836 அதி விலகு புருவம்
836 அதி விலகு புருவம்
2. The Wealth of India Vol. 1, pp- 253. CSIR. Publ.. New Delhi, 1948.
அதிவிலகு புருவம்
ஒரு கண்ணின் இமைகளின் உள் சந்திப்புக்கும்
மறு கண்ணின் இமைகளின் உள் சந்திப்புக்கும் இடையே உள்ள தூரம் அதிகரித்திருந்தால் அந்த நிலையை அதிவிலகு புருவம் (Hypertelorism) sree அழைக்கப்படும்.
அதிவிலரு புருவத்தின் முக்கிய அறிகுறிகளாவன :
௮... இரண்டு பாவைகளுக்கு இடையேயான தூரம் அதிகமாயிருத்தல் (Increased inter pupillary distance).
ஆ. சண்ணின் இமைகள் உட்பக்கம் அதிகமாக ஒட்டி யிருத்தல்.
இ. புருவங்கள் அகன்று சீர் இழந்திருத்தல்.
ஈ. சண் கோளங்கள் இயல்பற்றிருத்தல்.
உ. புற மூக்கு தட்டையாகவோ, அகலமாகவோ, பாலம் போலப் பள்ளம் பதிந்தோ அமைந் திருத் தல்.
வகைகள் - ௮. இயற்கையான அதிவிலகு புருவம். ஆ. செயற்கையான அதிவிலகு புருவம்.
இயற்கையான அதிவிலகு புருவம் : இவ்வகை அதி விலரு புருவம் 1984 இல் கிரிக் என்ற மருத்துவ அறி ஞரால் முதன் முறையாக விளக்கப்பட்டது. புருவங் கன் சற்று இயல்புக்கு மாறாக விலக இருப்பது சாதாரணமானதுதான். ஆனால் மிகவும் வேறுபட்ட நிலை ஓர் அரிய பிறலிக் குறையாகும். இது ஆயிரத்தில் ஒருவருக்கு இருக்கலாம்.
காரணங்கள் :: ௮, கண் கோளங்கள் உள்ள கண் குழி பல எலும்புகளின் சேர்க்கையினால் ஆனது. இவற்றில் முக்கியமானவை ஆப்பு எலும்பு (3ற0010), நெற்றி எலும்பு (£0ா(வ)), மேல்தாடை எலும்பு (நர்2ய118), மூக்கு எலும்பு (11851) ஆகும். இந்த எலும்புகளின் ஆக்கக் குறைவினால் உண்டா விடுவா தாலோ, உட்பகுதி அதுிகமாசவும் வெளிப்பகுதி குறை வாகவும் உண்டாசிவிடுவதாலோ இத்த நிலை எற்படு Bgl.
ஆ. எனவே இது தசைப் பகுதிக் குறையினால் ஏற் படும் நிலை அன்று.
இ. இது ஒரே குடும்பத்தில் பலருக்கு இருக்கலாம்.
- இது மரபுவழி அணுக்களால் நிச்சயிக்கப்படும்
நிலை ஆகும்.
இந்நிலையுடன் அமைந்த மற்ற குறைகள் குழந்தை பிறந்தவுடன் அதிலிலகு புருவம் உளதா எனக் சுண்டறி யலாம். இந்நிலை ஈழ்க்கண்ட பிற குறைகளுடனும் இருக்கலாம்:
௮) முதுகெலும்பில் பிளவு அல்லது பிறகுறை
ஆ) பிளந்த உதடு, பிளந்த தாடை, மூக்குக்கும் கண்ணுக்கும் இடையே பிளந்த நிலை
இ. அடிமூளை நீர்க்கட்டிகள்
ஈ இனப்பெருக்க உறுப்புகளில் குறை
௨) குறைந்த மனவளர்ச்சி
ஊ) விரல்களின் எண்ணிக்கை, கையிலோ காலிலோ அதிகமாக இருத்தல்
எ) சுண் கோளங்கள் சிறிதாக இருத்தல் அல்லது முன்னே துருத்திக்கொண்டிருத்தல்
ஏ) மாறுகண், புரை விழுந்த நிலை, சுண் பார்வைக் குறைகள்
ஐ) கண்ணின் மேல் இமை விழுதல், இரு இமைகட்கும் இடையே உள்ள தூரம் மிகக் குறைவாக இருத்தல் முதலியனவாம்.
உறுதிப்படுத்துதலும் சிகிச்சையும்: இயற்கையான அதிவிலகு புருவ நிலையை, பேசல் டோமோராம்
(Basal tomogram) erst gg தனிப்பட்ட எக்ஸ்சுதிர்ச்
சோதனை முறையினால் உறுதிப்படுத்தலாம். இந்தப்
பிறவிக்குறை வேறு எந்தவிகமான குறைகளுடனோ அல்லது நோய்களுடனோ தொடர்பற்றது என்பதைப் பல சோதனைகளினால் உறுதிசெய்த பின் அழகூட்டும் அறுவைச் சிூச்சை மூலம் நலப்படுத்,த முடு.யும். செயற்கையான அதிவிலகு புருவம்: ௮. இது பிறவிக் குறை அன்று.
ஆ. மூக்கு, கண், நெற்றிப் பகுதிகளில் காயம் ஏற் பட்டு இப்பகுதிசுனில் உள்ள எலும்புகள் முறித்து நிலை பெயர்ந்து விடுவதால் உண்டாவது.
இ. மூளைக்கட்டிகளால் உண்டாவது.
சிகிச்சை: தேவையான அறுவைச் சிகிச்சை மூலம் செப்பனிடலாம்.
அதிவிலகு புருவம் என்பதை ஓர் அறிகுறியாக எடுத்துக் கொள்ள வேண்டும். கண் நோய் இயல் மருத்துவரையோ, காது, மூக்கு தொண்டை நோய்