பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/784

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

748 அத்ரினிஃபாம்ஸ்‌

748 அத்ரினிஃபாம்ஸ்‌

உடலிலே பலவகை வண்ணத்திட்டுகளைக்‌ கொண்ட மீன்‌ ஆண்‌ கப்பி. பெண்‌ குப்பி அவ்வளவு சுவர்ச்சி யாகத்‌ தோற்றமளிக்காது. முட்டையிடாமல்‌ குஞ்சு களையே பெற்றெடுப்பதால்‌ இம்மீனை எளிதில்‌ பரா மரிக்க முடி௫றது. கப்பிக்கு மிக நெருங்கிய உறவுடைய மீனான போயலியா ஃபார்மோசாவில்‌ (2௦₹24118 10௩௦58) எல்லா மீன்களும்‌ பெண்‌ மீன்களே: ஆண்‌ மீன்‌ களே கிடையாது; இந்தப்‌ பெண்‌ மீன்களின்‌ முட்டை. கள்‌ மற்ற வகை மீன்களின்‌ (0௨ 118468) வித்தணுக் களில்‌ ($றரோ£டி) தாண்டுவதால்‌ வளர்ச்சியுற்றுப்‌ பெண்‌ மீன்களையே தருன்றன. பிற மீன்களின்‌ விந்தணுக்கள்‌ தூண்டும்‌ பணியை மட்டுமே செய்கள்றனவேயல்லாமல்‌ பண்பணுக்களைக்‌ கொடுப்பதில்லை. இம்மீன்கள்‌ 79 செ.மீ. வரை வளரக்‌ கூடியவை,

தமிழில்‌ முண்டகக்‌ கண்ணி என்‌ றழைக்கப்படும்‌ சொசமீன்‌, மிகச்‌ சிறிய பணியைச்‌ செவ்வனே செய்து முடிக்க வல்லது. நமது தாட்டில்‌ கொசுக்களை ஓரள விற்கு அழிட்பதற்கும்‌, மலேரியா போன்ற நோய்களைக்‌ கட்டுப்பாட்டிற்குள்‌ கொண்டு வருவதற்கும்‌ இம்மின்‌ பெருமளவில்‌ உதவியிருக்கிறது. இது கொசுவின்‌ இள வுயிரிகளைத்‌ (Larval 2& உணவாகக்‌ கொள்கிறது. கொசுக்களின்‌ இளவுயிரிகள்‌ நீரில்‌ வாழ்பவை என்பது “அனைவரும்‌ அறிந்த ஒன்று. அப்படி இளவுயிரிகள்‌ அதிகம்‌ காணப்படும்‌ நீர்‌ நிலைகளில்‌ இம்மீனைக்‌ கொண்டு வீடுவதனால்‌ இவ்விளவுயிர்களை எளிதில்‌ அழிக்க முடிஏறது. இதனால்‌ கொசு உற்பத்தி குறை கிறது. இம்முறைக்கட்டுப்பாட்டை உயிரியல்‌ கட்டுப்‌ u7G (Biological control) ster அழைப்பர்‌. இம்முறை யினால்‌ சுற்றுச்‌ சூழலுக்கும்‌ கேடு நிகழ்வதில்லை என்பது ஒரு மிகச்‌ சிறப்பான நிலை. பூச்சி கொல்லி மருந்துகளைக்‌ கொண்டு கொசுக்களை அழிப்பதை விட இப்படி மீன்சளின்‌ துணையுடன்‌ கொசு வளர்ச்சி யைத்‌ தடை செய்வதை அறிவியலறிஞர்கள்‌ பரிந்‌ துரைக்கின்‌ றனர்‌.

குடும்பம்‌ அத்ரினிடே {Family Atherinidae)

தென்‌ கலிபோர்னிய கடற்பகுதியில்‌ வாழும்‌ Ag ooh wes (Leuresthes thenuis பாம்‌) என்ற மீன்‌ வினோ தமான முறையிலே முட்டையிடும்‌ வழக்கத்தைக்‌ கொண்டிக்கறது. மார்ச்சிலிருந்து ஆகஸ்டு வரையி லான காலத்தில்‌ உயர்‌ ஓதத்தின்‌ Gun gt (High tide) இம்மீன்கள்‌ கரையை நோக்கி ஆயிரக்கணக்கில்‌ வரு இன்றன. சரையீலே பெண்‌ மீன்கள்‌ தம்‌ வால்‌ பகுது யினால்‌ மணலிலே ஒரு குழியுண்டாக்கி தலைப்பகுதி வெளியே நீட்டிக்‌ கொண்டிருக்கும்‌ நிலையில்‌ இருக்‌ இன்றன. ஒவ்வொரு பெண்‌ மீனைச்‌ சுற்றியும்‌ ஓர்‌ ஆண்‌ பீன்‌ உடலை வளைத்து அரவணைத்தாற்போல்‌ படுத்‌ இருக்கிறது. பெண்‌ மீன்‌ முட்டைகளை வெளியிடும்‌ போது ஆண்‌ விந்தணுக்களை வெளிப்படுத்துகின்றது. இப்படி உருவான கருமுட்டைகள்‌ இம்‌ மணற்‌ குழிகளில்‌

