பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/621

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராயப்பட்டது. சிதறல்‌ வாய்ப்பு கணிசமான அளலிற்‌ குப்‌ படுநியூட்ரான்களின்‌ஆற்றலைச்‌ சார்ந்துள்ளது. 10 மி.எ.வோக்கும்‌ குறைவான ஆற்றல்களில்‌, சதறலானது கோண 2 id (Angular momentum) & Pure ester நியூக்ளியான்௧ளால்‌ ஏற்படுகிறது. எனவே, சிதறலுறும்‌ Baplonsrach Canems wi8@ (Angular distribution) இசையொடப்புப்‌ பண்பியலான தாக (150110ற1௦) இருக்கும்‌. கன அய்ட்ரசனின்‌ அணுக்குருவான நியூட்ரான்கள்‌, நியட்ரான்்‌களை விட இரு மடங்கு எடையுள்ளன. காமா சுதிர்களை டியூட்ரான்கள்‌ மேல்‌ செலுத்தினால்‌ அவை புரோட்டானாகவும்‌ நியூட்ரானாகவும்‌ பிரிகின்‌ றன, ஒவ்வொருடிழட்ரானும்‌ ஒரு புரோட்டான்‌ மற்றும்‌ ஒரு நியூட்ரான்‌ ஆகியவற்றால்‌ ஆனது என்று எடுத்துச்‌ கொள்ளப்படுகின்றது. மேற்கூறிய தற்கோளைக்‌ கொண்டும்‌ ஆய்வின்‌ மூலம்‌ அளவிடப்பட்ட டியூட்ரான்‌ பிணைப்பாற்றலைக்‌ கொண்டும்‌ அணுக்கரு விசைகளின்‌ அளவினை அறிய முயற்சிகள்‌ செய்யப்பட்டன. ஓர்‌ எ.வோ. ஆற்றலுடைய குழைவேக நியூட்ரான்௧களைக்‌ கொண்டு நீயூட்ரான்‌ஃ புரோட்டான்‌ சிதறல்‌ ஆய்வுகள்‌ செய்யப்பட்டன. இந்து, ஆய்வுகளில்‌ அணுக்கரு விசை கள்‌ நெடுக்கம்‌ குறைவாக இருப்பதால்‌, மேற்கூறிய ஆய்வுகளைப்‌ பொதுவான குவாண்டம்‌ இயக்கலியல்‌ கோட்பாட்டைக்‌ (Quantum mechanics theory) கொண்டு எளிதாக விளக்க முடிகிறது.

குறைவான ஆற்றலில்‌ புரோட்டான்‌-புரோட்டான்‌ சிதறல்‌

நியூட்ரான்‌-புரோட்டான்‌ சிதறல்‌ ஆய்வுகளைவிடப்‌ புரோட்டான்‌-புரோட்டான்‌ சிதறல்‌ சோதனைகளைச்‌ செய்வது பல வழிசளில்‌ எளிதாக உள்ளது. முதலாவ தாக, தனித்த ஆற்றல்‌ மிக்க புரோட்டான்‌. கற்றை சுளைப்‌ பல்வேறு முடுக்கிகளிலிருந்தும்‌ பெறுவது எளி தாகின்றது. மேலும்‌, புரோட்டானின்‌ அயனியாக்கும்‌ இறத்தைக்‌ கொண்டு அதன்‌ ஆற்றலை அளக்க முடி றது. கூலுமின்‌ எதிர்த்துத்‌ தள்ளும்‌ விசையால்‌ (Coulomb’s repulsive force) புரோட்டான்‌ -புரோட்‌ டான்‌ சிதறல்‌ மற்றும்‌ தியூட்ரான்‌-புரோட்டான்‌ சிதற லும்‌ வேறுபடுகின்‌ றன.

அதிக ஆற்றலில்‌ நியூட்ரான்‌-புரோட்டான்‌ மற்றும்‌ புரோட்‌ டான்‌-புரோட்டான்‌ சிதறல்‌

௮இக ஆற்றலில்‌ படுதுகளின்‌ அலை நீளம்‌ (18/216 122) மிகவும்‌ குறைவாக இருப்பதால்‌ அணுக்கரு இடையீட்டு வினையின்‌ பலத்தை மிகத்‌ துல்லியமாக ஆராய முடிவதில்லை. தனித்த ஆற்றலுள்ள நியூட்‌ ரான்‌ கற்றைகள்‌ கிடைக்காத காரணத்தால்‌ நியூட்ரான்‌ சுளைப்‌ பொறுத்தவரை இந்த ஆய்வு மிகவும்‌ சிக்கலாக உள்ளது. இருப்பினும்‌, தனித்த ஆற்றலுள்ள புரோட்‌ டான்கள்‌ ஓரளவுக்கு எளிதான முறையில்‌ இடைக்‌ கிறது, எனவே புரோட்டான்‌ - புரோட்டான்‌ சிதறல்‌ களைக்‌ குறைந்த அளவு ஆற்றல்களிலிருந்து அதிக அளவு ஆற்றல்கள்‌ வரை அளக்கலாம்‌. அதிக ஆற்றல்‌ நிலைகளில்‌ ஏதறல்‌ வாய்ப்புக்களைப்‌ பாலி எதிலின்‌

