பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வுகள்‌ மூலம்‌ சண்டறிந்ததே, மேலும்‌ பால்வழி மண்டலம்‌ பூமியிலிருத்து இருக்கும்‌ தொலைவு அதிக மாக அதிகமாக அது விலக ஓடும்‌ வேசுமும்‌ அதிக மாகும்‌ என்று அவர்‌ கூறினார்‌. இதன்‌ பயனாக அண்டம்‌ விரிவடைஏறது என்ற கருத்து பிறந்தது. காண்க, அண்டம்‌.

இருபதாம்‌ நூற்றாண்டின்‌ தொடக்கத்தில்‌ இயற்‌ பியல்‌ மேதை ஆல்பர்ட்அய்ன்ஸ்டைன்நாம்‌ வாழ்கின்ற பால்வழி மண்டலத்தில்‌ சார்பற்ற தனித்தன்மை உடைய பொருள்கள்‌ இல்லை என்ற முக்கியக்‌ கருத்தை வெளியிட்டார்‌. அய்ன்ஸ்டைன்‌ கூறிய சார்புடைமைக்‌ கொள்கையும்‌, பால்வழி மண்டலங்கள்‌ பற்றி அபுல்‌ செய்த ஆய்வுகளும்‌ அண்டவியல்‌ பற்றிய அடிப்படைக்‌ கருத்துகளையே மாற்றியமைக்க வேண்டிய சூழ்‌ நிலையை உருவாக்கின. பின்னர்‌, பல புதிய விளக்கங்கள்‌ தோன்றின. அண்டத்தின்‌ அமைப்பு : அய்ன்ஸ்டைன்‌ சார்புடைமைக்‌ கோட்பாட்டின்‌ அடிப்படையில்‌ அண்டத்தைப்‌ பற்றிப்‌ பல மாதிரிகள்‌ (௩௦029) கருத்தமைக்கப்பட்டன. அய்ல்ஸ்டின்‌ உருவாக்கிய அண்டத்தின்‌ மாதிரியில்‌ இயக்கத்துக்கு இடமில்லை. டிரிட்டர்‌ (ரப) என்‌ பவர்‌ உருவாக்கிய மாதிரியில்‌ முற்றிலும்‌ பொருளுக்கு இடமில்லை. காலப்போக்சில்‌ இவ்விருமாதிரிகளும்‌ அவற்றின்‌ சிறப்பை இழந்தன. விரிவடையும்‌ அண்டம்‌ என்ற கருத்தினை ஆங்கிலேய அறிஞர்‌ சர்‌ ஆர்தர்‌ எடிங்டன்‌ (ம்‌ கரட்பா 820 என்ற அறிஞர்‌ விறித்‌ துரைத்தார்‌. நிலைமாறா அண்டனியல்‌ (516803) State Cosmology) 3957ம்‌ ஆண்டு, எச்‌.போண்டிட்‌ (11.0001),டி.கோல்டு {T-Gold), எப்‌.ஹாயில்‌ (௪.11016) ஆகிய மூன்று சேம்‌ பிரிட்ஜ்‌ பல்கலைக்‌ கழக வானியல்‌ அறிஞர்கள்‌, முற்‌ இிலும்‌ புதியதோர்‌ அண்டவியல்‌ கொள்கையினை வெளியிட்டனர்‌. இதன்படி அண்டத்துக்குத்‌ தொடக்‌ கமும்‌ முடிவும்‌ இல்லை. காலத்தினைப்‌ பொறுத்தும்‌ வெளியினைப்‌ பொறுத்தும்‌ அண்டம்‌ மாறுவதில்லை. இதன்படி விலகிச்‌ செல்லும்‌ பால்வழி மண்டலங்களால்‌ குறைவுபடும்‌ சராசரித்‌ திண்மையை ஈடுகட்டுவதற்‌ சாக அதே வேகத்தில்‌ பொருள்‌ தொடர்ந்து படைக்கப்‌ படுகிறது என்ற கருதுகோள்‌ தேவைப்படுகிறது. இவ்‌ erg புதிதாகப்‌ படைக்கப்படும்‌ பொருள்‌ குளிர்ந்து பால்வழி மண்டலங்களாக ஆவது தொடர்ந்து நடை பெற்றுக்கொண்டே இருச்சிறது என்பது இதன்‌ விளை வான கொள்கை. மரபு வழி அண்டவியற்படி எல்லாப்‌ பால்வழி மண்டலங்களும்‌ ஒரே வயதஇனை உடையன என்றால்‌, திலைமாறா அண்டலியற்படி பால்வழி மண்டலங்களின்‌ தொகுப்பில்‌ பல மில்லியன்‌ ஆண்டுகள்‌ வயது வேறுபாடுகளை உடைய பல்வேறுபட்ட வயதினைக்‌ கொண்ட மண்டலங்கள்‌ உள்ளன. Fin ag சூரிய குடும்பத்தை உள்ளடக்கிய பால்வழி, சாதாரண சராசரி பால்வழி மண்டலங்களின்‌ வய Sea போன்று மும்மடங்கு வயதுடையது என்று கூறப்படுகிறது, ஆனால்‌ அண்மையில்‌ உள்ள பால்வழி

