880 அம்மீட்டா
அம்மீட்டா $9000 படம் 8.மிள்ளியக்க வகை மின்னோட்ட அளவி மின்னோட்ட விளைவாலும் துல்லியம் ஓரளவு பாதிக் கப்படுகிறது. அனல் வகை. இவ்வகை மின்னோட்ட அளவி கள் துல்லியத்தில் தரங்குறைந்தவையானாலும் வானொவித் தொலைவரி (Radio telegraphic) மூலம் அளவீடுகள் செய்ய இவை இன்றியமையாதனவாக உள்ளன. ஒரு கம்பியில் மாறுமின்னோட்டம் செலுத்தப்படும் போது அதனால் உண்டாகும் வெப்பமானது எப் போதும் அம்மின்னோட்டத்தின் ஈரடுக்குச் சராசரி யைப் பொறுத்துள்ளது. Hal² இங்கு,H= வெப்பம்; 1 = மின்னோட்டம். இவ்வகை அளவிகள் தூண்டுகைப் (Impulse) பிழைகளால் பாதிக் கப்படாமையால் மாறுமின்னோட்டத்தை மிகச் சிறந்த அளவிகளாக உள்ளன். அளக்க வில்விசைச்குச் சமமான விசையை மின்னோட்டம் அளிக்காதபோது சூட்டுக்கம்பி அளிக்கும் வண்ணம் அது இழுத்துக் கட்டப்பட்டுள்ளது. சூட்டுக்கம்பியில் மின் னோட்டம் செலுத்தினால் சூடாகி நீளும்போது இச்சம நிலை பாதிக்கப்பட்டு, அதற்கேற்பக் குறிமுள் அளவு கோலின் மீது நகரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. குறைபாடுகள். வெப்பத்தால் ஏற்படும் சிறு நீட்சியை மிகுத்து அளக்க வேண்டியிருப்பதால் இதன் கட்டுமானம் மிகவும் சிக்கல் நிறைந்ததாகிவிடுகிறது. மேலும் வெப்பமும் நீட்சியும் அவை ஏற்பட்ட பின்னரே அளக்க இயலுவதால் மிகவும் மெதுவாகவே இது செயல் படுகிறது. மின்னோட்டம் நீக்கப்பட்ட பின்பும் குறி முள் சுழிநிலைக்கு மிகவும் மெதுவாகவே ஊர்ந்து சென் றடைகிறது. எனவே காட்டும் அளவும் திட்டவட்ட மற்றதாக (Indefinite) உள்ளது. ஓரளவுக்கு மேல் மிகுவெப்பநிலையில் இயங்க இயலாதாகையால் இவ் வளைவின் சுமை மீறுதிறன் (Overload capacity) குறை வாகவே உள்ளது; அளவீடு வெளிப்புற வெப்ப மாற் றங்களாலும் பாதிக்கப்படுகிறது. காற்றின் வெப்ப நிலையும் பாதிக்கிறது. அளவீடு (Calibration) எந்த வாட்டத்தில் வைத்துச் செய்யப்பட்டதோ அதே நிலை யில் வைத்துத்தான் அளவும் செய்யவேண்டும். இல்லையேல் வெப்பச்சுழற்சியால் (Convection) அளவீடு பாதிக்கப்படும். நீளும் வகை (Expansion type), வெப்பச்சந்தி வகை (Hot junction) என இருவகை அனல் மின்னோட்ட அளவிகள் உள்ளன. நீளும் வகையில் குறிமுள்ளின் விலக்கமானது மின் னோட்டம் செல்லும் கம்பியின் நேர்கோட்டு நீட்சியால் (Expansion) உண்டாக்கப்படுகிறது. இதில் ஒற்றைத் தொய்வு வகை (Single sag type), இரட்டைத் தொய்வு வகை (Double sag (ype) என இரு வகைகள் உள்ளன. குறிமுள் விற்சுருள் சூட்டுக் கம்பி படம் 9.தீளும்வகை அனல் மின்னோட்ட அளவி வெப்பச் சந்தி வகையில் மின்னோட்டம் செலுத்தப் படும் கம்பியில் உண்டாகும் வெப்பத்தின் கடத்துகை யாலும் கதிர் வீச்சினாலும் இருவேறு உலோகங்களின் சந்தியில் மின்னியக்கு விசை உண்டாகிறது. இந்த மின்னியக்கு விசையை அளந்து மின்னோட்டம் மறை முகமாக அளக்கப்படுகிறது. இதில் வெப்பச் சுழற்சி யாலும் கதிர்வீச்சாலும் இயங்கும் வகை, வெப்பக்கடத் தலால் இயங்கும் வகைகள் உள்ளன. முதல் வகையில் உலோகங்களின் சந்தி பெரும்பாலும் செம்பு அல்லது வெள்ளியைக் கான்ஸ்ட்டன்டனால் ஆன சட்டத்தின் மீது மின்பூச்சு மூலம் படியச்செய்து உருவாக்கப்படு