Ai 17g

அணுக்கருத்‌ திருப்புமை 585

மற்றும்‌ நீர்ம அய்ட்ரஜன்‌ ஆகியவற்றைக்‌ குறைப்பான்‌ களாகக்‌ கொண்டு அளவிடலாம்‌ ஆற்றல்‌ 900 ]4-க்‌ கும்‌ 83ழ சிதறல்‌ மீட்சியுள்ளகாக இருப்பது கண்டறி யப்பட்டது, அந்நிலையில்‌ கூடுதல்‌ வாய்ப்புகளைப்‌ பகுப்பு வினை நிகழ்‌ வாய்ப்புகளைக்‌ கொண்டு கணக்‌ இடலாம்‌. மேலும்‌, அதக ஆற்றல்களில்‌ நியூக்னியான்‌ கள்‌ ஒன்றுக்கொன்று இணையும்போது எண்ணற்ற அளவில்‌ மெசான்கள்‌ (14850816) வெளிவருவதாகக்‌ கண்டறிந்துள்ளனர்‌. 440 Mev ஆற்றலுக்கு மேல்‌ மெசான்‌ உற்பத்தி மிகவும்‌ சிறந்த பங்கை வூக்கின்றது, வழக்கமாக, இந்த ஆற்றல்‌ நிலையில்‌ சிதறல்‌ ஆய்வுகள்‌ ஒளியியல்‌ வடிவமைப்பு (0ற11௦3] model) என்ற வடி வமைப்பின்‌ மூலம்‌ விளக்கப்படுகின்றன.

எலக்ட்ரான்‌-நியூக்லியான்‌ சிதறல்‌ :

அய்ட்ரஜன்‌ மூலம்‌ எலக்ட்ரான்‌ இதறலை ஏற்படுத்த அதனை விரிவாக ஆராயலாம்‌. 800 1434 முதல்‌ 500 1 வரையிலான ஆற்றல்களில்‌ எலக்ட்ரான்‌.நியூக்லி யான்‌ சிதறல்‌ ஏற்படுகிறது. இதன்‌ மூலம்‌ அணுக்கரு விசை பற்றிய செய்இகள்‌ நமக்கு விளக்கமாகக்‌ கடைக்‌ இன்றன. உயர்வேக எலக்ட்ரான்‌களைக்‌ கொண்டு அணுக்கருத்துகள்களைத்‌ தாக்கி, அதன்‌ அகக்‌ கட்‌ டமைப்பையும்‌ நிறுவலாம்‌. மூரணிய இதறல்கள்‌, அணுக்கருத்துகளின்‌ கட்டமைப்பில்‌ குவார்க்குகள்‌ இருக்கலாம்‌ என்பதைப்‌ புலப்படுத்துவதாய்‌ இருக்கின்‌ றன. குவார்க்குகள்‌ அடிப்படைக்‌ துகள்களுக்கெல்லாம்‌ அடிப்படையாய்‌ இருக்கக்கூடும்‌ என்று கருதப்படுகின்‌ ற அடிப்படைத்‌ துகளாகும்‌,

தை.ம. நூலோதி *

1. இரா. நாகராசன்‌, “நியூட்ரான்‌ இயற்பியல்‌”, தமித்‌ நாட்டுப்‌ பாட நூல்‌ நிறுவனம்‌, 1973.

2. கோ. பாலசுப்பிரமணியன்‌, அணுக்கரு இயற்‌ பியல்‌*, தமிழ்‌ நாட்டுப்பாட நூல்‌ நிறுவனம்‌, 1977

3. டாக்டர்‌. இரா. சபேசன்‌, 'அணுக்கருவியல்‌”, தமிழ்நாட்டுப்‌ பாடநூல்‌ நிறுவனம்‌, 1978,

4. Robley,D. Evans, ‘The Atomic Nucfeus’. McGraw-Hill Book Company. New york 1970.

5. Allex. E.S. Green, ‘Nuclear Physics’. McGraw- Hill Book Company, New york 1955,

அணுக்கருத்‌ திருப்புமை

அணுக்கருத்‌ துகள்கள்‌ (1140016009) (புரோட்டான்‌, நியூட்ரான்‌) குறிப்பிட்ட சுற்றுப்‌ பாதையில்‌ (1154 ஓட்டி) இயங்குவதாலும்‌, அவற்றின்‌ தற்சுழற்சியாலும்‌ (Spin) அணுக்கருக்காந்தக்‌ இருப்புமையைப்‌ (14526016 சாடி பெற்றுள்ளன்‌. அணுக்கருத்‌ இருப்புமையை (Nuclear moment) orci ser gpa, ay பொருளின்‌ தன்மை, மூலக்‌ கூறின்‌ அமைப்பு (Molecular structure)