக்கு நம்‌ நன்றி உரியது. வல்லுநர்‌ குழுவினர்‌ கட்டுரைகளைச்‌ சீரிய முறையில்‌ செம்மைப்படுத்திக்‌ சுளஞ்சியம்‌ செம்மையான முறையில்‌ உருவாவதற்கு உதவி புரிந்து வந்துள்ளனர்‌. பல்கலைக்‌ கழக மைய அலுவலகத்தில்‌ உள்ள பணியாளர்கள்‌ பலரும்‌ இப்‌ பணியில்‌ பெருந்துணையாய்‌ இருந்து வருகிறார்கள்‌

கட்டுரை எழுதியனுப்பிய பிற நிறுவனத்‌ துறை அறிஞர்‌ பலருக்கும்‌ எமது ஆழ்ந்த நன்றி உரியது. பொருள்சுட்டும்‌ கலைச்சொல்‌ அகரவரிசையும்‌ கணிப்பொறியில்‌ உருவாக்கித்‌ தந்த சணிப்பொறித்‌ துறையினருக்கு எமது நன்றி உரியது,

முதல்‌ தொகுதியில்‌ உள்ள பல கட்டுரைகளுக்‌ சான படங்களும்‌, குறிப்புகளும்‌ பல்வேறு நூல்‌ களினின்றும்‌, கலைக்‌ களஞ்சியங்களினிறும்‌ எடுத்‌ காளப்பட்டுள்ளன, அவற்றை வெளியிட அனுமதி வழங்கியமைக்காக அவற்றின்‌ வெளியீட்பாளர்‌ களுக்கு நன்றி உரியது, இவ்வெளியிட்டாளர்களின்‌ பெயர்களும்‌ நூல்களின்‌ பெயர்களும்‌ அடங்கிய நன்றி அறிவிப்புப்‌ பட்டியல்‌ ஒன்றும்‌ தரப்பட்டுள்ளது.

மேலும்‌ முத்தைய, தற்போதைய உறுப்பினர்கள்‌, அலுவலகக்‌

பதப்புக்குழு கண்காணிப்பாளர்‌, நூலகர்‌, கட்டுரைகளை நல்ல முறையில்‌ தட்டச்சுக்‌ செய்து உதவுகின்ற தட்டச்சுக்‌ குழுவினர்‌, அடிப்‌ படைப்‌ பணியாளர்கள்‌ அனைவருக்கும்‌ எமது நன்றி, மற்றும்‌ களஞ்சியத்தை அச்சுக்‌ கோத்து உதவிய மீரா அச்சக உரிமையாளருக்கும்‌ ஒளிப்படம்‌ எடுத்துகவிய கணிப்பொறித்‌ துறையைச்‌ சார்ந்த ஓலி, ஒளிப்பிரிவு அழியர்களுக்கும்‌, பதிப்புத்துறை துணை இயக்கு தருக்கும்‌ ௮ச்சுத்‌ தொழிலாளர்களுக்கும்‌, படங்களை நன்முறையில்‌ வரைந்து தந்த ஒவியர்‌, இரு, தே. நெடுஞ்செழியனுக்கும்‌ மேலும்‌ எமக்குநேரடியாகவும்‌, மறைமுகமாகவும்‌ உகவிய பலருக்கும்‌ எம்‌ நன்றி,

பி.ஏல்‌.சாமி

முதன்மைப்பதப்பரசிரியர்‌

தஞ்சாவூர்‌ 20.6.85