364 அண்டம்
பால்வழி (14411௩) இரவு நேரங்களில் வானத்தில் வெண்மையாகப் பால்போன்று வளையமாகத் தோன் றும். பால் போன்று வெண்மையாக இருப்பதால் இதனைப் பால்வழி என்று அழைக்கின்றனர். பல தூற் ாண்டுகளாக இதனைப் பால்வழி மண்டலம் என்றும் அழைத்து வருகின்றனர். இதுபோன்ற பால்வழி [மண்டலங்களில் ஒன்றை நாம் எளிதில் காணலாம். ஆத் Bar Gun_r (Andromeda) விண்மீன் குழுவை உற்றுநோக் னாள் அதன் அருகில் வெண்மையான பகுதியைக் காணலாம். இது ஒரு பால்வழி மண்டலமாகும். மேலும் வளிமங்களின் முகில்கள் (010005) வெண்மை யாக, துண்டாக, ஆந்திரமேடாவின் மற்றொரு பக்கத் இல் தோன்றும், இதுஒண்மு௫ற்படலம் அல்லது தெபுலா (Nebula) aersugQu. gt இரு நோக்கி (Binocular) றலம் மான்தலை விண்மீன் குழுவை (01௦௫) தோக்கி னால் அதன் அடியில் ஒண்முகிற்பட லம் காணப்படும். இது காண்பதற்கு முரில்கள் கூட்டம் போல் தோன்
றும்.
௩மது பால்வழி மண்டலம் (பால்வழி): பால்வழிகளின் ஒளி பல மில்லியன் லிண்மின்களின் ஓளி ஒன் றிணைத் தது, (படம்-2). ஒரு விண்மீனிலிருந்து மற்றொரு விண் ீனுக்குப் பயணம் செய்யும்போது இரு விண்மீன்களுக்கு இடையே உள்ள இவளியை தோக்கினால் எதுவும் காண இயலாது. ஏனென்றால் மிகவும் மெல்லிய அளவில் உ௫ுக்கண இடைவெளியில் பொருள்கள் பரவியுள்ளன , இந்தப் பொருள்கள் ௨டுக்கண இடைவெளிப் பொருள் கள் {Interstellar matter) oramenufpid. நமது பால்வழி மண்டலத்திற்கு அப்பால் மில்லியன் கணக்கான பால் வழி மண்டலங்கள் உள்ளன என்று தொலைதோக் இயின் உதவியால் வானியல் அறிஞர்கள் கண்டுபிடித் துள்ளனர். பால்வழி மண்டலங்களில் பல வகைகள் உள்ளன. காண்க, பால்வழி மண்டலம்.
கதிர்வீச்சு அண்டம் (Radio Universe): அண்டத்தில் ல பொருள்கள் வெகு தொலைவில் உள்ளதால் அவற்றை மிகவும் அதிகத்திறன் வாய்ந்த தொலை நோக்கியால் கூடக் காணஇயலாது. ஆனால் கதிர்வீச்சுத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி அவற்றின் தன்மை களைக் கண்டறியலாம். இது சுதிர்வீச்சப் பால்வழி மண்டலத்தைக் காண்பதற்காக கருவாக்சுப்பட்டது. இந்தப் பால்வழி மண்டலங்கள் ஒழுங்கற்ற வெடிக்கக் கூடிய பால்வழி மண்டலங்களாகும். இவை வெடிக்கும் போது ஓனி, வெப்பம், எக்ஸ்-கதிர், கதிர் வீச்சு sooner (Radio waves) போன்றவை உண்டா இன்றன. 1964ஆம் ஆண்டு குவாசர் (மெகா) என்ற பொருளை இத்தொலை நோக்கியின் உதவியால் கண்ட இிந்தனர், ல வானியல் அறிஞர்கள் இதனை இளைய பால்வழி மண்டலம் (1௦0 Galaxy) என்றும், சுருளிப் பால்வழி மண்டலமாக ($றால] சேவடி) இது மாறக் கூடும் எனவும் சருதினர். காண்க, கஇர்வீச்சுத் தொலை நோக்கி,
Aor ayo ster (Expanding Universe): urdaup மண்டலம் மிகப் பரந்த பகுதியாதலால் அது Bar தலைக் காண இயலாது. ஆனால் அலைமாலைக் காட்டி (Spectroscope) என்ற கருவியின் துணைகொண்டு அது குகர்வதைக் காணலாம். இரண்டு அமெரிக்க அறிஞர்கள் இணைந்து வெகு தொலைவில் உள்ள பால்வழி மண்டலங்களின் GenbduwisA (Red shift) மிக அதக மாக இருக்கும் எளவும், அதன் மூலம் பால்வழி மண்டலங்கள் நம்மை விட்டு விரைவாக நகர்ந்து செல் கின்றன எனவும் கண்டறித்தனர். (படம்-3) காண்க, செம் பெயர்ச்சி.
