பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 அண்ணீரகப்‌ புறணி நோய்கள்‌

அதக காலம்‌ இத்திலை இருப்பின்‌ மிகை இரத்த அழுத்தக்கால்‌ சண்பார்வை மங்குதலும்‌, சிறுநீர கங்களுச்கு அழிவும்‌ ஏற்படலாம்‌.

(இ) புறணி குறைவாகச்‌ செயல்பட்டால்‌,அடிசன்‌ நோய்‌ (Addison's disease) ஏற்படுகிறது. இதில்‌ தசை சுள்‌ வலுவின்மை, இரத்த அழுத்தக்‌ குறைவு, சோடியம்‌ பொட்டாசியம்‌ சமநிலை மாற்றங்கள்‌, உள்ளங்கைகள்‌, நாக்கு ஆகியவ தீதில்‌ ஒருவித கருப்பு நிறம்‌ போன்றவை ஏற்படும்‌. இறுதியில்‌ மரண மும்‌ சேரலாம்‌.

இவ்விதமான நோய்களின்‌ அறிகுறிகள்‌ தோன்றின்‌ மருத்துவரை அணுகினால்‌ அண்ணீரகங்கள்‌ குறைவாகச்‌ செயல்படும்‌ நோயாளிகளுக்குச்‌ செயற்கை முறையில்‌ தயாரித்த கார்ட்டிகோஸ்டீரரய்டுகளைக்‌ கொடுப்பார்‌. அதனால்‌ தோய்‌ குணமாகும்‌. அதேபோல்‌ அண்ணீரகங்‌ கள்‌ அதிகமாகச்‌ செயல்படும்‌ நோயாளிகளுக்கு அண்ணீ ரகங்களை அகற்றிவிட்டு, உடம்புச்குத்‌ தேவையான அளவு கார்ட்டிகோஸ்டீராய்டுகள்‌ மிகாடுத்துக்‌ குணப்‌ படுத்த முடியும்‌. டி.எஸ்‌. ரெ.

நூலோதி.

Walter Flamenbaum. M.D , Robert J. Ham-

burger. Nephrofogy-an approach to the

patient with renal disease J.B.Lippincott Com-

pany. Philadelphia. Toronto. 1982.

அண்ணீரகப்புறணி நோய்கள்‌

சிறுநீரகத்தை ஓட்டினாற்போல்‌ அமைத்த கரப்பி அண்ணீரகச்‌ கரப்பியாகும்‌. இது சிறுநீரகத்தின்‌ உச்சி யில்‌ தொப்பி போட்டதுபோல்‌ அமைந்துள்ளது. ஓவ்‌ வொரு இறுநீரகத்தின்‌ மேலேயும்‌ ஒன்றாக இரண்டு பக்கங்களிலும்‌ இரண்டு அண்ணீரகச்சுரப்பிகள்‌ உள்ளன. இனை தாளமில்லாச்‌ சுரப்பிகளாகும்‌,. இவை தலைமை நாளமில்லாச்‌ சுரப்பி (ர்வ) மின்‌ சுட்டுப்பாட்டுக்‌ தள்‌ அடங்கியலை. ஓவ்வோர்‌ அண்ணீரகச்‌ சுரப்பியும்‌ 4-7 இராம்‌ எடை கொண்டது. இச்‌ சுரப்பி இரண்டு பாகங்களை உடையது, ஒன்று புறணி (0௦1610) மற்றது net (Medulla) ஆகும்‌. அண்ணீரகப்புறணி தான்‌ முக்கியமானது, யிருக்கு இன்றியமையாதது, இச்‌ சுரப்பியின்‌ சுரப்பு குறைந்தாலும்‌ அதிகரித்தாலும்‌ நோய்‌ உண்டாகும்‌.

இச்சுரப்பி பலவிதமான ஹார்மோன்களைச்‌ சுரக்‌ இறது. அவற்றுள்‌ முக்கியமானவை மூன்று ஆகும்‌. 1, அண்ணீரக மாவுப்‌ பொருள்‌ ஹார்மோன்‌ (01100- corticoids) 2. அண்ணீரக ஆண்மை antiGurar (Androgen)

$. அண்ணீரசுக்‌ கனிம ஹார்மோன்கள்‌ (1810 8வ]௦- corticoids)

