பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/779

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தி 743

கொடுக்கின்றன. இதுபோன்று சற்று வெப்பமும்‌ சூரிய வெளிச்சமும்‌ உள்ள நாட்களில்‌ பறிக்கப்பட்ட பூக்கள்‌ மழைக்காலங்கள்‌ அல்லது மேகங்கள்‌ கூடிய நாட்களில்‌ பறிக்கப்பட்டவைகளைவிட அதிக பலன்‌ கொடுப்ப தோடல்லாமல்‌ உயர்ந்த தன்மையுடைய பொருளைப்‌ பெற்றிருக்கின்றன விடியற்காலையில்‌ பறிக்கப்பட்ட பூக்கள்‌, பகல்‌ அல்லது பிற்பகலில்‌ பறிக்கப்பட்டவை களைவிட மேலான நறுமணம்‌ பெற்றிருக்கும்‌. புதி தாகப்‌ பறிக்கப்பட்ட பூக்களில்‌ முன்பே பறித்துச்‌ சேமித்து வைக்கப்பட்டவைகளைவிட அதிக அளவில்‌ எண்ணெய்‌ அடங்கியிருக்கின் றது.

பொருளாதாரச்‌ சிறப்பு : பல்கேரியன்‌ அத்தர்‌ சோப்பு களுக்கும்‌, புகையிலைக்கும்‌ மணமூட்டுவதற்குப்‌ பயன்‌ படுத்தப்படுகன்றது. பானங்கள்‌, மதுபானங்கள்‌ ஆகிய வற்றிற்கு மணமூட்டிவதற்குக்‌ குறைந்த அளவு பயன்‌

படுத்தப்படுகின்றது. இதற்குப்‌ பித்தப்பையிலுள்ள (Gall bladder) #Hsener (Stones) கரைக்கக்கூடிய தன்மையும்‌, பாக்டீரியாக்களைக்‌ கொல்லக்கூடிய

தன்மையும்‌ இருப்பதாகக்‌ கூறப்படுகின்றது.

நூலோதி

Hill, A.F. Economic Botany, Tata McGraw- Hill Book Co., New Delhi, 1952.

The Weatth of india. CSIR Publ. New Delhi. Vol. IX. 1972.

அத்தி

இது மோரே? (64௦720095)க்‌ குடும்பத்தைச்‌ சார்ந்‌ தது. இக்குடும்பம்‌ ஒரு பூவிதழ்‌ வட்டத்தை (௨11210) உடைய இருவிதையிலைக்‌ குடும்பங்களில்‌ ஒன்றாகும்‌- தாவரவியலில்‌ இதற்கு :பிக்குஸ்‌ குளோமராட்டா ([”1005 ரண ௭2௧ ௦௩0.) என்று பெயர்‌, நாட்டு அத்தி என்ற மறுபெயரும்‌ இதற்கு உண்டு. ஃபிக்குஸ்‌ (Ficus) பேரினத்திலுன்ள பெரும்பாலான அிற்றினங்களை அத்தி என்ற பொதுப்பெயரினாலும்‌, இவற்றில்‌ சில வற்றை வேறுபடுத்துவதற்குச்‌ இறப்புப்‌ பெயர்களிட்டும்‌ அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மையத்தி அல்லது தேனத்தி, பேயத்தி அல்லது சோனா அத்தி, சல்‌ அத்தி, கொடி அத்தி, மரம்‌ தண்ணி அத்தி, ஆகிய வற்றைக்‌ கூறலாம்‌. இந்தப்‌ பேரினம்‌ வெப்பமண்டலப்‌ பகுஇகளில்‌ (170015) முழுவதும்‌ பரவியிருக்கின்றது: இந்தியாவில்‌ ஏறக்குறைய 112 ற்றினங்களுண்டு, அத்தி இந்தியாவின்‌ பல பகுதிகளில்‌ பரவியிருக்கின்றது. ஆற்றோரங்களிலும்‌, மலைச்சரிவுகளிலும்‌ காணப்படு இன்றது. மற்றும்‌ தாட்டுப்புறங்களில்‌ இது வளர்க்கப்‌ படுகின்றது. இ.து 2000 மீ. உயரம்‌ வரை உள்ள பசுமை நிநக்‌ சாடுசளில்‌ வளர்கின்றது.

