பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/740

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

704 அணு மூலக்கூறு மோதுகை

704 அணு, மூலக்கூறு மோதுனக

நூலோதி

Tata-McGraw - Hill Encyclopaedia of Science and Technology-1977

அணு, மூலக்கூறு மோதுகை

மோதுகை (021115100) என்னும்‌ சொல்‌, பொதுவாக ஒரு பொருள்‌ மற்றொரு பொருளோடு மோதி விலகி ஓடுவதைக்‌ குறிக்கும்‌. ஆனால்‌, இயற்பியலில்‌ மோதுகை என்று சொல்லும்போது அது இரண்டு பொருள்கள்‌ ஒன்றையொன்று தொட்டு மோதி விலகி ஒடுவதை மட்டும்‌ குறிப்பதில்லை. எடுத்துக்காட்டாக, ஓர்‌ ஆல்‌ஃபா - துகள்‌ (கநக றகா(4016) ஓர்‌ அணுக்கருவை தோக்கிச்‌ செல்லும்‌ போது அத்துகளானது அணுக்‌ கருவைத்‌ தொடாமலே சிதறி ஓடிவிடக்கூடும்‌. இதற்‌ கும்மோதுகை என்றுதான்‌ பெயர்‌, ஆசையால்‌ இரண்டு பொருள்கள்‌ ஒன்றையொன்று அணுக, தொட்டோ தொடாமலோ, சிதறி ஓடும்‌ நிகழ்ச்சியை மோதுகை என்று சொல்லலாம்இத்த மோதுகையில்‌ ஒரு பொருளின்‌ நீலை இன்னொரு பொருளின்‌ திலை யில்‌ மாற்றம்‌ செய்கிறது, அப்பொழுது பொது லாக ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு ஆற்றல்‌ பரிமாற்றம்‌ (ராக6) ஏற்படக்கூடும்‌.

Bom பொருள்‌ இயக்கவியலில்‌ (Rigid body dynamics) இரண்டு பொருள்களுக்கிடையே நிகழும்‌ மோதுகை பற்றிப்‌ படிக்கும்பொழுது அவை ஒன்றை யொன்று இடித்து விலகுகின்றன எனப்‌ பார்க்கிறோம்‌. அப்பொழுது அவை இடித்து நிற்கும்‌ அந்தச்‌ சிறிய . நேரத்தீல்‌ மட்டுமே அவற்றிற்கிடையே விசை (10105) செயல்படுகின்றது.இந்த விசை அப்பொருள்கள்‌ ஒன்றை யொன்று தொட்டு இடிப்பதால்‌ தோன்றும்‌ இயக்க விசை ஆகும்‌. இந்த மோதுகையில்‌ மொத்த உந்தம்‌ (Momentum) மாறுவதில்லை. அதாவது மோதுகைக்கு முன்னர்‌. இருக்கும்‌ மொத்த உந்தம்‌ மோதுசைக்குப்‌ பின்னர்‌ இருக்கும்‌ மொத்த உந்தத்துற்குச்‌ சமமாக இருக்கும்‌.

விறை பொருள்களுக்கிடையே மட்டுமின்றி அணுத்‌ துகள்கள்‌, அணுக்கள்‌, மூலக்கூறுகள்‌ முதலியவற்றிற்‌ இடையேயும்‌ மோதுகைகள்‌ நிகழ்கின்றன. இந்த மோதுகைகளில்‌ மோதும்‌ பொருள்களுக்கிடையே செயல்படும்‌ வீசை வேறு வகையைச்‌ சேர்ந்தது. ஓர்‌ ஆல்‌ஃபா - துகள்‌ ஓர்‌ அணுக்கருவில்‌ மோதுகை கொண்டு இதறுகிறது என்றால்‌, இந்தச்‌ சிதறலுக்கு, அணுக்‌ சருவிற்கும்‌ ஆல்பா - துகளுக்குமிடையே செயல்‌ படும்‌ மின்னிலையியல்‌ (Electrostatic) விசையே காரணம்‌ ஆகும்‌. ஒரு நியூட்ரான்‌ துகள்‌ ஒரு புரோட்‌ டான்‌ துகளில்‌ மோதுகை கொண்டு சிதறும்பொழுது இந்தச்‌ சிதறலுக்குக்‌ காரணமாக அமைவது நியூட்‌ சானுக்கும்‌ புரோட்டானுக்கும்‌ இடையே செயல்படும்‌

அணுக்கரு (Nuclear) fang ஆகும்‌, ஆகையால்‌ அணுத்‌ துகள்கள்‌, அணுக்கள்‌, மூலக்கூறுகள்‌ “Muah ys இடை.யே நிகழும்‌ மோதுசைகளை ஆராய்வதன்‌ வாயி லாக அவற்றுக்கிடையே செயல்படும்‌ விசைகளின்‌ தன்மைகளை அறியலாம்‌. ஆனால்‌ இத்த மோதுசை களுக்குச்‌ ஏறப்பாகப்‌ பயன்படுவது குவாண்டம்‌ இயக்க வியல்‌ (பய கை்காப்‌௦6) ஆகும்‌. ஆயினும்‌ இயற்‌ பியல்‌ பழங்கொள்கைகளிலும்‌ பெரும்பாலானவை இந்த மோதுகைகளுச்குப்‌ பொருந்துகின்‌ றன.

