பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/894

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

858 அபுகிர்‌ விரிகுடா

14358 HURT விரிகுடா

பொருளாதாரச்‌ சிறப்பு : பெரும்பாலும்‌ அபின்‌ ஒரு போதைப்‌ பொருளாகப்‌ பயன்படுத்தப்படுிறது. அபின்‌ குத்தம்‌ செய்த பிறக மார்‌ஃபின்‌ (Morphine) ஆகிறது. இதுதான்‌ நேரடியாகப்‌ பயன்படுத்தப்படுகிறது. அபினி லிருந்து மார்‌ஃபின்‌ தயாரிக்கும்‌ முறை மிகவும்‌ இரசுசிய மாசக்‌ காப்பாற்றப்பட்டு வருகிறது. மார்‌ஃபின்‌ வெண்‌ மையான ஊடு போன்ற படிசங்களாகும்‌ (வவ; நீரில்‌ ஒரளவு சுரையக்கூடியது? ஆனால்‌ சாராயத்தில்‌ முழுலதும்‌ கரையக்கூடியது. அபினில்‌ 26 வகையான மார்‌ஃபின்சன்‌. உள்ளன. இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு, ஜெர்மனி, ஹங்கேரி (Hungary). நெகர்லாண்டு, போலண்டு ஆகிய நாடுகள்‌ மட்டுமே அபினிலிருந்து மார்‌ஃபின்‌ தயாரிக்கின்றன. அபின்‌ விசைகளில்‌ 50 விழுக்காடு எண்ணெய்ச்சத்து உள்ளது. எண்ணெய்‌ மஞ்சள்‌ நிறமானது; பாதாம்‌ எண்ணெய்‌. போன்று நல்ல மணம்‌ உடையது. எளிதில்‌ கெடு வஇள்லை, இதைச்‌ சமையல்‌ எண்ணெயாகவும்‌ பயன்‌ படுத்தலாம்‌. சோப்பு, வர்ணம்‌ (வா, வார்னீஷ்‌ (Varnish) முதலியன செய்யவும்‌ பயன்படுத்தலாம்‌, ஆயின்‌ விதைப்பிண்ணாக்கு மிசவும்‌ பயனுள்ளது. இதற்கு நச்சுத்‌ தன்மை கிடையாது. ஆதலால்‌ மாட்டுத்‌ இவனமாசகப்‌ பயன்படுகிறது. ஆனால்‌ நச்சுத்தன்மை யுள்ள காயின்‌ தோல்கள்‌ அதில்‌ கலக்க தேரிட்டால்‌ கால்நடைகளுக்குத்‌ இமையேற்படும்‌, மார்‌ஃபினிலிருந்து லை மருந்துகள்‌ தயாரிக்கப்படுகின்றன. வயிற்றுப்போக்கு (Diarrhoea), Ge fiuSerenn (Dyspepsia). லை தோல்‌ சம்பந்தமான நோய்கள்‌, புண்கள்‌, பூச்சிகள்‌ போன்ற வற்றிற்கான மருந்துகள்‌ மார்‌ஃபின்‌ கூட்டுடன்‌ தயாரிக்‌ கப்படுகின்றன. கசகசா என்று கூறப்படும்‌ அபின்‌ விதை கள்‌ உணவுக்கு மணம்‌ ச௭ட்டியாசப்‌ பயன்படுத்தப்‌ படு இன்றன. அபின்‌ மன ஆறுதல்‌ பெறுவதற்கும்‌, இருதயத்‌ துடிப்பைத்‌ தடுப்பதற்கும்‌, தூக்கமருந்தாகவும்‌ மருத்‌ துவத்‌ துறையில்‌ பயன்படுகின்றது. இதுபோன்ற பயன்‌ களைப்‌ பெறுவதற்காகக்‌ கால்நடை மருத்துவத்துறை யிலும்‌ பயன்படுத தப்படுகின்றது.. மார்‌ஃபின்‌ இருதய நோய்களைக்‌ குணப்படுத்துவதற்குச்‌ சிறந்ததொரு மருந்தாகக்‌ கொடுக்கப்படுின்றது. அபின்‌, மார்‌ஃபின்‌ ஆடயவற்றைச்‌ சாப்பிடும்‌ அளவு ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறும்பொழுது உயிரிழப்பை ஏற்படுத்து கின்றது. தக்க முறையிலும்‌, மிகக்‌ குறைத்த அளவிலும்‌ பயன்படுத்தினால்‌ இது மன அமைதியையும்‌, இன்பகர மான உணர்வையும்‌, மயக்கத்தையும்‌ ஏற்படுத்துகின்ற ஒரு ஏறத்த மருந்தாகும்‌: ஆனால்‌ அதிக அளவில்‌ சாப்‌ பிடும்பொழுது நம்பமுடியாத அளவு தீமைகளையும்‌, சொல்லெரணா விளைவுகளையும்‌ ஏற்படுத்துகன் றது. அபினுக்கு அடிமையானவர்களின்‌ எண்ணிக்கை நாளுக்கு தாள்‌ அதிகரிக்கின்றது. இ.கனால்‌ பலர்‌ உயிரிழக்கவும்‌ நேரிடுகின்றது. இப்படிப்பட்டவர்களிடமிருந்து இப்‌ பழக்கத்தைத்‌ தடுத்து நிறுத்துவது மிசுவும்‌ கடினம்‌. ஏனெனில்‌ நிறுத்துவதனால்‌ ஏற்படுகின்ற வேதனை களை அவர்சுளால்‌ தாங்கிக்கொள்ள முடிவதில்லை,

