பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறைவான இவனம்‌ கொடுக்கப்படும்‌ போதும்‌, இவனப்‌ பற்றாக்குறைவாலும்‌ அங்குள்ள Ags, இடைக்கும்‌ அமினோ அமிலங்களை முழுமையாகப்‌ பயன்படுத்தி நுண்குருமிகளால்‌ புரதம்‌ தயாரிக்‌ கின்றன. இதனால்‌ காள்நடைகளுக்கு மீண்டும்‌ புரதம்‌ முழுமையாகக்‌ தஇிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால்‌ புரதம்‌ நிறைந்த தவனம்‌ அசைபோடும்‌ விலங்குகளுக்குக்‌ கிடைக்கும்போது நைட்ரஜன்‌ குழிவு அதிகமாக ஏற்‌ பட்டு விலங்குகளுக்குத்‌ தேவையான அமினோ அமிலங்கள்‌ இடைக்கும்‌ வாய்ப்பு குறைந்து விடுகிறது.

புரதமில்லாத நைட்ரஜன்‌ கூட்டுப்பொருள்களைப்‌ பயன்‌ படுத்துதல்‌ (Utilisation of Non-Protein Nitrogenous Compounds)

அசையோடும்‌ விலங்குகள்‌ புர,.தமில்லாத நைட்ரஜன்‌ கூட்டுப்‌ பொருள்களையும்‌ யூரியா (Urea), பையூரட்‌ (Biuret) போன்றவற்றையும்‌ பயன்படுத்தும்‌ திறன்‌ கொண்டவை, இதனால்‌ உடலில்‌ மொத்தம்‌ சேகரிக்கக்‌ கூடிய புரத அளவில்‌ 30 முதல்‌ 40 விழுக்காடு தேவையை யூரியா, பையூரட்‌ ஆடியவற்றின்‌ மூலம்‌ பூர்த்தி செய்ய முடியும்‌. எனவே கலப்புத்‌ தீவனத்தில்‌ யூரியாவை ஒரு விழுக்காடு அளவு சேர்த்துக்‌ கொடுக்க லாம்‌. யூரியாவை உணவாசக்‌ கொடுக்கும்போது உண வைச்‌ சுவைக்காக வெல்லப்பாகுடன்‌ கலந்து கொடுப்‌ பது அவ௫யம்‌. கொழுப்புச்‌ சத்து செரிமானம்‌

உணவிலுள்ள கொழுப்புச்‌ சத்து செரிமானமடைந்து கொழுப்பு அமிலங்களாசுவும்‌ (Fatty Acids), இளைச gre (Glycerol) ஆகவும்‌ மாற்றப்படுகின்‌ ஜன; இளை சரால்‌ பின்னர்‌ புரோப்பியானிக்‌ அமிலமாக (81001001 &௦14) மாற்றப்படுகிறது.

உடலுக்குத்‌ தேவையான ஆற்றல்‌ உற்பத்தி

(Energy production)

உணவிலுள்ள மாவுப்பொருள்‌, புரதம்‌, கொழுப்பு ஆகியவை செரிமானம்‌ அடைந்து அதன்‌ மூலம்‌ உடலுக்குத்‌ தேவையான ஆற்றல்‌ &ழேகொடுக்‌ கப்பட்டுள்ளபடி உற்பத்தியாக்கப்படுகிறது,

1, ஒவ்வொரு திராம்‌ மாவுப்பொருளிலிருந்தும்‌ இடைக்கும்‌ ஆற்றல்‌ --4. 1 சுலோரி

8, ஓவ்வொரு கிராம்‌ புரதத்‌இஸிருந்தும்‌ கிடைக்கும்‌ ஆற்றல்‌-4,1 கலோரி

3, ஐவ்வொரு ராம்‌ கொழுப்பிலிருந்தும்‌ கிடைக்கும்‌ ஆற்றல்‌-.-9,3 கலோரி

வெளியாகும்‌ சக்தி

உடலில்‌ உற்பத்தி செய்யப்பட்ட மொத்த ஆற்றலைச்‌ (energy) சாணத்தின்‌ மூலமும்‌, சிறுநீரின்‌ மூலமும்‌ வீணாக்க எரியக்கூடிய வாயுவாக உடலிலிருந்து ஆற்றல