மோதுகை வகைகள்‌: மோதுகை, பொதுவாக இரண்டு வகைகளாகப்‌ :பிரிக்கப்படுகிறது. ஒன்று மீள்‌ (81814௦) மோதுகை; மற்றெரன்று மீளா (Inelastic) மோதுகை. மூதல்வகை மே துகையில்‌, மோதும்‌ துகள்களின்‌ இயக்கு ஆற்றல்‌ மாறுவதில்லை. அதாவது, மோதும்‌ துகள்‌ சளின்‌ மொத்த இயக்க ஆற்றல்‌ மோதுகைக்கு முன்ன ரூம்‌ பின்னரும்‌ ஒரே அளவாசு இருக்கும்‌. ஆனால்‌ இரண்டாவதான மீளா மோதுகையில்‌, மோதும்‌ துகள்‌ களின்‌ இயச்க ஆற்றல்‌ மோதுகைக்கு முன்னரும்‌ பின்ன ரும்‌ மாறுபட்டிருக்கும்‌, விறை பொருள்‌ இயக்கலியலில்‌ நிகழக்கூடிய மீளா மோதுகைகளில்‌, மோதும்‌ பொருள்களின்‌ இயக்க ஆற்றலில்‌ எப்பொழுதும்‌ குறை வே ஏற்படும்‌. குறைவுபடும்‌ இந்த ஆற்றல்‌, மோது கையின்போது வெப்பமாக மாறி மறைந்துவிடும்‌. விறை பொருள்‌ இயக்கவியலில்‌ மோதுகைக்குப்‌ பின்னா்‌ ஆற்றல்‌ அதிகரிக்கும்‌ சூழ்நிலைகளும்‌ உண்டு. எடுத்துக்‌ காட்டாக, ஒரு குறிப்பிட்ட மோதுகையில்‌, வேதியியல்‌ வினை ஒன்று தூண்டப்பட்டு வெடித்தல்‌ (Explosion) நிகழுமானால்‌ அதில்‌ ஆற்றல்‌ அதிகரிக்கும்‌, அணுக்கரு, அணு, மூலக்கூறு மோதுகைகளில்‌ இத்துகள்கள்‌ தாழ்ந்த ஆற்றல்‌ நிலைகளிலிருந்து உயர்ந்த ஆற்றல்‌ நிலைகளுக்குக்‌ சளர்வுற்று உயரும்‌ வாய்ப்பு உள்ளது. அப்பொழுது இவற்றின்‌ ஆற்றல்‌ அதிகரிக்கும்‌. இவ்வாறு மீளா மோதுகைகளில்‌ ஆற்றல்‌ அதிகரிப்பதோ குறை வகோ இயலுவதாகும்‌.

அணுக்கள்‌ அல்லது மூலக்கூறுகளுக்கிடையே நிகழும்‌ மோதுகைகளில்‌ கதிர்வீச்சு வெளிப்படுவதும்‌ உண்டு. அத்தகைய மோதுகைகளுக்குக்‌ கதிர்வீச்சு மோதுகை சுள்‌ (88901௧0௭4௦ 0011161006) என்று பெயர்‌. மற்றவை கதிர்வீசா (1100-1௨01211/6) மோதுகைகள்‌ எனப்படும்‌. இல மூலக்கூறுகள்‌ மோதுகையுறும்‌ பொழுது அவற்றில்‌ உள்ள அணுக்களின்‌ அமைவிடங்களில்‌ மாற்றங்கள்‌ ஏற்படக்கூடும்‌. பொதுவாக, எந்த ஒரு மோதுகை யிலும்‌ சிதறல்‌ (5௨6) ஏற்படுகிறது, அதாவது, மோதுகைக்கு உள்ளாகும்‌ துகள்களின்‌ இயக்கத்திசை களில்‌ மோதுகை காரணமாக மாற்றங்கள்‌ ஏற்படு கின்றன.

ஒரு மோதுகையில்‌ பல அமைப்புகள்‌ (Systems) பங்கு கொள்ளக்‌ கூடும்‌. இரண்டு அமைப்புகள்‌ மோதுகையுறுவதால்‌, மோதுகைக்குப்‌ பின்பு இரண்டுக்கு மேற்‌பட்ட அமைப்புகளும்‌ உருவாகலாம்‌. இத்தகைய