பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/880

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

844 அப்டியூசென்ட்‌ நரம்பு

644 அப்டியூசென்ட்‌ நரம்பு

பிறந்த ுழந்தையைக்‌ கவனிக்கும்‌ முறைகளை ஒழுங்கு படுத்துவதில்‌ அப்கார்‌ எண்ணிக்கை மிக முக்கிய பங்கு பெறுகிறதென்பது அனைவராலும்‌ ஏற்றுக்கொள்ளப்‌ பட்டது. அது செய்யப்படாமலிருப்பது கவனக்குறைவு என்று குற்றம்‌ சாட்டப்படும்‌ அளவுக்கு அது முக்கிய யுள்ளது. இது மிச எளிதான முறையாயினும்‌ இதைக்‌ கையாளுகிறவர்‌, இதனை நன்குறிந்தவராக இருந்தால்‌ மட்டுமே உருப்படியான பயன்‌ இடைக்கும்‌.

குறையெடைக்‌ குழந்தைகளில்‌ அப்கார்‌ எண்ணிக்கை குறைவாயிருக்க வாய்ப்புகள்‌ மிகுஇ. அக்ருழந்னைைகளில்‌ இறப்பு விகிதமும்‌ அதிகமாகவே உள்ளது.

அதேபோல குறை எடையும்‌, அப்கார்‌ எண்ணிர்கை சூறைவாயும்‌ உள்ள குழந்தைகளின்‌ மூளை, நரம்பு மண்டலப்‌ பாஇப்புகள்‌ மிக அதிக அளவில்‌ ஏற்படு மென்றும்‌ கண்டறியப்பட்டுள்ள து.

ந.தி.

நூலோதி 1. Nelson, Text Book of 7௪௪0/௪2//25, 12ம்‌ 841- tion. 1973.


2. Apgar. V. & James. L.S., Resuscitation: New Born Infant 1973.

3. Sheldon 8. Korones., Aigh Risk New Born infants, Basis for Intensive Nursing Care, 1972.

அப்டியூசென்ட்‌ ஈரம்பு (ரடுவிலக்கும்‌ நரம்பு) மூளையிலிருந்து வெளிச்செல்லும்‌ ஆறாவது தலை ஈரம்பு.

அப்டியூசென்ட்‌ நரம்பு மூளையிலிருத்து வெளிவந்து விழிக்கூட்டின்‌ வெளிப்பக்க நீள்துசை (Lateral rectus) என்ற பெயருள்ள விழியை இயக்கும்‌ நீள்தசைக்கு மட்டும்‌ சென்று அதனை இயங்கச்‌ செய்கின்றது, இத்த நரம்பு நோயினால்‌ பாதிக்கப்படலாம்‌. அம்மாதிரி பாஇப்பு ஏற்பட்டால்‌ வெளிப்பக்க நீள்தசை வேலை செய்யாது. அதனால்‌ இத்தத தசைக்கு நேர்மாறாசு வேலை செய்யும்‌ உட்பக்க நீள்தசை (140181 760005) ஒருவிதமான எதிர்ப்பும்‌ இல்லாமல்‌ அதிகமாக இயங்‌ கும்‌. இதனால்‌ மாறு கண்‌ என்ற நிலை ஏற்படும்‌.

அப்டியூசென்ட்‌ நரம்பு

படம்‌ 1 மூளையின்‌ அடிப்பர்கம்‌