பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/757

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணை 721

படும்‌, கடைக்காலில்‌ ஆங்காங்கே இவந்திரங்களினால்‌ பாறையில்‌ துளைகள்‌ போடப்படும்‌, துளைகளின்‌ ஆழம்‌ 6 மீட்டர்‌, 10 மீட்டர்‌, 20 மீட்டர்‌ என்று தேவைக்கேற்ப நிர்ணயிக்கப்படும்‌. அவற்றின்‌ விட்டமும்‌ அப்படியே 5 செ.மீ. முதல்‌ 70 செ.மீ. வரை இருக்க லாம்‌... இத்தகைய துளைகள்‌ போடப்பட்டு அவை காந்தையம்‌ சண்ணீளரயும்‌ உட்செலுத்தி நன்றாகச்‌ சுத்தப்படுத்தப்படும்‌. அவ்வாறு செய்வதில்‌ ஆழத்தில்‌ பாறையில்‌ ஏதேனும்‌ பிளவுகள்‌ இருப்பின்‌ அவை சுத்தப்‌ படுத்‌ தப்பட்டுப்‌ பின்‌ சிமெண்ட்‌ கரைசலை உட்‌ செலுத்தும்போது அப்‌ பிளவுகளில்‌ அது சென்றடையக்‌ கூடும்‌. மின்‌ சிமெண்டைகத்‌ தகுத்தவாறு நீரில்‌ சேர்த்துக்‌ கலக்கச்‌ சல சாதனங்களின்‌ மூலம்‌ இத்துளை களில்‌ காற்றமுத்த ஆற்றலால்‌ அது உள்‌ செலுத்தப்‌ படும்‌. இந்த சிமெண்ட்‌ கரைசல்‌ பிளவுகளில்‌ ஏறிப்‌ பருந்து அடைத்து அவற்றை மூடிவிடும்‌. இந்த வேலை யில்‌ சுவனம்‌ செலுத்த வெண்டிய முக்கிய இரு அம்சங்‌ கள்‌ சிமெண்டு, நீர்‌ சேர்க்கும்‌ அளவுகள்‌ எவ்வளவு என்று தீர்மானிப்பது, மற்றும்‌. எந்த அளவு அழுத்த ஆற்றலோடு அதைத்‌ துளையீன்‌ மூலம்‌ செலுத்த வேண்டுமென்பது. இது பெரும்பான்மையும்‌ பட்டறி வினால்‌ நீர்மானிக்கப்படுகிறது. சிமெண்ட்‌ கரைசல்‌ மிகக்‌ கெட்டியாக இருந்தால்‌ பிளவுகளில்‌ நன்றாக ஏறிப்‌ பாய்ந்து அடையாது. காற்று அழுத்த ஆற்றலை அதிகமாக்கிப்‌ பாறையின்‌ அடியில்‌ இருக்கும்‌ வெடிப்பு கள்‌ பேலும்‌ விரிந்துவிடும்‌ அபாயமும்‌ உண்டு. இவ்‌ வாறு செய்வதால்‌ பாறையின்‌ பிளவுகளில்‌ நீர்‌ கோடுருவிச்‌ செல்வது ஒரளவு தடுக்கப்படுவதோடு பாறை யும்‌ உறுதிப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட கடைக்கால்‌, சட்டிமானம்‌ தொடங்கத்‌ தகுஇயாடறது.

கடைக்கால்‌ தயாரிக்கப்பட்ட .பின்‌ கட்டிடத்தை வடி வமைப்புக்குத்‌ தக்கவாறு எழுப்ப வேண்டும்‌. சில இடங்‌ களில்‌ கற்காரை இட வேண்டியும்‌ வரும்‌. பொதுவாகக்‌ சருங்கல்‌ கட்டிடத்தில்‌ ஒவ்வொருவரீயும்‌ 90 செ. மீ. உயரமாக அமையும்‌. வழிந்தோடும்‌ பகுதியிலும்‌, மதகு ஆமையும்‌ பகுதியிலும்‌ பல்வேறு சிறு நுணுக்கங்கள்‌ கவனிக்கப்பட வேண்டிவரும்‌, கட்டிடம்‌ எழும்பும்‌ போது அவற்றையெல்லாம்‌ தகுந்த வரைபடங்களின்‌ உதவியைக்‌ கொண்டு தவறு ஏற்படாமல்‌ செய்விப்பதில்‌ மிகுத்த கவனம்‌ தேவை.

கட்டிடத்தில்‌ சுரங்கப்பாதை ஒரு முக்கிய அமைப்பு. இச்சுரங்கம்‌ கட்டிடத்தினுள்‌ சில அம்சங்களைக்‌ கண்‌ காணிக்க உதவுறது. முக்கியமாகக்‌ கடைகாலில்‌ சுசியும்‌ நீரின்மேலழுத்தத்தைக்‌ குறைக்க இது அவயம்‌, இதற்காகத்‌ துளைக்கப்பட்ட 10 செ. மீ, துளைகளின்‌ வழியே அது மேலேறி இச்சரங்கத்தில்‌ ஏற்படுத்தப்படும்‌ ஒரு வாய்க்கால்‌ வழியே ஓடிவெளியேறிவிடும்‌, அதே போல்‌ கட்டிடத்தில்‌ சசியும்‌ நீரும்‌ ஆங்காங்கு 20 செ. மீ. வீட்டத்தில்‌ அமையும்‌ துளைகளின்‌ மலம்‌ 8ழே சேர்ந்து சுரங்க வாய்க்காலில்‌ வெளியேறிவிடும்‌. இவ்‌ வசைக்‌ கடைகாலிலும்‌ கட்டிடத்திலும்‌ நீர்த்‌ தேக்‌

இக, 1-46

721 அணை

கத்தில்‌ தேக்கன நீரின்‌ அழுத்தத்தினால்‌ க$யும்‌ நீர்‌ சுரங்கப்‌ பாதை வாய்க்கால்‌ வழி வெளியேற்றப்படுவ தால்‌ அணைக்கு ஊறு விளையாது. இல்லையேல்‌ ஊறும்‌ நீர்‌ சொட்டுச்‌ சொட்டாகச்‌ சறிதேயாயினும்‌, மேல்‌ அழுத்தத்தினால்‌ அணையின்‌ நிலைப்பேற்றினைப்‌ பாதிக்கும்‌.

