590 அணுக்கருத் துகளியல்
ந90 அணுக்கருத் துகளியல்
இப்பண்பைப் பயன்படுத் இக் சதிர் ஓரிடத் தனிமம் கலந்த ல பொருள்களின் காலத்தைக் கணக்கிட இயலும். இது சால அளவிட்டு முறையாகும். இம்முறையைப் பயன்படுத்திப் பூமியின் வயதும் தொல்பொருள்சளின் வயதும் கணக்கிடப் படுகன் றன.
2. தடங்காண் (112000)முறை
கதிர் ஐரிடத் தனிமங்களின் இருப்பிடத்தை அதன் கதிர்வீச்சு காட்டிக் கொடுத்து விடுகிறது. இக்கதர் வீச்சைத் தடங்காண் கருவிகள் (1021601018) மூலம் கண்டு கொள்ள இயலும். எனவே, ஒரு கதிர் ஒரிடத்தனி மங்கள் சிறு அளவிலேயே மற்றொரு பொருளோடு
கலந்திருப்பினும், அப்பொருளின் இருப்பிடத்தை எளிஇல் அடையாளம் காணலாம் இம்முறை பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக் காட்டாக மருத்துவத்துறையில் மூளைக்கழலை
போன்றவற்றின் இருப்பிடத்தை அறியவும், பல்வேறு நோய்சளைக் சுண்டுகொள்ளவும் இம்முறை பயன் படுகிறது.
9: கதிர்வீச்சு முறை
கதிர்வீச்சின் விளைவுகளைப் ர” பயன்படுத்துவது கதிர்வீச்சு முறையாகும். பல துறைகளில் இம்முறை பயன்படுத்தப்படுகறது. எடுத்துக்காட்டாக மருத்துவத் துறையில், லேண்டாத புற்று நோய் செல்களை (0 யல அழிக்க இம்முறை பயன்படுகிறது.
8. கதிர் தூண்டிப் பகுத்தல் முறை
ஒரு பொருளுக்குக் கஇிரியக்கத்தைச் செயற்கை முறையில் வழங்க இயலும்: அவ்வாறு சுதிரூட்டப்பட்ட பொருளினின்று வெளிப்படும் கஇர்வீச்சின் தன்மை, ஆற்றல் போன்றவற்றை அளப்பதனால் ஒரு குறிப் பிட்ட தனிம௰ம் அப்பொருளில் உள்ளதா, எந்த அளவில் உள்ளது எனக் சுணக்டிட முடியும். இது கதிர்
தூண்டிப் பகுக்கும் மூறையாகும். தொல்பொருள் ஆராய்ச்சி போன்றவற்றுக்கு இது மிகவும் பயன் படுகிறது.
செயற்கைக் கதிர் ஓரிடத்தனிமங்களை உண்டாக் கவும், அணுக்கருவைத் தாக்கி வினை புரியவும் அதிக ஆற்றல். கொண்ட ஆல்ஃபா, பீட்டா, நியூட்ரான், டியட்ரான் (இலமா௦ய). போன்ற துகள்கள் தேவைப் படுகின்றன. இவற்றுள் மின்னேற்றம் பெற்றவற்றிற்கு ஆற்றல் வழங்க உதவும் கருவிகள் துகள் முடுக்கி களாகும். அணுக்கருவைப் பற்றிய பல உண்மைகளை அறிந்து கொள்வதற்கும், ஒரு தனிமத்தை மற்றொன் றாக மாற்றுவதற்கும், கதிர் ஓரிடத்தனிமங்கள் உண் டாக்குலதற்கும் துகள் முடுக்கிகள் மிகவும் தேவை, தற்போதுள்ள சில ஆற்றல் வாய்ந்து துகள் முடுக்கெகள்
அதிக எடையுள்ள துகள்களையும் முடுக்க வல்லவை. இவை தற்போது நடைபெற்று வரும் மீக்கனத் தனி மங்கள் (Super Heavy Elements) உண்டாக்கும் ஆய்வு களில் முதன்மையான பங்கேற்கின்றன .
அணுக்கருப்பிளவு -பிணைப்பு
உயர் அணு நிறையும், குறைந்த நிலைப்புத் தன்மையும் உடைய யுரேனியம் போன்ற பொருள்களை நியூட்ரான் தாக்குகையில் அணுக்கருப்பிளப்பு நிகழ வாய்ப்புண்டு. இப்பிளப்பில் மிருந்த ஆற்றல் வெளிப் படுகிறது. இவ்வாற்றலைப் பயன்படுத்தி அணு உலை சனின் மூலம் மின் ஆற்றல் பெறப்படுகிறது. இதே போன்று குறைந்த அணு எடையுள்ள அய்ட்ரஜன் (Hydrogen), igugeiig fused (Deutrium) Gurerm அணுக் கருக்கள் ஒன்றோடொன்று பிணையும்போதும் ஆற்றல் வெளியாகிறது. இவ்வாற்றலைப் பயன்படுத்தி மின் னாற்றலை உற்பத்தி செய்ய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. பிணைப்பு ஆற்றுலைக்கொண்டு மின் சாரம் உற்பத்து செய்தல் நடைமுறையில் இயலு மானால், பூமியில் அதிகமாகக் கடைக்கும் அய்ட் ரஜனைக் கொண்டு குறைந்த செலவில் மிகுந்த ஆற்ற லைப்பெற்றிடலாம்.
அணுலின் கட்டமைப்பில் பங்கேற்றுள்ள எலக்ட் ரான், புரோட்டான், நியூட்ரான் தவிர வேறு பல அடிப்படைத்துகள்கள் உள்ளதை உயர் ஆற்றல் இயற் பியலாளம் கண்டுபிடித்திருக்கின் றார்கள் . இவற்றின் எண்ணிக்கை இன்றைக்கு 200-க்கும் மேற்பட்டதாக இருக்கின்றது.
அடிப்படைத் துகள்களுக்கெல்லாம் அடிப்படையான மூலத்துகளாக குவார்க் (Quark) என்ற துகள்கள் இருக்கலாம் என்று அறிவியலறிஞர்கள் கருதுகின்றார்கள். குவார்க்குள் இருப்பது இன்னும் சோதனை வாயிலாக மெய்ப்பிக்கப்படவில்லை என்றாலும், அவற்றின் தோற்றம், அடிப்படைத் துகளிடை வினைகள், அலை தொடர்பான வேறு பல ௨ண்மைகள் இவற்றை ஒரு சேர விளக்கக் கூடியவையாக இருக்கின்றன என்பதால் மறுப்பதற்கில்லை.
இ.சா.
நூலேோதி
1, அணுவைப் பற்றி - பம்பாய்த் தமிழ்ச் சங்கம் வெளியீடு, பம்பாய், 1968.
2. David Halliday. Introductory Nuclear Physics, Wiley, New York 1955.