894 அம்மோனியா
894 அம்மோனியா பெரும்பாலான அம்மோனியம் உப்புகள் எளிதில் அம் மோனியாவில் கரைகின்றன. இது நீரில் நிகழ்வது போலவேயாகும். ஆனால் இக்கரைப்பானில் படிகக்கூடு ஆற்றலும் (crystal lattice energy), என்ட்ரோபி விளை வுகளும் (entropy changes) கரைப்பானேற்ற ஆற்றலைக் காட்டிலும் அதிகம். நீர்ம அம்மோனியாவில் நடை பெறும் எளிய அயனி வினை, அம்மோனியம் உப்புக்கும் (அமிலம்), கரையும் உலோக அமைடுக்கும் (காரம்) இடையே நிகழும் நடுநிலையாக்கல் வினை (neutraliza- tion reaction) ஆகும். மின்கடத்து முறை (conducto- metric) அல்லது மின் அழுத்தத் தரம் பார்த்தல் (poten. tiometric titration) முறையில் நடுநிலையாக்கலை அளந்தறியலாம். ஃபினால்ஃப்தலீன் போன்ற காட்டி களையும் தரம் பார்த்தலுக்குப் பயன்படுத்தலாம். மற்ற அயனி வினைகள் : Ba(NO3)2+ 2 AgCl AgNO3 + KNH2 . -- BaCl)2AgNO, AgNH, ( ) + KNO, Hg3N( ) + 6 KI + 4NH3 3 Hgls + 6 KNH, சில்வர் குளோரைடு. [Ag(NH3)]CI ஆகக் கரைகிறது. துத்தநாக அமைடு போன்றவை அமில, கார பண்பு களையும் கொண்டுள்ளன. அம்மோனியா, நீர் ஆகியவை கரையும் பொருள் களுடன் வினைப்படுவதிலும் (solvolysis) ஒத்துள்ளன. கார உலோக ஹைட்ரைடுகளும் (alkali hydrides) ஆக்சைடுகளும் சிதைவடைகின்றன. MH + NH --→ MNH, + H, M.O + NHa MNH + MOH metal பல அலோக ஹாலைடுகளும், வலிமைகுறைந்த உலோக ஹாலைடுகளும் நீர்ம அம்மோனியாவுடன் எளிதில்வினை புரிந்து அமைடுகளைத் (amides) தருகின்றன. அமைடு வெப்பப்படுத்தப்பட்டால் அம்மோனியாவை இழந்து. படிப்படியாக இமைடு (imide), நைட்ரைடு (nitride) ஆகியவற்றைத் தருகிறது. அம்மோனியா நீர்மத்தில் பல இயற்பு வேதியியல் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. நீர்ம உலோகக் அம்மோனியாவில் அனைத்துக் கார உலோகங்களும் காரமண் உலோகங் களும் (பெரிலியம் நீங்கலாக) நீர்ம அம்மோனியாவில் கரைகின்றன. +2 ஆக்சிஜனேற்ற நிலையில் யூரோப் பியம் (europium), இட்டர்பியம் (ytterbium) ஆகியவை யும் கரைகின்றன. இவ்வுலோகங்களின் கரைதிறன்கள்: Li = 10.9, Na 24.8, K 46.4 (- 33°C) cs H 334 (-50°C) ஆகும் www கரைசல்கள். இவை வெப்பநிலையுடன் மிகச் சிறிதளவே மாறுபடு கின்றன. தரு கரைப்பானை ஆவியாக்கிக் கார உலோகங்களைச் கரைசலினின்றும் பெறலாம். காரமண் உலோகங்கள் M.6NH3 போன்ற அம்மோனியேட்டுகளைத் கின்றன. சிதைவடைவதில் இவை யாவும் ஒத்துள்ளன. 2 Na + 2 NH3 . màn 2 NaNH + H இவ்வினை புறஊதா ஒளியாலும், இரும்பு. பிளாட் டினம் போன்ற உலோக ஊக்கிகளாலும் அதிகப்படுத் படுகிறது. இக்கரைசல்கள் நீர்த்த கரைசலில் கருநீல நிறமும், அடர் நிலையில் வெண்கலத்தின் நிறமும் உடையவை. இதற்குக் காரணம் 15000 A நிரலாகும். இவ்வனைத்து உலோகங்களுக்கும் உட்கவர்தல் (absor- ption) ஒத்துள்ளது. க ல அனைத்துக் கரைசல்களும் அதிக மின்கடத்துத்திறன் கொண்டவை. செறிவுடன் சீராக மா றுவதில்லை. நீரில் மிக நீர்த்த நிலையில் இக்கரைசல்களின் மின் கடத்துத் திறன் முழுதும் அயனியான உப்பின் மின் கடத்துத்திறனைவிட அதிகம்; அதிசெறிவுக் கரைசலில், தூய உலோகத்தின் கடத்துதிறனை ஒத்துள்ளது. நீர்த்த நிலையில் கரைப்பானேறிய உலோக அயனி களும். கரைப்பானேறிய எலெக்ட்ரான்களும் உள்ளன. நீர்த்த கரைசல்கள் காந்த ஈர்ப்புப் பண்புடையவை (paramagnetic). இப்பண்பு, செறிவு அதிகமாகக் குறை கிறது. குறைந்த கடத்துதிறன் நிலையில் காந்த விலக்கப் பண்பைப் (diamagnetic) பெறுகிறது. தயாரிப்பு.அம்மோனியாவைப் பெருமளவில் தயாரிக்கும் முறைகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். 1. நிலக்கரியைச் சிதைத்து வடித்தலில் துணைப் பொருளாகக் கிடைக்கும் அம்மோனியாவைப் பிரித்தெடுத்தல். 2. செயற்கை முறையில் தயாரித்தல், இவ்விரு முறைகளில் இரண்டாவதாகிய ஹேபர் செயற்கை முறையே சிறந்தது. .' ஹேபர் முறை (The Haber Process). நைட்ரஜன் அய்ட் ரஜன் ஆ அம்மோனியாவை ஆகியவை வினைபுரிந்து உண்டாக்கும் வினை ஒரு மீள்வினை ஆகும். N, + 3 H, → 2NHg - 22,400 கலோரிகள். நிறை தாக்க விதிப்படியும் (Law of Mass Action), லீ சாட் லியர் (Le Chatelier) கொள்கைபடியும், நைட்ரஐன்- அய்ட்ரஜன் கலவையின் அழுத்தத்தை அதிகரிக்க அதிகரிக்க, அம்மோனியாவின் அளவு அதிகரிக்கும். வெப்பம் உமிழ் வினையாதலின் (exothermic reaction) வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க, அம்மோனியாவின் அளவு குறையும்.
எனவே அம்மோனியாவைப் பெருமளவில் பெற அதிக அழுத்தமும், குறைந்த வெப்பநிலையும் தேவை. .