வழித்தோடியற்ற பகுதியில்‌ அணை வடிவமைப்புக்‌ கேற்றவாறு அகலம்‌ குறைந்து கொண்டே போய்‌ மேல்‌ அளவில்‌ ஒரு பானை அமையுமாறு முடியும்‌. வழித்‌ கோடிப்‌ பகுதியின்‌ வடிவமைப்பு வழியில்‌ நீர்‌ வேச மாகவும்‌ கட்டிடப்‌ பகரு௫ிக்கு மேல்‌ இணைந்தவாறும்‌ குதித்து ஒடும்‌ வசையில்‌ இருக்கும்‌, அதற்குமேல்‌ கட்டைகளும்‌, கண்களுமாகப்‌ பிரிக்கப்பட்டு கண்களுக்‌ குப்‌ பெரிய இரும்புக்‌ கதவுகள்‌ பொருக்தப்பட்டிருச்‌ கும்‌. இக்ககவுகளை வெள்ளம்‌ வரும்போது தூக்கி இறக்கி மிகை நீரைத்‌ தகுத்தவாறு வெளியேற்றக்‌ கப்பி அமைப்புகளும்‌ மின்சாரத்தினால்‌ இயங்கும்‌ இயத்திரங்‌ களும்‌ பொருத்தப்படும்‌. இவற்றையெல்லாம்‌ இயக்கவும்‌ பழுதுபார்க்கவும்‌ ஒரு பாலமும்‌ வேண்டும்‌.

நீர்‌ குதித்தோடும்‌ போது மிகுந்த வேசுமுண்டாகும்‌, அதே வேசுத்தில்‌ ஆற்றில்‌ கலந்து ஓடிவிட்டால்‌ மிகுந்த அரிப்புகளை உண்டாக்கக்‌ கட்டிடத்ின்‌ கடை காலுக்கே ஆபத்து உண்டாக்கும்‌. அதனால்‌ வழிந்‌ தோடியின்‌ அமைப்பிலேயே குதித்துவரும்‌ நீரைக்கட்டுப்‌ படுத்த அதைக்‌ கற்காரைத்‌ தணிப்புத்‌ தொட்டி யிலேயே (841112 8510) குதிக்க விட்டு, வேகத்தையும்‌, ஆற்றலையும்குறைத்து, ஆற்றில்‌ வெளியேற்றக்‌ தகுத்த தடுப்புச்‌ சுவரும்‌, தடுப்புக்‌ கட்டைகளும்‌, கற்காரைத்‌ தளமும்‌ ஏற்படுத்தப்படும்‌. இப்பகுதியின்‌ வடிவமைப்‌ பில்‌ நாடோறும்‌ புதிய முன்னேற்றங்கள்‌ தோன்றி வருகின்றன.

தமிழ்‌ நாட்டில்‌ பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகா மையில்‌ செயல்படும்‌ நீரியல்‌ ஆராய்ச்சிக்‌ கழகத்தல்‌ இவ்வகையில்‌ கண்டு பிடித்த ஓர்‌ அமைப்பு உலகெங்கும்‌ தடைமுறைக்கு வந்துள்ளது.

மதகுகள்‌ அமையும்‌ பகுதியில்‌ மதகுக்‌ கண்கள்‌ சட்‌ டிடத்தில்‌ ஏற்படுத்தப்படுடி அதிலும்‌ மதகுக்‌ கதவு களும்‌ அவற்றை இயக்கச்‌ கனங்களும்‌ இயந்திரக்‌ களும்‌ பொருத்தப்படும்‌, வுகளில்‌ ஏதேனும்‌ பழுது ஏற்பட்டால்‌ நீரை Memoir அவற்றைப்‌ பழுது பார்க்க வேண்டுமாதலால்‌ ஓவ்வொரு கண்ணுக்கும்‌ மதகுக்கும்‌ சுதவிற்கு மூன்‌ வேறொரு மாற்றுக்‌ கதவை இறக்க ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டிருக்கும்‌.

அணையின்‌ மேல்‌ பகுதியில்‌ நல்ல சாலை அமைத்தல்‌, ஆங்காங்கே படிகள்‌ அமைத்தல்‌, மின்‌ விளக்குகள்‌ எரிய விடுதல்‌, சாலை அமைத்தல்‌, நல்ல தோட்டங்கள்‌ உண்டாக்குதல்‌, அணைத் தளத்தைப்‌ பார்வையிடவும்‌, பராமரிக்கவும்‌ நன்கு உதவுகின்றன. அணையும்‌, அணைக்கு முன்‌ நீர்த் தேக்கமும்‌, அணைக்குப்‌ பின்‌ பூத்‌தோட்டங்களும்‌ சுற்றுலாப்‌ பயணிகளும்‌ மற்றவர்களும்‌