பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/750

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

714 அணை

714 அணை




முழுமட்ட நீர்‌ அளவ

இணைக்கும்‌ வெட்டுகள்‌

ந தீர்‌ ஊடுருவாது \

(புல்‌ வளர்க்கப்பட்டிருக்கும்‌ alg

ந்த்‌ ஊடுருவும்‌



  • ்‌

படப்‌ 2, மண்‌ அணைகலின்‌ குறுக்கு வெட்டுத்‌ தோற்றம்‌

களை விட இயந்திர ஆற்றலை அதிகமாகப்‌ பயன்படுத்‌ தவேண்டிய௰ தேலை ஏற்படும்‌. வேலைத்திறனும்‌, நுணுக்சகமானதால்‌ விவரம்‌ தெரிந்த பணியாட்கள்‌ தேவைப்படுவா்‌. சாதாரண வேலையாட்கள்‌, கல்‌ தச்சர்கள்‌ வேலைவாய்ப்பு அருகும்‌ பொதுவாக வெப்பம்‌ மிகுந்த நம்‌ நாட்டில்‌ கற்காரை அணை அமைக்க தாம்‌ மூன்‌ வருவதில்லை. தமிழ்‌ நாட்டில்‌ இதுவரை கட்டிய 48 அணைகளிலும்‌ கற்கட்டிடமே பயன்படுத்தப்பட்டது, முன்னால்‌ ஏற்பட்ட பெரியாறு அணையையும்‌, மேட்டூர்‌ அணாயையும்‌ கற்காரையால்‌ அமைக்க வேண்டுமென்று இட்டமிட்டுத்‌ தொடங்‌ இனாலும்‌ பின்‌ கழ்கட்டிடமாகத்தான்‌ செய்து முடித்‌

தார்கள்‌.

மண்‌ அணை. இக்காலங்களில்‌ 200 மீட்டருக்கும்‌ மேலான உயரத்திற்கும்‌ மண்‌ அணைகள்‌ அமைக்கப்‌ படுன்றன. தமிழ்‌ நாட்டிலேயே சுமார்‌ 40 மீட்டர்‌ உயரமான மண்‌ அணையைப்‌ பவானிசாகரில்‌ அமைத்‌ இருக்கின்‌ றனர்‌. மிகப்‌ பழங்காலத்தில்‌ அமைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏரிக்‌ கரைகள்‌ மண்‌ கரைகளே ஆகும்‌. தேக்க வேண்டிய நீரின்‌ ஆழம்‌ அதிகமாகும்‌ போது தீரின்‌ அழுத்த ஆற்றலும்‌ அதனால்‌ சளடுருவி வெளியாகக்‌ கூடிய இறனும்‌, அலைகளால்‌ மோதி அழிக்கக்‌ கூடிய வலிவும்‌ அதிகமாகிறது. அதற்கேற்ப மண்‌ அணையின்‌ பரிமாணமும்‌ உருவமும்‌ மண்‌ தன்‌ மையும்‌ லஉடிவமைக்கப்படவேண்டும்‌.

மண்ணினால்‌ அமைக்கட்படும்‌ கரையை எவ்வளவு அடர்த்தியாக அமைத்தாலும்‌, அதற்குத்‌ தகுந்த தர மான மண்ணைத்‌ தேர்ந்தெடுத்தாலும்‌ ௮தன்‌ மூலம்‌ நீர்‌ சசவதைத்‌ தவிர்க்க முடியாது, எத்தகைய மண்ணி wh சில புரைகள்‌ இருந்தே தீரும்‌, அதன்‌ மூலம்‌ நீர்‌

சுந்து அழுத்தத்தை உண்டாக்கும்‌. மேலும்‌ கூயும்‌ நீரின்‌ வேகம்‌ தேக்கிய நீரின்‌ உயரத்தைப்‌ பொறுத்தும்‌ மண்ணின்‌ தரத்தைத்‌ பொறுத்தும்‌ அமையும்‌. தேங்கி நிற்கும்‌ தீரின்‌ உயரம்‌ அதிகமாக ஆக ஆக அழுத்தம்‌ அதிகமாகும்‌. எனவே கரியும்‌ நீரின்‌ வேகம்‌ அதசமாகும்‌. இந்நீர்‌ கரைக்குப்‌ பின்புறம்‌ வெளிப்படும்‌ போது மண்ணையே அரிக்கும்‌ இறன்‌ பெறக்கூடும்‌. சிறிது சிறி தாக அரிப்பதால்‌ மண்‌ கரையே இடிந்து விழுந்து உடையும்‌ வாய்ப்பு ஏற்பட்டு விடலாம்‌. அதனால்‌ மண்‌ அணையை வடிவமைக்கும்‌ போது ஊடுருவிச்‌ செல்லும்‌ நீரின்‌ வேகத்தைக்‌ குறைப்பதற்கும்‌ மண்ணரிப்பைத்‌ தவிர்த்துக்‌ தெளிந்த நீர்‌ மட்டும்‌ வடிந்து போவதற்கும்‌ வழி செய்ய வேண்டும்‌.

பூமியில்‌ கிடைக்கும்‌ மண்‌ பல வகை. மண்‌ துகள்களின்‌ பரிமாணத்தைப்‌ பொறுத்து சரளை. மணல்‌, வண்டல்‌, களி என அவற்றைப்‌ பிரிக்கலாம்‌. ஆயினும்‌ இயற்‌கையில்‌ மண்‌ ஒவ்வோர்‌ இடத்திலும்‌, ஒவ்வொரு தன்மையுடையதாக இருக்கும்‌. சரளையோ, மணலோ அதிகமாகக்‌ கலந்து காணப்பட்டால்‌, அதில்‌ நீர்‌ எளிதில்‌ ஊடுருவிச்‌ செல்லும்‌. களியும்‌, வண்டலும்‌ அதிகமாகச்‌ சேர்ந்திருப்பின்‌ நீர்‌ கசியும்‌ தன்மை சிறிது குறைவாகும்‌. அத்தகைய மண்‌ நீர்‌ ஊடுருவாத்‌ தன்மையது (Impervious) எனக் கொள்ளப்படும்‌. மண்‌ அணையின்‌ உருவத்‌தில்‌ நடுப்பாகம்‌ நீர்‌ கசியாத்‌ தன்மை கொண்ட மண்ணும்‌, அதை உள்ளே சார்ந்தாற் போல்‌, மேற்‌போர்வையாக எளிதில்‌ ஊடுருவிச்‌ செல்லும்‌ தன்மை கொண்ட மண்ணும்‌, கரையின்‌ பின்‌ புறத்திலேயே கடைக்காலில்‌ கசியும்‌ நீர்‌ தெளிவாகும் வகை வடிகாலும்‌ அமைக்கப் பட்டிருக்கும்‌ (படம்‌-2), மேலும்‌, அணைக்கரையின்‌ முன்‌ பக்கம்‌ அதாவது நீர்‌ தேங்கும்‌