பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகழ்தல்‌

அகழ்தல்‌ ஒரு மண்‌ வேலை. அகழ்தலை அகழப்படும்‌ பொருளை வைத்து வகைப்படுத்தலாம்‌. மேல்தரை மண்‌, பாறை, பொதி மண்‌ கலந்த பொருள்கள்‌ எனப்‌ பலவகை அகழ்‌ பொருள்கள்‌ உண்டு.

மேல்தரை மண்‌ அகழ்தல்‌. புவியின்‌ மேல்‌ அடுக்கு மண்ணை நீக்குதலை மேல்தரை மண்‌ அகழ்தல்‌ என்பர்‌. இது மேலுள்ள பச்சைப்‌ பயிர்களை நீக்குவதையும்‌ உள்ளடக்கும்‌, மேல்கரை மண்ணோ புவிப்புறணி மண்ணோ மரங்கள்‌ பிற பைங்கூழ்கள்‌ (vegetation) வளர்ச்சிக்கு அடித்களமாகும்‌. இப்பகுஇயில்‌ எழுள்ள பகுதியைலிடக்‌ கூடுதலான ஈரம்‌ இருக்கும்‌. சழுள்ள அடுக்கு பண்‌ ஈரம்‌ அற்றுத்‌ தளாந்துள்ளதால்‌ கையாளு வதற்கு எளிதானது. எனவே மேல்தரை மண்ணைக்‌ குறைவாக அகழ்வது மிகவும்‌ பயன்‌ உடையது. இம்‌ மண்‌ திரும்பவும்‌ தேவைப்பட்ட இடங்களில்‌ நிரப்பு வதற்சாகவும்‌, அரிப்பைத்‌ தடுக்கும்‌ பயிர்களை வளர்க்‌ கும்‌ இடங்களில்‌ நிரப்புவதற்காகவும்‌ தேக்கி வைக்கப்‌ படுகிறது.

கிலம்‌ அகழ்தல்‌, மேல்‌ தரைக்குக்‌ ழும்‌, பாறைப்‌ பகுதிச்கு மேலும்‌ உள்ள அடுக்கை அகழ்வதை நிலம்‌ அகழ்தல்‌ எனலாம்‌. இது கடை கால்கள்‌, கட்டடத்‌ தடுப்புச்‌ சுவர்கள்‌ எழுப்ப மேற்கொள்ளப்படும்‌. இதை மண்‌ வாரி எந்திரங்கள்‌ (earth moving instruments) அல்லது நிலம்‌ செதுக்கு எந்திரங்கள்‌ (scrapers) எளி தாகச்‌ செய்யும்‌.

பாறை அகழ்தல்‌. பாறை வெடி வைத்து உடைத்‌ தும்‌, துளைத்து உடைத்தும்‌ அகழப்படுகறது. 45 சென்டிமீட்டர்‌ விட்டத்துக்கும்‌ மேலான கற்கள்‌ பொதுவாகப்‌ பாறைகள்‌ எனப்படுகின்றன. திலத்தை உழுது கொத்து உடைத்துச்‌ சிறுசிறு கட்டிகளாக்கி நீக்குவது எளிது. இந்த மண்ணைச்‌ சுவர்களிலும்‌ சுடைகால்களிலும்‌ மெல்லிய அடுக்குகளாகப்‌ பயன்‌ படுத்தலாம்‌. ஆனால்‌ அகழப்படும்‌ பாமைகளைத்‌ தடுப்புச்‌ சுவர்களில்‌ பயன்படுத்தும்போது அவற்றை 45 சென்டிமீட்டர்‌ கனம்‌ உள்ள அடுக்குகளாகத்தான்‌ அமைக்க முடியும்‌,

பொதிமண்‌ அகழ்தல்‌. அதக நீர்‌ உள்ள அல்லது தேவையற்ற மண்ணை அகழ்வதை முறையே சேறு அல்லது பொதிமண்‌ அகழ்தல்‌ எனலாம்‌. இந்த அகழ்‌ பொருளைத்‌ தடுப்புச்‌ சுவருக்குப்‌ பயன்படுத்தல்‌ முடி யாது. அகழ்ந்த சேற்றைப்‌ பரப்பியும்‌, இத்த மண்ணில்‌ சிறப்பியல்புகளை மாற்றும்‌ பிற பொருள்களுடன்‌ கலத்தும்‌ ஈரத்தை நீக்கலாம்‌. .

கலந்த பொருள்‌ அகழ்தல்‌. இது மேல்தரை Pow, பாறை, சேறு ஆயன கலந்துள்ள கூட்டுப்பொருள்‌ களை அகழ வதைக்‌ குறிக்கும்‌, இந்த முறையிலேயே

அகழ்தல்‌ 35

எல்லா மண்‌ அகழ்தல்‌ ஒப்பந்தங்களும்‌ செய்யப்படு இன்றன.

