கருவுற்ற முட்டையிலிருந்து தலைப்பிரட்டை போன்ற இளம் உயிர் வெளிவருகிறது, இதற்கு மூட்டை வடிவமான உடற்பகுஇயும் நீண்ட வாலும் உண்டு. இதன் முதுகுத் தண்டு வால்புறத்தே அமைந் துள்ளது. நீந்தி வாழும் இளம் உரிரிப் பருவங்களில் மட்டுமே தொண்டையிலுள்ள செவுள்கள், முதுகுப் பக்கக் குழலுள்ள நரம்புகள், வால் பகுஇயிலுள்ள முதுகுத் தண்டு ஆகிய உறுப்புகளினால் முதுகுத் தண்டு டைய உயிர்களை ஓத்துள்ளது. இது படிப்படியாக உருமாற்றமடைந்து முதிர் நிலையை அடையும் போது (இவற்றையெல்லாம் இழத்து விடுகிறது.
இத்தொகுப்பில் மூன்று குடும்பங்கள் உள்ளன. அவை அிடேசியே, தாலியேசியா, லார்வேசியா என் பனவாகும். இவற்றில் அ௫ிடியன்கள் மட்டும் ஒரிடத்தே ஒட்டி வாழும்; மற்றவை கடல் பரப்பில் வாழ்பவை,
அசிடேசியா. சற்றேறக்குறைய 8000-க்கு மேலான இனங்கள் இத்தக் குடும்பத்தைச் சார்ந்தவையாகும். ஓரிடத்தே ஒட்டி வாழும் இயல்புடைய வாழ்க்கை மூறையில் வேறுபாடு இருந்தபோதினும், இவ்வுயிரி களின் தகவமைப்புகள் மாறாது காணப்படுகின் றன.
தாலியேசியா. நாற்றுக்கு மேலான உயிரிகளைக் கொண்ட இந்தப் பிரிவில் அடங்கியுள்ள உயிரிகள் சுதந்திரமாகக் கடலின் மேற்பரப்பில் நீந்தி வாழ்சின் றன. இவற்றின் மேற்பார்வை தெளிவானதும், முழுமை யானதும், முடிவுபெறாத தசையினால் சூழப்பட்டுள்ள துமாக அமைந்துள்ளது. இந்தக் தசைகள் சுருங்கும் பொழுது உயிரியின் உடல் அழுத்தப்பட்டுத் தண்ணீர் பீச்சி அடித்து முன்பக்கமாக உயிரிகள் செல்கின்றன. இவற்றின் வாழ்க்கைச் சுழற்சியில் இரு உரு அமைப்பு காணப்படுகிறது. பால்வேறுபாடற்த முறையிலும், பால் வேறுபாடு சார்ந்த முறையிலும் இனப்பெருக்கம் மாறி மாறி வருகிறது. இளம் உ&யிரிக்கு வாலூண்டு. இந்த வகுப்பில் முக்கிய உயிரிதான் பைரோஸோமா (படம் 2)
பைரோலோமா என்ற ௨யிரி கடற்பரப்பில் சுதந்திர மாக நீந்தி வாழும் கூட்டுயிரி. பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல்களில் வெப்பப் பகுதிகளில் காணப்படுகிறது."' இது உயிரோொனி வெளிப்படுத்தும் ஆற்றலுடையது. இந்தக் கூட்டுயிரி குழல் வடிவானது. நீளவாட்டில் தண்ணீரில் மிதக்கும், இது 3.5 செ.மீ. லிருந்து 780 செ.மீ. நீளமுடையது. இதனை வழவழப் பான மேற்போர்வை மூடியிருக்கும். அதினின்று பலபற வளர்ச்சி உறுப்புகள் காணப்படும், உருளை வடிவமான சுவரின் பகுஇயிலிருந்து பல கூட்டுயிரிகளின் உறுப்புயிரி கள் தோன்றிக் காணப்படும். இதன் தகவமைப்பு அசி டியனைப் போலவே இருக்கும், கூட்டுயிரிலிருந்து தண்டு வோர் போல் வளரும் புற வளர்ச்சியிலிருந்து 4 உயிரி உறுப்புகள் தோன்றுகின்றன. பிறகு இவற்றிலிருந்து பல உயிரி உறுப்புகள் தோன்றி ஒரு கூட்டுயிரி உண்டா இறது. ்
அசிபென்சரிஃபாம்ஸ் 145
லார்வேசியா, 75 இனங்கள் இக்குடும்பத்தில் காணப் படுகின்றன. இவையும் கடலில் மிதந்து வாழ்வன. இவை சிறிய உடலமைப்பைக் கொண்டவை. முதிர் நிலையில் இடப்பெயர்ச்சிக்கு உதவ நீண்ட வாலும் இதற்கு உண்டு. இதில் இளமை மாறா நிலை என்ற பருவமும் காணப்படுகிறது. சா. கா.