அபின்‌ பற்றிய சட்டவிதிமுறைகள்‌: ஐக்கிய நாடுகள்‌ சபை இதன்‌ உற்பத்தியையும்‌ பயன்பாட்டையும்‌ கண்‌

காணிக்கறது. 1925, 1031 ஆகிய ஆண்டுகளில்‌ அலை உலக அபின்‌ மாநாடு கூட்டப்பெற்றுச்‌ சட்டகிட்டங்‌ சள்‌ வகுக்கப்பட்டன. அதன்‌ விளைவாக உலக அன்‌ விதிமுறைகள்‌ 1953இல்‌ வகுத்துச்‌ செயல்படுத்தப்‌ பட்டன. அதன்பின்‌, இவை 1961ஆம்‌ ஆண்டு புதுப்‌ பிக்கப்பட்டு இன்றுவரை நடைமூறையிலிருந்து வரு கின்றன. ஐக்கிய நாடுகளின்‌ விதிமுறைகளின்படி, இந்தி யாவில்‌ அபினிலிருந்து மார்‌ஃ2பின்‌ தயாரிக்க அனுமதி இல்லை. இங்கு அபின்‌ விளைவிக்க மாதில அரசுகள்‌ உரிமங்கள்‌ வழங்குகின்றன, உரிமம்‌ பெற்ற அபின்‌ கற்‌ பத்தியாளர்கள்‌, இந்தியாலில்‌ எங்கிருப்பினும்‌, குறிப்‌ பிட்ட மத்திய அரசின்‌ தொழிற்சாலைகளுக்குத்தான்‌ அதை அனுப்ப வேண்டும்‌. அவையாவன:

1) அரசு அபின்‌ தொழிற்சாலை, காூப்பூர்‌, உத்தரப்‌ பிரதேசம்‌ 2) அரசு அபின்‌ உற்பத்திக்கூடம்‌, நீமச்‌, மத்தியபிரதேசம்‌ ஆகும்‌. அபின்‌ மேலும்‌ சுத்தம்‌ செய்‌ யப்பட்டு கிலோ கட்டிகளாக மாற்றப்பட்டுப்‌ பெட்டி சுளில்‌ அடைக்கப்பட்டு, அரசு அனுமதியுடன்‌ வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்தியாவின்‌ தேவைக்கு மார்‌ஃபின்‌ வெளிநாடுகளிலிருந்து இறக்கு மதி செய்யப்படுகிறது. ஐக்கியநாடுகள்‌ சபை, உலகச்‌ சந்தைக்கு ஆண்டு ஒன்றுக்கு 1,860 டன்கள்‌ மார்‌ஃபின்‌ தேவை என மதிப்பிட்டுள்ளது, இத்தேவையில்‌ 60 விழுக்காடு இத்தியாவும்‌, 15 விழுக்காடு துருக்கியும்‌ நிறைவு செய்துகொண்டு வருகின்றன. ஆசுவே, அபின்‌ ஏற்றுமதியில்‌ இந்தியா முதலிடம்‌ வடப்பதால்‌ ௮இக அவல்நாட்டுச்‌ செலாவணி ஈட்ட வாய்ப்பு உள்ளது.

எஸ்‌. மு. நூலோதி

Hill, A. F. Economic Botany. pp- 560, Tata McGraw-Hill Book Co., New Delhi. 1952.

The Wealth of India. Vol, VII. pp-330. CSIR Publ. New Delhi, 1966.

அபுகிர்‌ விரிகுடா

அபுகர்‌ விரிகுடா (கரி Bay) 382 249: வடக்கு 30 141 இழக்கில்‌ அமைந்துள்ளது. இது மத்தியத்‌ தரைக்‌ கடலில்‌, வடகிழக்கிலுள்ள நைல்‌ நதியின்‌ களை யான ரோசட்டாவின்‌ கழி முகத்திற்கும்‌, தென்‌ மேற்‌ இலுள்ள அபுகர்‌ முளைக்கும்‌ இடையில்‌ அரைவட்ட வடிவமாக அமைந்துள்ளது. இது எடப்து அரபு குடியரசு ஆட்டிக்குட்பட்டது. இவ்விரிகுடாவில்‌ நெல்‌ சனின்‌ ஆங்கில சுடற்படைக்கும்‌ நெப்போலியனின்‌ கடற்படைக்கும்‌ நடந்த புகழ்‌ பெற்ற நைல்‌ போரில்‌ (1798) நெப்போலியனின்‌ படை தோற்கடிக்கப்பட்டது.