822 அதிர்வு முறைகள்
az? அதிர்வு முறைகள்
களாசவும் (180409), முனைகள் எதிர்க்கணுக்களா வும் (Antinodes) அமையும். இதுவே அதன் அடிப்படை அதர்வுமுறையாகும், தண்டில் தோன்றும் பலவசை அதிர்வு முறைகள் படம் 3இல் காட்டப்பட்டுள்ளன . தண்டு, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பொருத்தப் பட்டிருப்பின், அதன் அதிர்வு மூறைகள் மாறுபட்டு இருக்கும்.
» 2 n, 3h 3௭, Bh 5n,
4 குண்டின் ம்
ஒத்தை வையயை யட்டி வலைய யன (பகன்
படம் 2
உலோகத் தண்டைச் செங்குத்தாக நிறுத்தி அதன் சிழ் மூனையைப் பொருத்தி மேல்முனையை அதர்வுறச்
செய்தால் குறுக்கலை முறையில் தண்டு அதிரும்.
தண்டின் அதிர்வு முறைகள் (படம் 4) மூடிய மூனைக்
குழலின் அதிர்வு முறைகளை ஒத்திருந்த போதிலும்,
தண்டின் பல்வேறு அதிர்வு முறையின் அதிர்வு எண்கள்
அடுக்குச் சுரங்களாக இரா. முதல் மூன்று அதிர்வு 25 69
மூறைகளின் அதிர்வு எண்கள் 1: >>
ச] என்ற
என்ற விகிதத்தில் அமையும்,
தகடுகளின் அதிர்வு முறைகள் (Modes of Vibration of Plates)
ஒரு பித்தளைத் தகட்டைத் தாங்கியில் பொருத்தி அதன் ஓரங்களில் வயலின் வில்சொண்டு தேய்த்தால் தகடு அதிரும், தகட்டை வெவ்வேறு புள்ளிகளில் விரல்களினால் பிடித்து அதனால் பல்வேறு அதிர்வு முறைகளை உண்டாக்கலாம். ஆனால் இதன் அதிர்வு முறைகளின் அதிர்வு எண்கள் அறிக்குச் சுரங்களாச அமைவதில்லை.
சவ்வுகளின் அதிர்வு முறைகள் (Modes of Vibration of membranes)
மிருதங்கம், தபேலா போன்ற தோல் இசைக் கருவி களில் சவ்வு அல்லது மெல்லிய தோல் இழத்துக் கட்டப் பட்டிருக்கும். தோலின் மீது சமச்சீரான நேர இடை வெளிகளில் தட்டினால், குறுக்கலைகள் தோலின் வழியே விரைத்து எல்லைகளில் பட்டு, எதிர்மீண்டு, நிலையான அலைகள் தோன்றும். ஒவ்வொரு நிலை அலையும் தனித்தனி அதிர்வெண் கொண்டது. இழத் துக்கட்டப்பட்ட வட்டமான ஒரு சவ்வின் பல்வேறு அதிர்வுமுறைகள் படம் 5 இல் காட்டப்பட்டுள்ளன. இவற்றின் அதிர்வு எண்களை 1: 7. 59; 2, 13: 2, 9023. 652. 98 என்று ஒரு சீரற்ற தொடராசு இருக் கும், அதாவது பல்வேறு அதிர்வு முறைகளின் அதிர்வு எண்கள் அடிப்படைச் சுரத்தின் அடுக்காக அமைவ இல்லை. ஆனால் பொதுவாகத் தோலுக்கு அடியில் உள்ளீடற்ற கூடு ஒன்றைப் பொருத்தித் தோலின் நடுப் பகுதியில் கோந்து, இரும்புத் தூள்ஆகியவற்றின் கலவை யைப் பூரித் தோலின் அதிர்வு முறை சீராக்கப்படுகிறது. ஆகவே ஓரே சரோன அடுக்குச் சுரங்கள் உண்டாக ஓலி ஏறத்தாழ இனிமை பயக்கும்.
இவ்வாறாக, வெவ்வேறு பொருள்சுளில் உண்டாகும் அதிர்வு முறைகளைப் பற்றிப் படிப்பதனால், அவை உண்டாக்கும் ஒலியின் இசைப் பண்பு பற்றி நன்கு அறியலாம்.
பெ. க.