அண்டவியல்‌ 767

மண்டலங்களைப்‌ பற்றிக்‌ கிடைத்துள்ள ஆய்வுப்‌ புள்ளி விவரல்களைக்‌ கொண்டு பார்க்கையில்‌ மேற்கூறிய கருத்தினை உறுதி செய்ய வழியில்லாமல்‌ இருக்கிறது. நிலைமாறா அண்டவியல்‌ கொள்கையினை ஏற்றுக்‌ கொள்வோர்‌ குறைந்து வருகின்‌ றனர்‌.

பேரிடிக்‌ கொள்கை (Big Bang Theory): அண்டத்‌இன்‌

பி ப்பு பற்றிய மற்றொரு கொள்கை பேரிடிக்‌ கொள்கை ஆகும்‌. இதன்படி அண்டம்‌. 10000 மில்லியன்‌ அண்டுகளுக்கு முன்‌ பொருளாகவும்‌,

மிகச்‌ சூடான ஆதி அணுவாக (Atom) apo, சிறிய வெளியில்‌ குறுகி அடர்த்தியாக இருத்தது. இது வெடித்து வெளிநேபக்கிப்‌ பரவியது. இதன்‌ பயனாக, பால்வழி மண்டலங்கள்‌ தோன்றின. அவை இன்னும்‌ ஒன்றிலிருந்து ஒன்று விலூச்‌ சென்று கொண்டே இருப்பதால்‌ அண்டம்‌ விரிவடைத்து கொண்டேயிருக்‌ Dog. arena, அண்டப்பிறப்பியல்‌.

ஆய்வுத்‌ தடயங்களும்‌ ஆய்வு முடிவுகளும்‌ பேரிடிக கொள்கையை வலுப்படுத்துமாறது அமைகின்றன. பேரிடிக்‌ கொள்கையின்‌ அடிப்படையில்‌ அமைந்த மற்று மொரு மாதிரியும்‌ உள்ளது. இதன்‌ படி 74 பில்லியன்‌ ஆண்டுகளுக்கு முன்‌ தோன்றிய அண்டம்‌ விரிவடைந்து கொண்டே சென்று ஒரு நிலையில்‌ விரிவடைவதை நிறுத்திச்‌ சுருங்கத்‌ தொடங்கும்‌. இதன்‌ இறுஇ நிலை யாக அது அணுவா வெடிக்கும்‌. மறுபடியும்‌ விரிவடை

யும்‌. இவ்வாறு விரிந்தும்‌ சுருங்கியும்‌ மாறி மாதி திகழ்ந்து கொண்டேயிருக்கும்‌. புதிய கருத்துகள்‌: பல ஆய்வுகளினாலும்‌, ஆராய்ச்சி

முடிவுகளாலும்‌ அண்டவியல்‌ தத்துவங்கள்‌ மாறிக்‌ கொண்டே வருகின்றன. ஒளியின்‌ வேகத்தினையும்‌ மிஞ்சும்‌ பெரும்‌ குவாசர்கள்‌ (0085815), பல்சார்கள்‌ (Pulsars), ஒளிகூட ஊடுருவாத அளவு ஈர்ப்புச்‌ சக்த யுடைய நலித்த விண்மீன்களாகக்‌ கருதப்படுகின்ற கருத்துளைகள்‌ (510 ௦166) ஆகியன பற்றிய புதிய செய்திகள்‌ பல கிடைத்துக்கொண்டேயிருக்கின்‌றன. வறு அண்டங்கள்‌ இருப்‌ தாகவும்‌, நமது அண்டம்‌ ஒரு கருந்துளை என்றும்‌ ஒரு கருத்து இருக்கிறது. அண்ட, வெளி முழுவதிலும்‌ இயற்பியல்‌ விதிகள்‌ ஒரே மாதிரி இருக்க முடியாது என்ற கருத்தும்‌ நிலவுகிறது. காண்க, குவாசர்கள்‌, பல்சார்கள்‌, கருந்துளைகள்‌. கோ. ச.

நூலோதி

1. Carl Sagan. Jonathan Norton Leonard-Planets, Time-life Books,Hong-Kong 1978,

2. McGraw- Hill Encyclopaedia of Science & Technology, Vol-3 1977

3. Michael A. Seeds, Astronomy: Selected Reading, Benjamin Cummings Publishing Company Inc. Menlo Park, California Readings. 1980.