அகழ்தலை அது செய்யப்படும்‌ நோக்கங்களைப்‌ பொறுத்தும்‌ வகைப்படுத்தலாம்‌. அவை இறத்த?ூவளிச்‌ சுரங்கம்‌ வெட்டல்‌, கடைகால்‌ வெட்டல்‌, சாலை போடல்‌, வடிகால்‌ வெட்டல்‌, பாலம்‌ கட்டல்‌, கால்‌- வாய்‌ வெட்டல்‌, தடுப்புச்சுவர்‌ அகழ்தல்‌, தூர்‌ வாரல்‌ என்பன. இவற்றின்‌ பெயர்கள்‌ அடிக்கடி மாறுபட்டா ௮ம்‌ அந்தந்த வட்டாரத்தில்‌ வழங்கும்‌ பெயரையே ஒப்பந்தங்களில்‌ பயன்படுத்‌ துவர்‌.

மேல்‌ அடுக்கு அகழ்தல்‌. தரைக்கும்‌ செட்டியான அடித்தரைக்கும்‌ இடையில்‌ உள்ள மேலடுக்கு மண்ணை அகழ்வதை மேலடுக்கு அகழ்தல்‌ எனலாம்‌.

சாலைவழி அகழ்தல்‌. நெடுஞ்சாலைகள்‌ அமைக்க மேலடுக்கு அகழ்ந்‌ ததும்‌, அதன்‌ கீழுள்ள அடுக்கை அகழ்‌ வதைச்‌ சாலைவழி அகழ்தல்‌ என்பர்‌. சாலைவழி அகழ்தல்‌ மேலடுக்கு அகழ்வின்‌ ஒரு பகுதியே.

வடிகால்‌ அகழ்தல்‌ அல்லது கட்டகம்‌ அசழ்தல்‌. பாலங்களைத்‌ தவீரப்‌ பிற வடிகால்‌ கட்டசங்களைக்‌ கட்ட அகழ்தலை, வடிகால்‌ அகழ்தல்‌ அல்லது கட்டகம்‌ அகழ்தல்‌ எனலாம்‌. இந்தக்‌ கட்டகங்கள்‌ சிறு வடிகால்‌ கட்டகங்கள்‌ எனப்படுகின்றன. இவற்றுள்‌ சாலையின்‌ குறுக்குக்‌ குழாய்களும்‌ சிறு பாலங்களும்‌ (-ய6ரடு அடங்‌ கும்‌. 6 மீட்டருக்குக்‌ 8ழமான சாலைவழிக்‌ கட்டகங்‌ களைச்‌ சிறுபாலங்கள்‌ என்றும்‌, 6 மீட்டருக்கும்‌ கூடு தலான நீளமுள்ள சாலைவழிக்‌ கட்டகங்களைப்‌ பாலங்‌ கள்‌ என்றும்‌ வழங்குவர்‌. குழாய்‌ அல்லது சிறுபாலம்‌ அமைக்கப்பட்டதும்‌ தக்க நிரப்புப்‌ பொருளால்‌ அவற்றை நிரப்ப வேண்டும்‌. இந்தப்‌ பொருளை வடி

- கால்‌ அகழ்விலிருந்து அகழ்ந்த பொருளால்‌ நிரப்பக்‌

கூடாது. சிறுபாலங்களுக்காக அகழும்போது ஒரு குறிப்பிட்ட கொலைவுக்கு அப்பால்‌ உள்ள பொருளை அகழ்தல்‌ கூடாது.

பாலம்‌ அகழ்தல்‌, பாலங்களைக்‌ கட்டுவதற்கான கடைகாலையும்‌ தொடக்கச்‌ சுவர்களையும்‌ எழுப்ப அகழ்தல்‌, பாலம்‌ அகழ்தல்‌ எனப்படும்‌. இது உலர்‌, ஈர, பாறை அகழ்தல்‌ என மூவகையாகப்‌ பிரிக்கப்படும்‌. அசுழப்படும்‌ ஆழத்தைப்‌ பொறுத்து உலர்‌ அசுழ்வும்‌ ஈர அகழ்வும்‌ பாகுபடுத்‌தப்படும்‌. இந்த ஆழம்‌ இடத்துக்கு இடம்‌ மாறுபடும்‌.

கால்வாய்‌ அகழ்தல்‌. ஓர்‌ ஒடையையோ நீர்வழியை யோ வழிமாற்றும்‌ போது கால்வாய்‌ தோண்ட அகழ்‌ கல்‌, கால்வாய்‌ அகழ்தல்‌ எனப்படும்‌.

குடைகால்‌ அகழ்தல்‌. ஒரு சுட்டடத்தின்‌ சுவருக்காக அல்லது தரணுக்காகச்‌ செய்யப்படும்‌ அகழ்தல்‌ வேலை கடைகால்‌ அகழ்தல்‌ எனப்படும்‌. இது மிசவும்‌ சுச்சித மாசவும்‌ தரமாகவும்‌ செய்யப்படும்‌ பணியாகும்‌, பக்கச்‌ சாரம்‌ இன்றியே கற்காரையை நிரப்ப இப்பணி