பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/932

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

896 அமண்ட்சன் கடல்

பற்ற வைக்கும் பொழுது உலோகங்களை ஆக்சிஜ னேற்றமடையாமல் பாதுகாக்கிறது. இருப்பின் மீது துத்தநாகத்தைப் பூசப் (galvanising) பயன்படுகிறது. நூற்பாலைத் தொழிலிலும் இது பயன்படுகிறது. அண்மைக் காலத்தில் எளிய சிக்கனமான உரமாகப் பெருமளவில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அம்மோனியம் நைட்ரேட் (NH4NO3). அடர் நைட்ரிக் அமிலத்தை, அம்மோனியா ஆவியால் நடு நிலையாக்கி அம்மோனியம் நைட்ரேட் பெறப்படு கிறது. இது உருகிய நிலையில் இருக்கும். அம்மோனியம் சல்ஃபேட், சோடியம் நைட்ரேட் ஆகியவற்றை இரட்டைச் சிதைவடையச் செய்வதனால் இதனைப் பெறலாம். (NH4)2SO4 + 2 NaNO3 -- -2NHNO3 + Na₂SO. சோடியம் சல்ஃபேட்டைப் (Na,SO,.10 H,O) படிக மாக்கிப் பின்னர் மீதமுள்ள கரைசலை ஆவியாக்கி அம் மோனியம் நைட்ரேட் பெறப்படுகிறது. அம்மோனியம் சல்ஃபேட்டை, கால்சியம் நைட்ரேட்டுடன் இரட்டைச் சிதைவடையச் செய்தும் பெறப்படுகிறது; அம்மோ னியா சோடா முறையில் சோடியம் குளோரைடுக்குப் பதிலாக, சோடியம் நைட்ரேட்டைப் பயன்படுத்தியும் பெறப்படுகிறது. இது ஐந்து வடிவங்களில் வெண்ணிறப் படிகமாக உள்ளது.எளிதில் நீரில் கரைகிறது. அப்போது அதிசு அளவு வெப்பத்தை உட்கொள்கிறது (endothermic); எனவே உறைகலவை உப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. சிறிதளவு நீரில் பெருமளவு உப்பைக் கரைத்தால் மிகக் குறைந்த வெப்ப நிலையைப் பெறலாம். 20% நைட்ரஸ் ஆக்சைடு தயாரிக்கவும், அமெட்டால் (80% NH, NO & + 20 T.N.T.), அமெனால் (பெருமளவு NH NO,, சிறிதளவு அலுமினியம் அல்லது கரி) போன்ற வெடிமருந்துகளைத் தயாரிக்கவும் பயன்படுகிறது. அம் மோனியம் சல்ஃபேட், கால்சியம் கார்பனேட்டுடன் கலக்கப்பட்டு உரமாகவும் பயன்படுகிறது. அம்மோனியம் சல்ஃபேட் ((NH, ) S0,). இது அம் மோனியாவின் மிக முக்கிய வணிக உப்பாகும். அம் மோனியா வாயுவை 60 சதவீதம் சல்ஃப்யூரிக் அமிலத் தில் செலுத்திக் கரைசலை ஆவியாக்குவதாலும் அல்லது ஜிப்சத்தை (CaSO4.2 Hg0) நீரில் படியச்செய்து அதனுள் அம்மோனியாவையும் கார்பன் டை ஆக்சை டையும் செலுத்துவதாலும் இது பெறப்படுகிறது; கால்சியம் கார்பனேட் வீழ்படிவாகவும், அம்மோனியம் சல்ஃபேட் கரைசலிலும் கிடைக்கின்றன. கரைசலை ஆவியாக்கி அம்மோனியம் சல்ஃபேட் பெறப்படுகிறது. அம்மோனியம் சல்ஃபேட் பெரிய, தெளிந்த படிகங் களாகக் கிடைக்கிறது; பொட்டாசியம் சல்ஃபேட்டுடன் வடிவொத்தது; நீரில் அதிக அளவு கரைகிறது. வெப்பப் படுத்தும் பொழுது 100°Cக்குக் கீழேயே அம்மோனியா வெளியேறி அம்மோனியம் பைசல்ஃபேட்டைக் கொடுக் கிறது. அம்மோனியம் பைசல்ஃபேட் ஓர் அமில உப்பு. இது பெருமளவில் உரமாகப் பயன்படுகிறது; மற்ற அம்மோனியம் சேர்மங்களைத் தயாரிக்க மூலப்பொரு ளாகப் பயன்படுகிறது. அம்மோனியம் தயோசயனேட் (NH SCN). மஞ்சள் அம் மோனியம் சல்ஃபைடை ஹைட்ரோசயனிக் அமிலத் துடன் சேர்த்து வெப்பப்படுத்தினால் அம்மோனியம் தயோ சயனேட் (ammonium thiocyanate) பெறப்படு கிறது. இது ஃபெர்ரிக் அயனிக் கரைசலுடன் இரத்தச் சிவப்பு நிறத்தைத் தருகிறது, ஃபெர்ரிக் அயனியை இனங்காண இது பயன்படுகிறது. (காண்க; ஹைட் ரசீன்; நைட்ரஜன்; அமீன்கள்) நூலோதி பு.க.மு. 1. McGraw-Hill Encyclopaedia of Chemistry. Fifth Edition. 1983. 2. Cotton, Albert F., and Wilkinson. Geof- frey.. Advanced Inorganic Chemistry. Third Edition. Wiley Eastern Ltd, New Delhi, 1979. 3. Day, Clyde M. and Selbin, Joel, Theoretical Inorganic Chemistry, Reinhold, 1966. அமண்ட்சன் கடல் கூறப்படுகின்றது. Roald அமண்ட்சன் கடல் (Amundsen sea) என்பது அண் டார்க்டிக் கண்டத்தையடுத்து ராஸ் கடலுக்கு (Ross sea) மிக அருகே அமைந்துள்ளதொரு பனிபடர்ந்த கடலாகும். இது தென் துருவக் கடல் என்றும் (South pole sea) பனிக்கட்டிக் கண்டம் (Icy Continent) எனப்படும் அண்டார்க்டிக் கண்டத்தின் நடு மத்தியில் அமைந்துள்ள, எப்பொழுதும் பனியால் போர்த்தப்பட்ட குளிர்ப் பிரதேசமாகிய தென்துருவத் தினை (South pole) முதன் முதலாக அடைந்த பெருமை அமண்ட்சன் ரோல்டு நார்வே நாட்டைச் சேர்ந்த (Amundsen 1872-1928) என்பவரையே சாரும். 1872இல் பிறந்த இந்நார்வே கடலியல் வல்லு நர் 1897இல் பெல்ஜிய நாட்டு கடலாராய்ச்சிக் கப்ப லாகிய பெல்ஜிக்கா (Belgica) எனும் கப்பலில் தென் துருவ ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டார். இக் கப்பலில் அம்ன்ட்சன் தலைமையில் சென்றவர்கள்தான் முதன் முதலாகப் பனிக் காலத்தைப் (Winter) பனிக் கண்டத்தில் (Antarctica) வெற்றிகரமாகக் கழித்தனர். பனிக்காலம் முடிந்ததும், வட தென் துருவக் கடலை எப்படியாவது அடைந்து வெற்றிகாண விழைந்து அதற்காக ஆயத்தமாகும் சமயம், அமெரிக்க வல்லுநர் ராபர்ட் பியாரி (Robert Peari) என்பவர் வடகடலை