பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்ச்‌ சுழற்சி நடைபெறுவதால்‌, ஆக்ஸிஜன்‌ ராகக்‌ கடத்தப்படுகிறது.

.... தீர்‌, காற்று ஆ௫ுயவற்றின்‌ அழுத்தம்‌ ஊடகத்தின்‌ ,தன்மையைப்‌ பொறுத்தே அமைகிறது. காற்று மண்ட லத்தில்‌ மேலே போகப்‌ போசு அழுத்தத்தின்‌ அளவு குறைவதும்‌, நீரின்‌ அடியிலே தொடர்ந்து அதிகரிப்பதும்‌ தாம்‌ அறிந்ததே. கடல்‌ மட்டத்‌ இளிருந்து நிலப்பரப்பில்‌ ஒவ்வோர்‌ 440மீ. உயரத்திற்கும்‌ 25 மில்லிமீட்டர்‌ பாத Te அளவில்‌ (14800௫ 101) அழுத்தம்‌ குறைகிறது. நீர்‌ நிலையின்‌ ஆழத்தில்‌ ஒவ்வொரு 10 மீட்டக்கும்‌. 760 மில்லி மீட்டர்‌ பாதரச அளவில்‌ அழுத்தம்‌ அதிகரிக்கிறது. ஆசுவே இரு பெரும்‌ சூழ்நிலை அமைப்‌ புகளில்‌ அழுத்தத்தின்‌ காரணத்தால்‌ செங்குத்தான அடுக்குமுறை அமைவதைக்‌ காண்கிறோம்‌.

நீர்நிலைகளில்‌ ஒளி அடுக்கமைவு (Stratification based on light penetration)

இதைத்‌ தவிர, ஒளியின்‌ அளவிலும்‌ நீர்‌ நிலைகளில்‌ அடுக்கு முறையைக்‌ காண இயலும்‌, மேற்பரப்‌ பில்‌ இருந்து ஒளி நீர்‌ நிலைகளின்‌ வழியே களடருவும்‌ போது பெருமளவில்‌ மாற்றம்‌ அடைகிறது. நீர்‌ நிலை யின்‌ பல்வேறு அடுக்குகளில்‌ உயிரினங்களும்‌ உயிரற்ற பொருள்களும்‌ ஒளியின்‌ நிறக்கதார்களை உட்கவர்வதால்‌ ஒளி பெரும்‌ அளவில்‌ சிதறிப்‌ பல அடுக்குகளில்‌ அளவில்‌ மாறுதலை அடைகிறது. ஒளியின்‌ அளவு தொடர்ச்சி யாக மாறுபட்டு அடுக்கமைவு முறை உண்டாகிறது. நீரின்‌ வழியே ஊடுருவும்‌ போது ஒளி பெருமளவில்‌ சேதம்‌ அடைவதால்‌, கீழ்ப்‌ பகுதிகளில்‌ அது மிகக்‌ குறைந்த அளவிலேயே காணப்படும்‌. மேற்‌ பரப்பி லிருந்து ஒரு மீட்டர்‌ ஆழத்திற்குள்‌ கிட்டத்தட்ட மூன்றில்‌ ஒரு பகுதி தறி விடுகிறது. அடுத்த ஐந்து மீட்டர்‌ ஆழத்தில்‌ நான்கில்‌ மூன்று பகுதி சிதறி விடுகிறது. இவ்வாறு நீர்ப்பரப்பிலிருந்து கிடைக்கப்‌ பெறும்‌ ஒளியில்‌ பத்தில்‌ ஒரு பகுதி மட்டுமே பத்து மீட்டர்‌ ஆழத்திற்குக்‌ 8ழ்‌ கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு, நீர்‌ நிலைகளில்‌ ஒளியின்‌ அளவு படிப்படி யாகக்‌ குறைந்து, செங்குத்து முறையில்‌ அடுக்கமைவு ஏற்படுகிறது.

மேற்பரப்பிலிருந்து 80 மீட்டர்‌ ஆழம்‌ வரை தாவரங்‌ களின்‌ ஒளிச்சேர்க்கை (Photosynthesis) நடைபெறத்‌ தேவையான அளவு ஒளி கிடைப்பதால்‌ இப்பகுஇ ஒளிப்‌ பகுதி (ய 10/6 2006) என அழைக்கப்படுகிறது. இதற்‌ கும்‌ ழே 200 மீட்டர்‌ ஆழம்‌ வரை இடைக்கும்‌ ஒளி ஒளிச்சேர்க்கை நடைபெறத்‌ தேவையான அளவில்‌ இடைப்பதில்லை. ஆகவே இங்கே தாவரங்கள்‌ வளர முடியாது. ஆயினும்‌ நீர்வாழ்‌ உயிரினங்கள்‌ ஒன்றை ஒன்று அறிந்து கொள்ள இயலும்‌. இப்பகுதி மங்கலான ஓளிப்பகுதி (199821011௦ 20௦6) என அழைக்கப்படுகிறது. இதற்கும்‌ 8ழுள்ள பகுதி ஒளியற்று இருண்டு காணப்படு வதால்‌ ஒளியற்ற பகுதி (கற1௦110 2006) என அழைக்கப்‌ படுகிறது.