அண்ணீரக மாவுப்‌ பொருள்‌ ஹார்மோன்கள்‌

இது மாவுப்‌ பொருளை உற்பத்தி செய்து தருகிறது, மாவுப்‌ பொருள்‌ நமக்கு மிகவும்‌ மூக்கயமான, தேவைப்‌ படும்‌ ஒன்றாகும்‌. மன எழுச்சியின்‌ போதோ, உடல்‌ வேலையின்‌ போதோ மாவுப்பொருள்‌ அதிகம்‌ தேவைப்படும்‌. அப்போது அண்ணீரக மாவுப்‌ பொருள்‌ ஹார்மோன்‌ சுரக்கிறது. புரதச்‌ சத்துகளிலிருத்து மாவுச்‌ சத்தையும்‌ உண்டாகக்‌ கொடுக்கிறது. மாவுச்‌ ஈத்‌ திலிருந்து நமக்கு ஊட்டச்‌ சக்தி கிடைக்கிறது, இத்த அண்ணீரக மாவுப்‌ பொருள்‌ ஹார்மோன்‌ அதிக மாகச்‌ சுரந்தால்‌, குஷ்ஷிங்‌ நோய்த்‌ தொகுஇ(மேப/ற2 5 syndrome) ஏற்படுகிறது, குறைவாசுச்‌ சுரந்தால்‌ அடிசன்‌ (9௦1600) தோய்‌ உண்டாகிறது.

அண்ணீரகக்‌ கனிமஹார்மோன்‌ ஆல்டோஸ்டீரோன்‌ (Aldosterone) என்று அழைக்கப்படுகிறது. உடலில்‌ உள்ள சோடியம்‌ (5$௦01ப௱டி உப்பையும்‌ பொட்டாசியம்‌ ‘Potassium) evionrtath சர்படுத்துவதற்கு இந்தக்‌ கனிம ஹார்மோன்‌ முக்கியமானதாகும்‌. இவ்‌ ஊக்கி அதிக மாகச்‌ சுரக்கும்போது கான்தோய்த்‌ தொகுதி (வேம்‌ Syndrome) உண்டாகிறது. இந்த ஹார்மோன்கள்‌ பற்றாக்குறையினால்‌, தனிப்பட்ட வகையில்‌ நோய்‌ உண்டாவது அரிதாகும்‌.

அண்ணீரக ஆண்மை வீரிய ஹரர்மோன்‌ அூகமாகச்‌ சுரக்கும்போது இன உறுப்‌;/களிலும்‌, ஆண்‌ பெண்‌ பாகுபாடுகளிலும்‌ மாற்றங்கள்‌ உண்டாகின்றன.

திடீர்‌ அண்ணீரகுப்‌ புறனிச்‌ சுரப்புப்‌ பற்றாக்குறை ரோய்‌ (Acute Adrenal Insufficiency)

இது ஓர்‌ அரிதாகக்‌ காணப்படும்‌ ஆபத்தான நோயாகும்‌. அவசரச்‌ ச்சை கொடுப்பது மிகவும்‌ முக்கியமானது. இதில்‌ ௮ண்ணீரகச்‌ சுரப்பி சரிவர வேலை செய்வ இல்லை.இதனால்‌ , அதன்‌ உற்பத்தி அளவில்‌ பற்றாக்‌ குறை ஏற்படுகிறது.

7. அண்ணீரகம்‌ மலிந்து (கா௦ற) போதல்‌ ௪, அண்ணீரசும்‌ காசநோயினால்‌ பாதிக்கப்படுதல்‌

3, நுண்ணுயிர்களின்‌ நச்சு இரத்தத்தில்‌ பெருவாரி யாகக்‌ கலந்து அண்ணீரகம்‌ பாழ்படுதல்‌

4, அறுவைச்‌ ச௫ச்சையின்‌ போது அண்ணீரசம்‌ கெட்டு விடுதல்‌,

5. அண்ணீரக வெளிப்புறச்‌ சுரப்பியின்‌ ஹார்மோன்‌ கள்‌ செயற்கை முறையில்‌ மாத்திரைகளாகத்‌ தயாரிக்கப்படுகின்றன. அம்மாத்திரைகளை அதிக அளவில்‌ நாள்‌ கணக்கில்‌ சாப்பிட்டுவிட்டு, இடீ ரென நிறுத்திவிடுவகனால்‌ அண்ணீரகம்‌: செய லிழந்து போகும்‌,

நோயுற்றோர்‌ தளர்ந்தும்‌, வெளுத்தும்‌ காணப்‌படுவர்‌. மனநிலையில்‌ கலக்கம்‌ இருக்கும்‌. இரத்த அழுத்தம்‌ குறைந்து காணப்படும்‌, நீல வாதை சில