அத்தி. 743

சிறப்புப்பண்புகள்‌: இது நடுத்தர உயரத்தை அடையக்‌ கூடிய இலையுதிர்‌ மரமாகும்‌, பலடஏளைசுளைத்‌ தோற்றுவித்துப்‌ பரந்து காணப்படும்‌, சில சமயங்களில்‌ விழுதுகள்‌ தோன்றக்கூடும்‌. இலைகள்‌ தனித்தவை; மாற்றமைவுகொண்டவை (Alternate Phyllotary); இலையடிச்சிகல்கள்‌ உண்டு (Stipules); முட்டை (01216) அல்லது எலிப்டிக்‌ (11111௦) வடிவமுடையவை, மஞ்சரி கனிகள்‌ போன்று தோன்றுகின்ற தனிவகை யாகும்‌. இது ஏறக்குறைய குடுவை அல்லது பேரிக்காய்‌ onus Pen (Pyciform) Qs நுனிப்பாகத்தில்‌ சிறு துளையைப்‌ பெற்றும்‌, உட்புறமாக வெவ்வேறு வகை யான சிறு மலர்களைப்‌ பெருமளவில்‌ பெற்றுமிருக்கும்‌. இந்த வகை மஞ்சரிக்கு சைக்கோனியம்‌ (Syconium) என்று பெயர்‌, மூன்று வகையான மலர்கள்‌ உண்டு. மலர்கள்‌ ஒருபாலானவை. ஆண்‌ மலர்கள்‌ துளைக்கு அருகிலும்‌, பெண்‌ மலர்களும்‌ மலட்டு மலர்களும்‌ (Gall Flowers) ஒன்றோடொன்று கலந்து உட்புற மாகவும்‌ அமைந்திருக்கின்றன. மஞ்சரி தொடக்கத்தில்‌ வெளிர்ப்‌ பச்சை நிறத்துடனும்‌, இறுதியில்‌ (முதிர்ச்சி யடைந்த நிலையில்‌) பழுப்பு அல்லது பழுப்புக்‌ சுலந்த சிவப்பு நிறத்துடனும்‌ இருக்கும்‌. மஞ்சரிகள்‌ மரத்‌ தண்டிலும்‌, இளைகளிலும்‌ பெருந்திரளாக இலை களற்ற சிறுகாம்புகளில்‌ காணப்படும்‌. கூட்டுக்கனிகள்‌ என்று கூறப்படுகின்ற இதன்‌ கனிகள்‌ மார்சு-ஐூலை மாதங்களில்‌ தோன்றுகின்றன. இவற்றிற்கு ஆப்பிள்‌ போன்ற மணமுண்டு, இவற்றில்‌ பூச்சிகளினால்‌ அயல்‌ மகரந்தச்‌ சேர்க்கை ஏற்படுகின்றது.

பொருளாதாரச்‌ சிறப்பு: இதன்‌ கனிகள்‌ பச்சை நிறத்‌ துடனிருக்கும்பொழுது கறியாகச்‌ சமைத்து உண்ணப்‌ படுகின்றன, இவற்றை உலர்த்தி, அரைத்து, பொடி யாக்கி, பால்‌, சாரக்கரையுடன்‌ சேர்த்துச்‌ சாப்பிடலாம்‌. மற்றும்‌, ஜெல்லி (1௦10) தயார்‌ செய்யலாம்‌. காப்பி செடிக்கு நிழல்‌ தரும்‌ மரமாக இது வளர்க்கப்படுகின்‌ றது, இதன்‌ இலைகள்‌ மாடு, யானைகளுக்குத்‌ தீவன மாகக்‌ கொடுக்கப்படுஇன்றன. இதன்‌ கட்டை விளை யாட்டுச்‌ சாமான்கள்‌, கலப்பை, மட்டரகமான மேசை நாற்காலிகள்‌, கதவுகள்‌, தீப்பெட்டிகள்‌ முதலியவை செய்வதற்குப்‌ பயன்படுகின்றது. அரக்குப்‌ பூச்சிகள்‌ இம்மரத்தில்‌ தன்கு வளர்கின்றன. இதன்‌ வேர்‌ சீத பேதிக்கு (0921௪0) மருந்தாகப்‌ பயன்படுகின்றது. இலைகளைத்‌ தாளாக்கித்‌ தேனுடன்‌ கலந்து பித்தக்‌ கோளாறுகளைப்‌ (Bilious disorders) போக்கக்‌ கொடுக்கின்றார்கள்‌. மூலவியாதிக்கும்‌ (20) பேதிக்‌ @ (Diarrhoea) இதன்‌ லேடக்ஸ்‌ (15120) மருந்தாகக்‌ கொடுக்கப்படுகின்‌ ஐது.

நூலோதி Fischer, C.E.C in Gamble, J.-S. FI..Pres. Madras. Vol III 1358, Adlard & Son Ltd., Lond. 1928.

The Wealth of India, CSTR Publ.New Delhi. Vol. IV. 1956.