பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/912

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

876 அம்மீட்டர்‌

876 கும் அம்மீட்டர் தன்மை உடையது. இதன் பால் போன்ற லேடக்ஸ். பாதங்களிலுள்ள ஆணிகளைக் (Corns) கரைத்து நீக்குகிறது. லொபீலியா (Lobelia). செனிகா (Scnepa) ஆகிய செடிகளுடன் இதைக் கலந்து தயாரிக் கப்படும் மருந்தைக் கொடுத்தால் இருமல், ஆஸ்துமா ஆகியவை குணமாகும். இதன் இலைகள் சமைத்து உண்ணப்படுகின்றன. நூலோதி எம்.எல்.லீ. Hooker, J.D. in Hook. f. Fl. Br. Ind. V. 250. 1887. The Wealth of India, Vol. III, pp. 236. CSIR publ. New Delhi, 1952. அம்மீட்டர் மின்னோட்டத்தை அளக்கப் பயன்படும் அளவி (Meter) அம்மீட்டர் அல்லது மின்னோட்ட அளவி (Ammeter) ஆகும். மின்னாக்கி (Electric generator) மின்செலுத்தத்தொடர் (Transmission line). மின் மாற்றி (Transformer) போன்ற எல்லா மின்திறன் அமைப்புகளிலும் (Power systems) அவ்வப்போதுள்ள மின்னோட்டத்தினை அளக்கவும், அவை ஏறக்கூடிய பெரும (Maximum) மின்னோட்ட எல்லையைக் கடந்து விடாமல் கண்காணிக்கவும் மின்னோட்ட அளவி பயன் படுகிறது. "ஆம்பியர்" என்னும் அறிவியல் அறிஞரின் நினைவாக ஆம்பியர்' என்னும் அலகால் (Unit) மின் னோட்டம் அளக்கப்படுகிறது. இப்பெயரின் தொடர் புடனேயே மின்னோட்ட அளவியும் 'அம்மீட்டர்' 4 என்று அழைக்கப்படுகிறது. இதை 'ஆம்பியர் அளவி என்றும் அழைக்கலாம். வகைகள். இயங்கும் நெறிமுறை (Principle), பயன் பாடு, துல்லியம் (Accuracy) இவற்றிற்கேற்ப நிலைக் காந்த- இயங்கு சுருள் (moving coil),இயங்கு இரும்பு (Moving iron), விசிப்புப்பட்டை (Taut band), முனை வுற்ற இதழ் (Polarised vane), மின்னியக்க (Electro- dynamic), அனல் (Thermai). வேதியியல் (Chemical). நிலையியல் (Static), கலப்புவகை (Miscellaneous com- posite) என அம்மீட்டர்களில் பலவகைகள் உள்ளன. நிலைக்காந்த- இயங்கு சுருள் வகை. ஒரு காந்தப்புலத் துக்குள் (Magnetic field) இருக்கும் கம்பிச்சுருளில் (Coil) மின்னோட்டம் செலுத்தப்படும்போது அச்சுருளில் இயக்கம் ஏற்படுகிறது. மின்னோட்ட அளவுக்கு ஏற்ப இந்த இயக்கத்தின் அளவு இருப்பதால் இந்த இயக் கத்தை அளப்பதன் மூலம் மின்னோட்டத்தை அளக்க லாம். இயக்கத்தை அளிக்கும் திருக்கம் (Torque), T = BANI ஆகும். இங்கு, B = காந்தப்பெருக்கின் (magnetic flux) அடர்த்தி; A = சுருளின் பயனுள்ள பரப்பு: N= கம்பிச்சுற்றுகளின் எண்ணிக்கை ; [= மின் னோட்டம். படம் 1. இயங்குசுருள் வகை மின்னோட்ட அளவி இதில் வலிமைமிக்க குதிரைலாட வடிவில் உள்ள நிலைக்காந்தம் ஒன்று கிடைநிலையில் ஒரு மர அடி மனையின் மேல் வைக்கப்பட்டுள்ளது. அதன் வட தென் காந்த முனைகள் உருளை வடிவமுடைய துளைப் பில் அமைக்கப்பட்டுள்ளன. இக்காந்த முனைகட் கிடையில் ஓர் தேனிரும்பு உருளை உள்ளது. இந்தத் தேனிரும்பு உள்ளகம் காந்தப்புலத்தைச் செறி வுள்ளதாகவும், ஆரங்களின் எத்திசையிலும் ஒரே சீரானதாகவும் அமைக்கிறது. இதனாலேயே இந்த உள்ளகத்தைச் சுற்றி இயங்கும்படி வைக்கப்பட்டுள்ள சுருளில் குறிப்பிட்ட மின்னோட்டத்துக்கேற்ப குறிப் பிட்ட அளவு சீரான இயக்கம் ஏற்படுகிறது. இச்சுருள் நீண்ட சதுரவடிவில் உள்ள உலோகச் சட்டத்தில் சுற்றப்பட்டுள்ளது. இது காந்த முனைகட்கும், உள்ள கத்துக்கும் உள்ள இடைவெளியில் எளிதில் இயங்கும் வண்ணம் மணித்தாங்கியில் (jewel bearing) பொருத்தப் பட்டுள்ளது. கம்பிச்சுருளுக்கு இரண்டு காந்தஇயல் பற்ற அகல்வில்சுருள்களின் (spiral spring) வழியாக மின்னோட்டம் செலுத்தப்படுகிறது. சுருளுடன் இணைந்த குறிமுள் (pointer) எடை குறைந்த மினியக் குழாயால் ஆனது. இதன் ஒரு முனை தட்டை யாகக் கத்தி முனைபோல் கூராக்கப்பட்டு, அதன் கீழ் அமைந்துள்ள அளவுகோலின் இடைவெளியில் ஓர் ஆடி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஆடியைப் பயன்படுத்திக் குறிமுள்ளும், அதன் படிநிழலும் (image) ஒன்றாகும் நிலையில் அளவிடுவதால் இடமாறு தோற்றப்பிழை (Parallax error) தவிர்க்கப்படுகிறது.

சுருளில் செலுத்தப்படும். மின்னோட்டம் இயக்கும் விசையை (operating force) அளிக்கிறது. அதற்கேற்ப நகரும் குறிமுள்ளினைக் (pointer) கட்டுப்படுத்தும் விசையினை (controlling force) அகல்வில் சுருள்கள் அளிக்கின்றன. இறுதி நிலையில் அலைவுகள் இன்றித் தடுக்க, ஒடுக்கல்விசை (damping force) தேவைப்படு கிறது. சுருள் உள்ள உலோகச்சட்டமானது காந்தப்