பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/927

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மொனைட்டுகள்‌ 891

மடல்களின் நுனி பற்களைப் போன்ற (Toothed) அமைப்புடனும் உள்ளன. இவ்வமைப்பு பெர்மியன்- டிரையாசிக் (Permian-triassic) காவங்களில் வாழ்ந்த செராட்டைட்டுகளில் (Ceratites) காணப்பட்டது. இ. அம்மொனிட்டிக் இணைப்பு (Ammonitic suture} : இதில் மடல்கள், முகடுகளின் நுனிகள் பிசிருகளுடன் (Frilled) காணப்படுகின்றன. இவ்வகை இணைப்பு பெர்மியன் - இடை உயிரூழிக் (Permian - Mesozoic) கால கட்டங்களில் காணப்பட்ட அம்மொனைட்டுகளிலேயே சிறப்பாகக் காணப்பட்டது. 3.வளிக்குழல்: வளிக்குழல் என்னும் நீண்ட குழல் முதல் குறுக்கிடைச் சுவரில் தொடங்கி ஏனைய அனைத்துக் குறுக்கிடைச் சுவர்களையும் ஊடுருவிச் செல்கிறது. ஒவ்வொரு குறுக்கிடைச் சுவரையும் இக் குழல் ஊடுருவிச் செல்லுமிடத்தில் குறுகிய இடைச் சுவர்க் கழுத்துப்பகுதி (Septal neck) காணப்படுகிறது. இடை உயிரூழிக் காலத்தில் வாழ்ந்த அம்மொனைட்டு களில் இக்கழுத்துப் பகுதியிலிருந்து குறுக்கிடைச்சுவர்கள் முன்னோக்கி வளைந்துள்ளன. ஆனால் தொடக்கக்கால அம்மொனைட்டுகளில் குறுக்கிடைச்சுவர்கள் பின் னோக்கி வளைந்து அல்லது வளர்ச்சி குன்றிக் காணப் படுகின்றன. 4. உடல் அறை: இவ்வறையின் நீளம் வெவ்வேறு உயிரிகளில் வேறுபடுகிறது. பெரிய சுருண்ட ஓடுள்ள வற்றில் உயிரியின் உடல் ஒரு சுற்றில் பாதியளவிற்கு அமைந்துள்ளது. அம்மொனைட்டுகளின் ஓடுகளைத் தவிர உடலின் ஏனைய மென்பகுதிகள் புதை படிவங்களாக மா மாற்ற மடையாததால் அவற்றின் தன்மையை அறிய இயல் வில்லை. படம் 1. அம்மொளைட்டுப் புதை படிவங்கள் அம்மொனைட்டுகளின் பரிணாம வரலாறு: அம்மொ னைட்டுகள் நாட்டிலாய்டுகலிருந்து (Nautiloids) பாக்லி அம்மொனைட்டுகள் 891 டிரிட்டாய்டுகள் (Bactritoids) வழியே மூன்று கிளை களாகப் பரிணமித்தன. பரிணாமத்தின் இவற்றின் மூன்று நிலைகளும் முறையே, மேல் தொல்லுயிர் ஊழி (Upper palaeozoic era) கோனியாட்டைட்டு களாகவும், டிரையாசிக் காலத்தில் செராட்டைட்டு களாகவும், பின்னர் ஜுராசிக் (Jurassic), கிரெட்டே சியஸ் காலங்களில் அம்மொனிட்டிடுகளாகவும் பரிண மித்தன. முதலில் தோன்றிய கோணியாட்டைட்டு களின் இணைப்புக் கோட்டில் ஒரே ஒரு மடல் மட்டு மிருந்தது. குறுக்கிடைச்சுவர்கள் நாட்டிலாய்டுகளில் உள்ளவை போன்று அமைந்திருந்தன. சற்றுப் பிற் காலத்தைச் சேர்ந்த கோனியாட்டைட்டுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மடல்களும், அம்மொனைட்டு களில் உள்ளதைப் போன்ற குறுக்கிடைச்சுவர்களும் அமைந்திருந்தன. செராட்டைட்டுகள் பெர்மியன் காலத்தில் தோன்றி டிரையாசிக் காலத்தில் பல்கிப் பெருகின. இவற்றில் ஏறக்குறைய 400 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை 30 அம்மொனைட்டுப் பிரிவுகளாக அல்லது சிறு தொகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவும் ஒரு மில்லியன் ஆண்டு கள் நீடித்தது. செராட்டைட்டுகள் எளிமையான மடல்களும், இரம்பப்பல் போன்ற (Cerrate) விளிம் புடன் கூடிய முகடுகளும் பெற்றிருந்தன. பின் - டிரை யாசிக் காலத்தைச் சேர்ந்தவற்றில் இணைப்புக் கோடு கள் அதிகச் சிக்கலாகவும், அம்மொனிட்டிடுளின் கோடு கள் போன்றும் காணப்படுகின்றன. பெர்மியன் காலத்தில், இரு குடும்பங்களைச் சேர்ந்த அம்மொனைட்டுகளைத் தவிர மற்ற அனைத்தும் அற்றுப் போயின. இந்த அழிவிற்கான காரணம் தெரியவில்லை. இவற்றில் ஓட்டோசெரட்டாசியா (Otoceratacea) என்னும் குடும்பத்திலிருந்து டிரையாசிக் அதிக காலத்தில் அளவு செராட்டைட்டுகள் தோன்றின. டிரையாசிக் கால முடிவில் மற்றுமொரு முறை அம்மொனைட்டுகள் பேரழிவிற்குட்பட்டன. இவ்வழிவிலிருந்து எஞ்சிய ஃபில்லோசெராட்டினா (Phylloceratina) துணை வரிசையில் ஓட்டோசெரட்டா சியா குடும்பத்தைச் சேர்ந்த ஒரே ஓர் இனத்திலிருந்து ஜூராசிக், கிரெட்டேசியஸ் காலங்களில் மற்றுமொரு முறை அம்மொனைட்டுகள் பல்கிப்பெருகின. முகடு களுடன்கூடிய கூடுகளுடைய ஃபில்லோசெராட்டிடுகள் (Phylloceratids) டிரையாசிக் காலந்தொடங்கி கிரெட் டெசியஸ் காலம்வரை பெரும் பரிணாம மாற்றம் ஏது மின்றி நிலையான மெல்லுடலித் தொகுதியாக வாழ்ந்தன. ஃபில்லோசெராட்டினாவிலிருந்து தோன் றிய லைட்டோசெராட்டினாவிலிருந்தே (Lytoceratina) அம்மொனைட்டினாவைச் (Ammonitina) சேர்ந்த உயிரிகள் தோன்றின.

லைட்டோசெராட்டிடுகள் பிரிவைச் சேர்ந்த சுருள் நிலை அமைப்பற்ற ஓடுடைய சில அம்மொனைட்டுகள் ஜூராசிக் காலத்தில் வாழ்ந்தன. கிரெட்டேசியஸ் காலத்தில் அம்மொனைட்டுகளின் இயல்புக்கு மாறான