தங்கி வளர்ச்சியுற்று அடுத்த உயர்‌ ஓதத்தின்‌ போது குஞ்சுகள்‌ பொரித்துக்‌ கடல்‌ நீரில்‌ நீத்திச்‌ செல்கின்றன.

GOwodur vCeorcoy HE. (Family Paaltoctethidae)

பிலிப்பைன்ஸ்‌, மலேசியா போன்ற நாடுகளில்‌ காணப்‌ படும்‌ பாலோஸ்டிதஸ்டங்கரி (8111091075 dunkeri) போன்ற மீன்கள்‌ விநோதமான உடலமைப்புடன்‌ விளங்குகின்றன. நீண்ட, சற்றே ஓளி ஊடுருவும்‌ கண்ணாடி போன்ற உடலில்‌, தொண்டைக்குக்‌ கீழே ஆண்‌ மீன்களில்‌ தசைகள்‌ சூழ்த்த எலும்பாலான ஒரு இனவுறுப்பு அமைந்திருக்கிறது. மேலும்‌ இம்மீன்களில்‌ மலப்‌ ழை (Anus) Care துடுப்புக்குக்‌ கீழே காணப்‌ படுகின்றது.

அத்ரினிஃபாம்ஸ்‌ இப்படி பல்வேறு சிறப்பியல்புகளைக்‌ காட்டும்‌ 8.27 வகை மீன்களைத்‌ தன்னகத்தே கொண்ட வரிசை ஆகும்‌.

au நூலோதி

l. Day, F, Fishes of india, William Oawson & Press: London 1958

2, lagler, K.F. etal, /chthyology Joho Wiley & sons: 1962

3, Norman, J-R. A History of Fishes. Ernest Born Ltd, London, 1963

அதிஅணுக்கரு இயற்பியலும்‌, இடையீட்டு வினையும்‌

அணுக்கருவுடனும்‌. அணுக்கருத்‌ H&M KHL gpd ஹைப்பரான்கள்‌ (113/றன08) புரியும்‌ இடையீட்டுவினை யைச்‌ சார்ந்தது அஇஅணுக்கரு இயற்பியலாகும்‌. ஹைப்பரான்கள்‌ நியூக்ளியான்‌களைவிடக்‌ கனமான அடிப்படைத்‌ துகள்களாகும்‌. இவை நிலையற்றவை. இவை நியூக்ளியான்களாகவும்‌, மெசான்களாகவும்‌ சிதை வுறுகின்றன. ஹைப்பரான்களுள்‌ 4 (லாம்டா), (சிக்மா Se. BS (ws). 2 (ஒமீகா) என்று நான்கு வசைகள்‌ உள்ளன. அவற்றின்‌ மின்னூட்ட நிலைகளும்‌ இயற்‌ பியல்‌ பண்புகளும்‌ ழே அட்டவணையில்‌ தரப்‌ பட்டுள்ளன.

லாம்டாஹைபரான்‌, நியூட்ரானைப்போல மின்‌ தடு நிலை விக்கும்‌ ஒரு துகள்‌. ஒர்‌ அணுக்கருவில்‌ நியூட்‌ ரானை நீக்கிவிட்டு ஒரு லாம்டா ஹைப்பரானை உட்‌ புகுத்தலாம்‌, அதனால்‌ அணுக்கருவின்‌ நிலைப்புத்‌ தன்மை பாதிக்கப்பட்டாலும்‌, அது போன்ற அணுக்‌ கருக்களை உருவாக்குவது இயலக்கூடியதே. இவ்வகை அணுக்கருக்களை ௮தி அணுக்கரு என்கின்றார்கள்‌. அதி அணுக்கருவின்‌ சராசரி வாழ்வுக்‌ காலம்‌ 10-11 முதல்‌