அனைத்துப் பால்வழி மண்டலங்களும் நம்மைவிட்டு நகர்வதால் நாம் அண்டத்தின் மையத்தில் இருக்கின் றோம் என்பது இதன் பொருள் அன்று. எடுத்துக் காட்டாகப் பல புள்ளிகளைக் கொண்ட பலூன் ஒன்றில் காற்று நிரப்பப்படும்போது, அதன் புறப்பரப்பு விரி வடைவதால், ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் மற்ற புள்ளிகள் நகர்ந்து செல்வது போல் தோன்றும். இதில் ஓவ்வொரு புள்ளியும் ஒரு பால்வழி மண்டலம் என நினைத்துக் கொண்டால் இகன் பொருள் நன்கு விளங்கும். இதிலிருந்து அண்டத்திற்கு எந்த ஒரு பால் வழி மண்டலமும் மையமாக அமையாது என்பதை அறியலாம்.
பால்வழி மண்டலங்கள் மிக விரைவாக நம்மைவிட்டு நகாடின்றன. மிக அண்மையில் கள்ள பால்வதி மண்டலம் தொடிக்கு 17280 இலோ மீட்டர் வேகத்தில் நம்மைவிட்டு நகர்கிறது. 5,000,000,000 (5x 10%) ஒளியாண்டுகள் தொலைவில் உன்ள பால்வழி மண்டலம் நொடிக்கு (680௦00) 145,000 AGan மீட்டார் வேகத்தில் நம்மைவிட்டு நகர்த்து செல்கின்றது. இது ஒளியின் வேகத்தில் பாஇுயாகும். 75)070? ஒளி யாண்டுகள் தொலைவில் உள்ள பால்வழி மண்டலங் கள் ஒளியின் வேகத்தில் நம்மைவிட்டு நகர்கின்றன. எனவே. அத்தகைய பால்வழி மண்டலத்திலிருந்து வரும் ஒளி நம்மை ஒருபோதும் வந்தடையாது, அண்டத் இலுள்ள சில பால்வழி மண்டலங்களிலிருந்து வரும் ஒளி நம்மை ஒருபோதும் வத்தடையாததால் அண்டத்தி லுள்ள அனைத்துப்பா ல்வழிமண்டலங்களைப்பற்றியும் நாம் அறிய முடியாது என்பது புலனாகிறது. ஒளியின் வேகத்தைவிடக் குறைவான வேகத்தில் பயணம் செய் யும் பால்வழி மண்டலங்களைப் பற்றித்தான் நாம் ஆராய முடியும். எனவே அண்டத்தை, “காணக்கூடிய soins’ (Visible Universe) orsirgy அழைக்கின்றனர்.
பெரும்பாலான அறிஞர்கள் காணக் கூடிய அண்டம் என்பது அண்டத்தின் ஒரு பகுதியெனக் கருதுகின்றனர். அண்டம் என்பது வெளியில் மிகு தொலைவிற்கு நீட்டித்த அமைப்பாகும். ஆனால், எந்த அளவுக்கு இது நீண்டுள்ளது? அதற்கு மேலும் இது நீள்வதற்கான வாய்ப்பு உள்ளதா? அல்லது எங்காவது ஓர் இடத்தில் இது முடிவடைகின்றதா? அவ்வாறு ஓர் இடத்தில்