அசைவயிறு செரிமானம்‌. 78)

வீணாகிவிடுகிறது. மீதியுள்ள ஆற்றல்‌ உடல்‌ வளர்ச்‌ சிக்கும்‌, உற்பத்திக்கும்‌ பயன்படுகின்‌ றது,

செரிமானம்‌ செய்த உணவு உறிஞ்சப்படுதல்‌

அசைவயிறு, வலையறை ஆூயவற்றில்‌ செரிமான மடைந்து உணவு ஏட்டறையின்‌ மூலம்‌ உண்மையான இரப்பை (true stomach) எனப்படும்‌ செரிமான அறைக்குச்‌ செல்கிறது. இவ்வாறு உணவுப்‌ பாதையில்‌ மெல்லும்போது அசைவயிறு, வலையறை, ஏட்டறை ஆகியவற்றின்‌ மூலம்‌ ஆவியாகும்‌ தன்மை வாய்த்த கொழுப்பு அமிலங்களும்‌ (47௦121415 fatty acids) அம்‌ மோனியாவும்‌, கரையும்‌ தன்மை வாய்ந்த உணவுப்‌ பொருளும்‌ உறிஞ்சப்படுகன்றன. மீதி உள்ள செரி மானிக்கப்பட்ட உணவு சிறுகுடலுக்கும்‌, பெருங்குடலுக்‌ கும்‌ கொண்டு செல்லப்படுகின்‌ ஐது.

உற்பத்தித்‌ திறனை அதிகரிக்க

உடலைப்‌ பராமரிக்கவும்‌, உற்பத்தித்‌ இறனை அதி சுரிக்கவும்‌ தேதேவையான தீவனம்‌ கொடுத்து வளர்ப்பது அவசியம்‌. தீவனப்‌ பற்றாக்குறை ஏற்பட்டால்‌ தவை யான ஆற்றல்‌ உடலிலிருந்தே எடுத்துக்‌ கொண்டு வாழ நேரிடிம்‌. இதனால்‌ நாளடைவில்‌ உற்பத்தி குறைந்து விடக்‌ கூடும்‌. இந்நிலையைத்‌ தலிர்க்க அசைபோடும்‌ விலங்குகளின்‌ எடை, வளர்ச்சி, உற்பத்தி அளவு, வேலைத்திறன்‌ ஆகியவற்றிற்கேற்பக்‌ சுலப்புத்‌ இவணமும்‌ தீவனப்‌ புல்லும்‌ கொடுத்துப்‌ பராமரிப்பது மிகமிக அவ சியம்‌, கொடுக்கப்படும்‌ தீவனத்தின்‌ எடையைப்‌ பொறுத்து உற்பத்தித்‌ திறன்‌ மாறுபடும்‌. சத்தற்ற வைக்கோலும்‌ குறைவான இவனமும்‌ கொடுப்பதை நிறுத்துவதோடு தரமான புரதம்‌ நிறைந்த தீவனப்‌ பயிர்‌ ஆகியவற்றின்‌ கலப்புத்‌ இவனம்‌ அன்றாடம்‌ கொடுக்க. வேண்டியது அவசியம்‌.

கொடுக்கப்படும்‌ கலப்புத்‌ இவனம்‌ சுவையுள்சளதாக வும்‌ ஒரே வகையாகவும்‌ இல்லாமல்‌ பலவகையாகவும்‌, நுண்‌ ஊட்டச்‌ சத்துக்கள்‌ நிறைந்ததாகவும்‌ அமைவது அவசியம்‌. ௮அளசைவயிற்றில்‌ ஏற்படும்‌ செரிமானம்‌ சாதகமான அளவில்‌ நடைபெறவும்‌, தேவையான ஆற்றல்‌ உடலுக்குக்‌ கிடைக்கவும்‌ மேலே குறிப்பிட்ட வகையில்‌ உணவு முறை அமைந்தால்‌ தான்‌ உற்பத்தித்‌ திறன்‌ அதிகரிக்க வழி ஏற்படும்‌,

நூலோதி

1. §. K. Ranjhan, Animal Nutrition and Feeding Practices in india. Vikas Publishing House. Pvt Ltd-, New Delhi,

2. WH.H. Dukes. The Physiclogy of Domestic Animals, Bailliere Tondall and Co., London.