பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

770 அசையும்‌ மூட்டுகள்‌

சுற்தோட்டத்தின்‌ மூலம்‌ உடலுறுப்புகளுக்கு அனுப்பட்படுகிறது. அசை போடுவனவற்றின்‌ கால்‌ சுளில்‌ இரண்டு விரல்களே நன்கு வளர்ச்சியடைந்‌ துள்ளன. ஏனைய விரல்கள்‌ வளர்ச்சி குன்றிக்காணப்‌ படுகின்றன. அசை போடும்‌ விலங்குகளின்‌ கொம்புகள்‌ பாதுகாப்பிற்காகவும்‌ பெண்‌ விலங்குகளைக்‌ கவரவும்‌ பயன்படுகின்றன. இப்பிரிவில்‌ உள்ள ௮ னத்து விலங்குகளும்‌ தாவரவுண்ணிகளே (௨002),

ஆடுகள்‌, மாடுகள்‌, மான்கள்‌, காட்டெருமைகள்‌, குதிரைகள்‌, ஒட்டைச்‌ சிவிங்ககள்‌ ஆகிய அசைபோடும்‌ விலங்குகள்‌ இந்தியாவில்‌ காணப்படுகின்றன.

காண்க: இரட்டைக்‌ குளம்பிகள்‌

A Gop

நூலோதி

1. இ.மூபதி: தென்னிந்தியப்‌ பாலூட்டிகள்‌”... oo தமிழ்‌ நாட்டுப்‌ பாடநூல்‌ நிறுவனம்‌ சென்னை- 1973

2. Ekambaranatha Ayyar, 'M’ Manuai of Zoctogy. ptt, S. Viswanathan PYT.. LTD.,

Madras. 1976. 3. Jordan E.L. Chordate Zoology

4. Young J.Z. The Life of Vertebrates 5. World book 16:480 6, Encyclopaedia Americana, 23:867

அசையும்‌ மூட்டுகள்‌

உயிர்‌ இயக்கத்திற்கு இன்றியமையாதது அசைவு. (Mobility is life). நம்‌ உடம்பிற்கு உருவத்தையும்‌, அமைப்பையும்‌, உறுதியையும்‌ தருவன எலும்புகளே. நம்‌ உடம்பிலுள்ள 816 எலும்புகள்‌ பல்வேறு உருவங்‌ களில்‌ இருக்கின்றன. இந்த எலும்புகள்‌ ஒன்றோ டொன்று சேரும்‌ இடங்கள்‌ மூட்டுகள்‌ எனப்படும்‌. பல்வேறு வகையான மூட்டுகளால்‌ எலும்புகள்‌ பிணைக்‌ கப்பட்டிருப்பதால்தான்‌ நாம்‌ நடக்க, அமர, பல குரப்பட்ட வேலைகளைச்‌ செய்ய முடிகிறது. மூட்டு கள்‌ மட்டும்‌ இல்லாமல்‌ எலும்புக்கூடு முழுதும்‌ ஒரே எலும்பாக இருந்திருந்தால்‌ மனிதன்‌ நடக்க முடியாமல்‌ உணவு உட்கொள்ள மூடியாமல்‌ வேலை எதுவும்‌ செய்ய முடியாமல்‌ அசைவற்ற ஒரு பொருளாக, உயிர்‌ வாழவே முடியாத நிலைக்கு ஆளாகி விடுவான்‌. ஆகவே இயக்கத்திற்கு மூட்டுகள்‌ மிகவும்‌ இன்றியமை யாதவை. மூட்டுதல்‌ என்ற வினைச்சொல்லுக்குச்‌ சோர்த்தல்‌, இணைத்தல்‌ என்று பொருள்‌. சேர்க்கின்‌ 0 அல்லது இணைகின்ற இடத்திற்கு 'மூட்டு! என்பது பெயர்ச்‌ சொல்லாகி வந்துள்ளது.

