884 அம்மை நோய்
884 அம்மை நோய் யும் (Giant cells), உட்படு பொருள்களையும் (Inclusion body) உருப்பெருக்கி மூலம் காணலாம். எல்லா அதி நுண்ணுயிரி நோய்களைப் போலவே இதற்கும் பிணி தீர்க்கும் மருந்தேதும் இல்லை. தற்போது அயடாக் சியூரிடன் 40% இன்டர்பெரான் போன்றவைகளும் கையாளப்படுகின்றன. வலி, எரிச்சல் ஆகிய இவற்றை நீக்கிகளால் குறைக்கலாம். சைடாரபின், அமான்டிடின் போன்ற மருந்துகளும், சிரை வழி பி12 மருந்தும், கார் டிகோன் மருந்துகளும் சில வேளைகளில் பலனளிக் கின்றன. நூலோதி 1 அல்.ரா. Harrison's Principles of Internal Medicine (1962) Page 1968. 2. A.P.I Text Book of Medicine (1919) Page 1940 Text Book of Medicine By R. J.Vakil (1961). Page 1930. அம்மை நோய் இது அதி நுண்ணுயிரிகளால் ஏற்படும் தீவிரக் கடும் தொற்று நோயாகும். தோலில் அரும்புகளைத் தோற்றுவிக்கும் எல்லா அதி நுண்ணுயிர் நோய்களை யும் பொதுவாக அம்மை என அழைத்தாலும், இந் நோயின் கடுமையைக் குறிக்கும் வகையில் பெரியம்மை அல்லது அம்மை எனச் சிறப்பாக அழைக்கப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்நோய் உலகெங்கும் பரவியிருந்தது. அம்மை குத்தும் நடவடிக் கையினால் படிப்படியாக நோய் குறைக்கப்பட்டு விட்டது. ஆசியா கண்டத்திலிருந்து அம்மையை ஒரு நாளும் ஒழிக்க முடியாது என்ற கருத்து உலக சுகா தாரக் கழகத்தின் விடா முயற்சியினால் முறியடிக்கப் பட்டது. 1975 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் இருந்து அம்மை நோய் (Small pox) அறவே ஒழிக்கப் பட்டது. மனிதனை மட்டுமே பெரியம்மை தாக்கும். மற்ற மிருகங்களை இந்நோய் தொற்றிப் பரவுவதில்லை என்பதாலும் இதை ஒழிப்பது இயலும் செயலாயிற்று. அதி நுண்ணுயிர் இயல் : பெரியம்மை உண்டாக்கும் அதி நுண்ணுயிர் 'வேரி யோலா அதி நுண்ணுயிர்' என அழைக்கப்படுகிறது. இதில் வீரிய வேரியோலா, மந்த வேரியோலா என இரு உட்பிரிவுகள் உள்ளன. வீரிய வகை கடுமையான நோயையும், மந்த வகை மிதமான நோயையும் ஏற்படுத்துகின்றன. இவற்றை மின்னணு உருப்பெருக் கியின் மூலம் தனித்தனியாகப் பிரித்தறிய முடியாது. ஆனால் முட்டையின் கருச்சவ்வில் அதி நுண்ணுயிர் ஏற்படுத்தும் முத்துக்களின் தன்மையைக் கொண்டு பிரித்தறியலாம்.வேரியோலா அதி நுண்ணுயிர் 250 மில்லி மைக்ரான் அளவுடையது. பெரிய அதி நுண்ணு யிர்களில் இது ஒன்றாகும். ஒளி உருப்பெருக்கியில் எண்ணெய்க்கு அடியில் (Olmimersion) காணக்கூடியது. தோலின் மேலடுக்கு உயிரணுக்களில் அதி நுண்ணுயிர் களின் தொகுப்பாலான மூல உறுப்புகளைக் காண லாம். மின்னணு உருப்பெருக்கியில் வேரியோலா அதி நுண்ணுயிர் செங்கல்லைப் போன்ற தோ தோற்றத்தை அளிக்கிறது. இதன் மேற்பரப்பு, சுற்றிய நூல் உருண் டையின் தோற்றத்தையுடையது. சிலவற்றில் மேல் உறை காணப்படலாம். இதில் இதில் டிஆக்சி ரைபோ நியுக்ளியன் அமிலம் (D.N.A) அடங்கியுள்ளது. யம்மை நச்சுயிரிகள் பாலூட்டிகளின் உயிரணுக்கள் அடங்கிய திசு ஊடகத்தில் எளிதில் வளர்கின்றன; முட்டையின் கருச்சல்லில் ஒன்றிலிருந்து இரண்டு மில்லி மீட்டர் அளவுடைய அம்மை முத்துக்களை உண்டாக்கு கின் எறன. முயலின் கருவிழிச் சவ்வில் அழற்சியை ஏற்படுத்துகின்றன. அம்மை பரவும் விதம்: பெரி இயற்கையில் மனிதன் மட்டுமே பெரியம்மையால் துன்புறுகிறான். ஆய்வகத்தில் செயற்கையாகக் குரங்குகளுக்கு இந்நோயை உண்டாக்கலாம். இயற் கையில் குரங்கு வகை அம்மை வேறொன்று காணப்படு கிறது. அம்மை கண்ட நேரங்களில் மட்டுமே மனிதன் பிறருக்கு நோயைப் பரப்புகிறான். நோயற்ற நேரங் களில் மனிதன் அதி நுண்ணுயிர்களுக்குத் தாங்கிகளாக செயல்பட்டுப் பரப்புவதில்லை. அம்மை கண்ட நாளி லிருந்து தோல் அரும்புகள் பக்குக் கட்டிக் காய்ந்து உதிரும் வரை நோயாளி அம்மையைப் பரப்புகிறான். தோள் அரும்பு தோன்றும் தொடக்கப் பருவங்களில் நோய் பரவும் தன்மை உச்ச நிலையில் காணப்படுகிறது. நோயாளியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். அதி நுண்ணுயிர்களைச் சுவாசிப்பதால் அவர்களுக்கு அம்மை பரவுகிறது. உதிர்ந்த பக்குகளில் நெடு நாட் கள் அதி நுண்ணுயிரிகள் வீரியத்துடன் காணப்படு கின்றன. படுக்கை, தலையணை, மேலும் அவர் பயன் படுத்தும் பொருள்களில் அதி நுண்ணுயிர்கள் ஓராண்டுக் காலம் கூடக் காணப்படுகின்றன. தனால் சலவைத் தொழிலாளிக்கு எளிதில் அம்மை பரவுகிறது. ஏற்றுமதி செய்யும் பஞ்சுப் பொதிகளின் மூலம் அதி நுண்ணுயிர்கள் க த்தப்பட்டதாகச் சான்றுகள் உள்ளன. பெரியம்மையால் ஒரு முறை தாக்குண்டவர் மறுமுறை தாக்கப்படுவதில்லை. கருவுற்றவர்கள் நோயுற்றால் கருச்சிதைவு. குறைப்பிரசவம் ஏற்பட லாம்; அல்லது அம்மை நோயுடன் குழந்தை பிறக்க லாம். உடலில் அதிநுண்ணுயிர்கள் ஏற்படுத்தும் விளைவுகள் மூக்கின் வழியாகத் தொண்டை, மூச்சுக்குழல், குரல் வளை முதலியவற்றின் சவ்விலுள்ள உயிரணுக்களை வை தொற்றிப் பல்கிப் பெருகுகின்றன. அதி நுண் ணுயிர்கள் இரத்தக் குழாய்களில் பல்கி, மலிந்து, பல்