நூலோதி
1. Sedgwick,A; A Students Text Book ofZcology. Central Book Depot, Allahabad, 1905.
2. Barnes, R.D. favertebrate Zoology, W.B. Saunders & மே. 1974.
அசிபென்சரி பாம்ஸ்
அசிபென்சரிஃபாம்ஸ் (Acipenseriformes) BDargG யைச் சேர்ந்த மீன்கள் தம் சிறப்பியல்புகளால் மீனி யல் அறிஞர்களைக் கவர்ந்துள்ளன. இம்மீன்க௧கள் சல பண்புகளில் குருத்தெலும்பு மீன்களையும் மற்றைய பண்புகளில் எலும்பு மீன்களையும் ஒத்திருப்பதால் பரி ணாமத்தில் ஒர் இடைப்பட்ட. நிலையைக் காட்டுகின் றன. இவற்றின் முதுகெலும்புகள் முழுமையற்று இருக் இன்றன. முதுகு நாண் நீடித்திருக்கிறது. .வலிவுக் கூட்டில் எலும்புப் பகுதி குறைந்தும், குருத்தெலும்பு அதிகமாகவும் காணப்படுகின்றன. எலுர்பாலான செதில்கள் உடல் முழுவதும் பரவியில்லாமல் ஒரு சில இடங்களில் மட்டுமே இருக்கின் றன, மேல் நீண்ட வால் துடுப்புடன் கூடிய இம்மீன்களின் உணவுக் குழாயில் சுறாக்களில் உள்ளதைப் போல் ஒருவழிச் சுருள் தடுப்பிதழ் ஒன்று அமைந்திருக்கிறது. இவற்றின் துடுப்புகள் அடிப்பகுதியில் ருருத்தெலும்புத் துண்டு களைச் சூழ்ந்துள்ள துடுப்புத் தசைகளினால் சுறாவின் துடுப்புகளை ஒத்தும், மேற்பகுதியில் எலும்பு ஆரை களால் வலுப்படுத்தப்பட்டு எலும்பு மீன்களின் துடுப்) களைப் போன்றும் அமைந்திருக்கின்றன. அசிபென்சரி ஃபாம்கள் பல மறைந்துபட்ட குடும்பங்களையும், அ௮பென்சரிடே, பாலியோடான்டபிடே என்ற இரு வாழும் குடும்பங்களையும் தம்மகத்தே கொண்டிருக் கின்றன.
1. அசிபென்சசிடே குடும்பம் - ஸ்டர்ஜன்கள் (8(பாஜ0௦$) . ஸ்டர்ஜனின் முன் துளைப்பகுதி நீண்டும், காடைகள் பற்களற்றும் இருக்கின்றன. தலையின் அடிப்புறமுள்ள சிறு வாய்க்கு முன்னால் நான்கு குட்டையான உணர் இழைகள் நீட்டிக் கொண்டுள்ளன. ஐம்பதுக்கும் குறைவான செவுள் கர்கள் இருக்கின் OF. (PME கூடிய எலும்புக் துண்டுகளைப் ப்போன்ற செதில்கள் இம்மீனின் உடலில் ஐந்து வரிசை களில் அமைந்திருக்கின்றன. பொதுவாக, மிக மெல்ல நகரும் இயல்புடைய இம்மீன் நீர் நிலைகளின் அடித் தளத்தருகே வாழ்கின்றது. அடித்தளத்தின் மேல்