அடுக்கமைவு 299

சூழ்நிலை அமைப்புகளில்‌ உயிரினங்களின்‌ அடுக்கமைவு

அமைப்பில்‌ மட்டுமன்றிச்‌ செயல்பாட்டிலும்குழ்நிலை அமைப்புகள்‌ அடுச்கமைவு முறையைப்பின்பற்றுவதாகக்‌ கருதப்படுஇற து. இம்முறையில்‌, சூரிய ஒளியைப்‌ பயன்‌ படுத்தித்‌ தமக்கு வேண்டிய கரிமப்‌ பொருள்களை (Organic ே௱ழ௦யாம்‌ தாங்களே தயாரிப்பவை, தன்‌ உணவாக்கிகள்‌ (410010 ந0௨) எனவும்‌, வேறுமுறைகளில்‌ ஊட்டப்‌ பொருள்களைப்‌ பெபறுவனவற்றை அல்லது சிதைத்துப்‌ பயன்‌ படுத்துபவற்றை மாறு உட்டிகள்‌ (Heterotrophs) aeryth 25 முக்கிய வகைகளாகப்‌ பகுத்துள்ளனார்‌. முதல்‌ வசையில்‌ அடங்குபவை நுண்ணுயிர்களும்‌ (கச, தாவரங்களும்‌. இரண்டாவது வகையைச்‌ சேர்ந்தவை சிதை மாற்றம்‌ செய்பவையாவன (0960000805) பாக்டீரியாக்கள்‌ பூஞ்சைகள்‌ போன்றவை. இரண்டு அடுக்குகளாகக்‌ கருதப்படும்‌ இவ்விரு வகை உயிபினங்களும்‌ நிலச்‌ கூழ்‌ நிலையிலும்‌, நீர்ச்‌ சூழ்நிலையிலும்‌ காணப்படுின்‌ றன. எடுத்துக்காட்டாகக்‌ காடுகளில்‌ தன்‌ உணவாக்கிகள்‌ {Autotrophs) மரங்களின்‌ இலைப்பகுதியிலும்‌, மாறு aor act = =(Heterotrophs) மண்ணிலும்‌ காணப்‌ படுகின்‌ றன. கடல்‌ சூழ்நிலையில்‌ ஒளியுடைய பகுதியில்‌ தன்‌ உணவாக்கிகளும்‌, அடித்தளத்தில்‌ உள்ள வண்டல்‌ பகுஇயில்‌ மாறு வட்டிகளும்‌ வாழ்டின்‌ றன.

உயிரினங்களின்‌ இயக்கத்தை மேலும்‌ ஆராய்ந்தால்‌, அவை மூன்று முக்கிய செயல்பாடுகளைக்‌ கொண்டு, மூன்று அடுக்குகளாக இருப்பதைக்‌ காணலாம்‌.

7. தயாரிப்பவை (170200௦215): இவை தாங்களாகவே உணவைத்‌ தயாரிக்கும்‌ தன்மையைக்‌ கொண்ட பசுமை நிறத்‌ தாவரங்கள்‌, நீர்ச்‌ சூழ்நிலையில்‌ இவை பெரும்‌ பாலும்‌ மேற்பகுதியில்‌ காணப்படும்‌ தாவர மிதவை யுயிரிகள்‌ (Phytoplankton) வகையைச்‌ சார்ந்தவை களாக இருக்கின்‌ றன.

8. நுகக்வன (0ஈ5ய௩20): இவை மேலே கூறப்பட்ட முகுல்‌ வசை உயிரிகளை உண்டு வாழ்பவை. இவை மேலும்‌, முதல்நிலை 'நுகார்வன (கார ஊற சட,) இரண்டாம்‌ நிலை நுகர்வன (Secondary consumers), மூன்றாம்‌ நிலை gatousr (Tertiaty consumers) எனப்‌ பல அடுக்குகளாகப்‌ பகுக்கப்பட்டுள்ளன. இரண்டாம்‌ நிலை நுகர்பவை முதல்‌ நிலை துகர்பவற்றை உண்டும்‌, மூன்றாம்‌ நிலை நுகர்பவை இரண்டாம்‌ நிலை நுகர்ப வற்றை உண்டும்‌ வாழ்பவை.

3. சிதை மாற்றம்‌ செய்பவை (1020000567)

இவை. மேற்கூறிய தயாரிப்பவற்றையும்‌, நுகர்வன வற்றையும்‌ இறந்த நிலையில்‌ சிதைத்து, மறுபடியும்‌ தயாசிப்பவற்றுக்கு அளிப்பவை. மேற்கூறியவை பல்‌ வேறு அடுக்குகளாசக்‌ கருதப்பட்ட போதிலும்‌, ஒன்று டன்‌ ஒன்று உணவுத்‌ தொடரால்‌ (1௦௦4 பெ) பிணைக்கப்பட்டவை. எனவே ஓவ்வொன்றும்‌ மற்ற அடுக்குகளில்‌ காணப்படும்‌ உயிரினங்களின்‌ வாழ்க்‌ கைக்கு இன்றியமையாதவை.