பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/934

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

898 அமராந்தேசி

898 அமராந்தேசி 1918 ஆம் ஆண்டில் அவர் புதிதாகக் கட்டிய மாட் என்றகப்பலின் மூலம் திரும்பவும் ஆர்க்டிக் பகுதிக்குச் சென்று வரத் தொடங்கினார். அவர் வட துருவத்தின் வழியாக ஆசியாவிலிருந்து வட அமெரிக்கா செல்லத் திட்டமிட்டார். ஆனால் துருவத்தில் உள்ள பனிப் பகுதிகளில் கப்பல் செல்ல முடியாத காரணத்தால் இம் முயற்சிகளில் தோல்வியுற்றார். எனினும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அலாஸ்காவைச் சென்றடைந் தார். ஆர்க்டிக் பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வைத் தொடர்வதற்கு, மாட் என்ற கப்பலைத் திருப்பி அனுப்பிவிட்டு, வடதுருவத்தை விமானத்தின் மூலம் கடக்கும் திட்டத்தில் ஈடுபட்டார். இந்தத் திட்டம் 1926 ஆம் ஆண்டு மே மாதம் 11-13 நாட்களில் வெற்றிகரமாக நிறைவேறியது. அம்பர்டோ நோபைல் என்ற இத்தாலி விமானியால் செலுத்தப்பட்ட நார்ஜ் என்ற விமானத்தின் மூலம் துருவத்தின் ஸ்பிட்ஸ்பெர் கன். அலாஸ்காவிலுள்ள டெல்லா ஆகிய பகுதி களுக்கு இடையில் 2,700 மைல் தொலைவைக் கடந் தார். இவருடன் அமெரிக்க ஆய்வாளர் லிங்கன் எல்ஸ் வொர்த்தும் சென்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அமண்ட்சனுடைய கடைசி வீரச் செயல் நிகழ்ந்தது. 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இவர் இரண்டாம் ஆர்க்டிக் விமானப் பயணத்தின் போது விபத்துக்குள்ளான நோபைலுக்கு உதவி செய்யக்கருதி, நார்வேயிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அமண்ட்சனுடைய விமானம் மறைந்து விட்டது. ஆனால் நோபைல் பின்னர் மற்றவர்களால் மீட்கப்பட்டார். சில திங்களுக்குப் பின்னர் கண்டுபிடிக் கப்பட்ட உடைந்த விமானத்தின் பகுதிகளின் மூலம் அமண்ட்சன் இறந்து விட்டார் என்ற செய்தி கண்டறி யப்பட்டது. அமராந்தேசி இது ஒருபூவிதழ் வட்டமுடைய (Monochlamydeous) இருவிதையிலைக் குடும்பமாகும். அமராந்தேசியில் (Amaranthaceae) 64 பேரினங்களும் ஏறக்குறைய 800 சிற்றினங்களும் அடங்கியுள்ளன. இதற்கு அமரந்த் குடும்பம் (Amaranth family) என்ற பெயரும் உண்டு. இது வெப்ப மண்டலப் பகுதிகளில் (Tropics), முக்கிய மாக ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் பரலியிருக் கின்றது. தென்னிந்தியாவில் இதன் 13 பேரினங்களும் 33 சிற்றினங்களும் இருக்கின்றன. பொதுப்பண்புகள் இதில் ஒரு அல்லது பல பருவச் (Annual or Perennial) செடிகளுண்டு. புதர்ச்செடிகள் 2 6 03 5 4 1. செடியின் ஒரு பகுதி 7. மலட்டு மகரந்தத்தாள் 2. விதை 9. பூ மொட்டு சூலகம் 6. ஆணகத்தின் விரிப்புத் தோற்றம் 8. பூவடிச்சிதல்.