நம்‌ உடம்பிலுள்ள மூட்டுகளை அசையும்‌ மூட்டுகள்‌, அசையா மூட்டுகள்‌ என இரண்டு பெரும்‌ பிரிவுகளாகப்‌ பீரிக்கலாம்‌. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட எலும்புகள்‌ கூடுகின்ற இடமாகிய மூட்டில்‌, அசைவு இருந்தால்‌ அவை அசையும்‌ மூட்டுகளாகும்‌. எடுத்துக்‌ காட்டு : முழங்கால்‌, முழங்கை, தோள்‌, விரல்கள்‌, மூதுகு மூட்டுகள்‌, அப்படி அல்லாமல்‌ அத்த மூட்டுகளில்‌ அசைவு இல்லாமல்‌ எலும்புகள்‌ பிணைக்கப்பட்டிருந்‌ கால்‌ அவை அசையா மூட்டுகளாகும்‌.

எடுத்துக்காட்டு: இடுப்பெலும்புகள்‌ .

தலையெலும்புகள்‌, மண்டை,

மூட்டின்‌ அமைப்பும்‌ பயனும்‌

அசையும்‌ மூட்டுகள்‌ உடலின்‌ வெவ்வேறு பகுஇகளில்‌ வெவ்வேறு பயனுக்காக, வெவ்வேறு அமைப்புகளைப்‌ பெற்றிருந்த போதிலும்‌, அவற்றிற்குப்‌ பொதுவான இல அமைப்பு ஒற்றுமைகள்‌ உண்டு,

௮. மூட்டினைச்‌ உள்ளது.

சுற்றி “மூட்டு உறை! (மேல!)

ஆ. மூட்டு உறைக்குள்‌ Membrane) 2erargy.

மூட்டுச்சவ்வு (Synovial

இ. எலும்பின்‌ நுனிகள்‌ வழவழப்பான குருத்தெலும்‌ பால்‌ (Articular Cartilage) ஆக்கப்பட்டிருக்‌ இன்றன.

௪. மூட்டுச்‌ சவ்வுக்குள்‌, மூட்டு அறை (Joint cavity) என்னும்‌ ஓர்‌ இடம்‌ உள்ளது.

௨. மூட்டு அறையில்‌ உயவு நெய்‌ ($4/00418ம்‌ 110/1) என்னும்‌ மிக வழவழப்பான நீர்மம்‌ உள்ளது. மூட்டுச்சவ்வு, உயவு நெய்யைச்‌ சுரக்கிறது. இத்‌ நெய்‌ எலும்பின்‌ நுனிகள்‌ உராய்ந்து தேய்ந்து போகாமல்‌. இருப்பதற்குப்‌ பயன்படுவதுடன்‌, மூட்‌ டின்‌ பகுஇகளான, குருத்தெலும்பு, பிறை வடி. வத்‌ 5&6@ (Semilunar Cartilage) போன்றவற்றிற்‌ கும்‌ உணவின்‌ அனட்டச்சத்தினை அளிக்கிறது.

௯௭. மூட்டு விலகாமல்‌ இருப்பதற்காக எலும்பு நுனி களைப்‌ பத்தகங்கள்‌ ((1தகறகாடி) என்ற தார்த்‌ இசுக்கள்‌ சுயிறுபோல்‌ கட்டியிருக்கின்‌ றன. மேலும்‌ மூட்டினைச்‌ சுற்றியுள்ள தசைகளும்‌, தசைநார்‌ களும்‌ மூட்டுக்கு வலுவினைக்‌ கொடுக்கின்றன,

அசையும்‌ மூட்டுகளை, அவற்றில்‌ பங்கு கொள்ளும்‌ எலும்புகளின்‌ எண்ணிக்கையைப்‌ பொறுத்து (1) தனி eype_G@ (Simple Joint), (2) serie api_@ (composite Joint), sow Qrcia பிரிவுகளாகப்‌ பிரிக்கலாம்‌. இரண்டு எலும்புகள்‌ மட்டும்‌ சேர்ந்து உண்டானால்‌ அது தணி மூட்டு. இரண்டிற்கு மேற்பட்ட எலும்புகள்‌ சேர்ந்து மூட்டு உருவானால்‌ அகுற்குக்‌ சுலப்பு மூட்டு எனப்‌ பெயர்‌.