பக்கம்:அறிவியல் களஞ்சியம் 12.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

756 திருப்பம் அல்லது ஈட்டி வடிவிலிருக்கும். இலைக்காம்பின் நீளம் 2 செ.மீ. நீளமும் மஞ்சரி 15 செ.மீ. நீளமு முடையன.பூவடிச்செதில்கள் தலைகீழ் ஈட்டி வடிவானவை. கூரான இதன் நுனியில் மென்மயிர் காணப்படும். பூக்காம்பு 3 மி.மீ. நீளமானது.ஐந்து புல்லிவட்டக் கதுப்புகள் காணப்படும். மேற்பகுதியிலுள்ள கதுப்பு 3 மி.மீ. நீளமும், கீழுள்ள கதுப்பு 4.மி.மீ. நீளமுமுடையன. இதிலும் மென் மயிர் இருக்கும். அல்லி இதழ் அழுக்கு வெள்ளை அல்லது இளம் ஊதா நிறமானது. அல்லிவட்ட மேல் கதுப்பு 4 மி.மீட்டரும் கீழ்க்கதுப்பு 6 மி.மீட்டரும் நீளமுள்ளவை. கனியில் புல்லிவட்டம் பையைப் போல் இருக்கும். காயுள்ள தண்டு வளைந்திருக்கும், விதைகள் நீள்வட்ட வடிவில் கதுப்பாக இருக்கும். திருநீற்றுப்பச்சைச் செடிகளின் உயரம், வளரும் தன்மை, மென்மயிர் அளவு, தண்டு, இலை, பூக்களின் நிறம் ஆகியவற்றிற்கேற்பப் பல வகைகள் காணப்படுகின்றன. அவை ஆசிமம் பெலிசிகம் வகை மினிமா Ocimum basilicum var.minima), ஆ.பெலிசிகம் வகை கிளாப்ரேட்டம் (O.b.var.glabratum) ஆ.பெசிலிகம் வகை கிரிஸ்போ (O.b.var. Criba), ஆ. பெசிலிகம் வகை பர்புரசென்ஸ் O.b.var. Purpurascence), ஆ.பெசிலிகம் வகை திர்சிஃ யுளோரா (O.b.var. Thyrsiflora) ஆகும். சாகுபடி.பனி பெய்யாத பகுதிகளில் இச்செடி நன்கு வளரும். இதன் வளர்ச்சிக்கு சூரிய ஒளி மிகவும் தேவைப்படுகிறது. காற்றின் கேட்டிலிருந்து இச்செடிகளைப் பாதுகாத்தல் வேண்டும். விசைக்காற்றினால் இதன் தண்டு முறிந்துவிடும். இதன் மணம் தரும் தன்மைக்காகவும், மருந்துக் குணங்களுக்காகவும் உலகின் வெப்பப்பகுதிகளில் இச்செடி வளர்க்கப்படுகிறது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதை மலைப்பகுதியில் அக்டோபர்- நவம்பரிலும், சமவெளியில் மார்ச் - ஏப்ரலிலும் விதைக்கப்படுகிறது. வரிசைக்கு வரிசை 40 செ.மீ. இடைவெளிவிட்டு 30 செ.மீ. இடைவெளியில் செடிகள் நடப்படுகின்றன. ஃபிரான்ஸ் நாட்டில் உற்பத்தியாகும் செடியின் எண்ணெயே புகழ்பெற்றது. விதைத்த 2-3 திங்களில் செடிகள் அறுவடை செய்யப்படுகின்றன. செடியைச் சூரிய ஒளி வீசும் நாள்களில் பூக்கள் விடுவதற்குச் சில நாள்கள் முன்பாக அறுவடை செய்தல் வேண்டும். தரை மட்டத்திற்குச் சிறிது மேலே அரிவாளால் அறுத்து உலர்த்திப் பதப்படுத்த வேண்டும். உற்பத்தியும் வணிகமும். திருநீற்றுப்பச்சை தன்னிச் சையாக வளர்கிறது. ஆனால் உலகச் சந்தையில் விற் பனைக்கு வருபவை அனைத்தும் சாகுபடி செய்யப்ப டுபவையே. இந்தியா, மையத்தரைக்கடல் நாடுகள், அமெரிக்கா ஆகியவற்றில் பயிரிடப்படும் செடிகள் பெரும்பாலும் அவ்வவ் நாட்டு மக்களாலேயே பயன்படுத்தப்பட்டுவிடுகின்றன. இத்தாலி நாட்டினர் பச்சைச் செடிகளாகவே சந்தையில் விற்பது வழக்கம். இச்செடியைச் சாகுபடி செய்யும் முறை எளிதாக உள்ளமையால் வெப்பம் மற்றும் குளிர் நாடுகளில் மிகுதியாகச் சாகுபடி செய்கின்றனர். பயன்கள். இச்செடியின் சாறு வாதத்தை நீக்கும். வெப்பம், வேர்வை ஆகியவற்றை உண்டாக்கும். வயிற்றுப் போக்குக்கும், முடக்குவாதத்திற்கும், மண்டையிடிக்கும் உதவும். வாய் நாற்றத்திற்கு இதன் சாற்றை வாய்க் கொப்பளித்தல் வேண்டும். இச்செடி புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. சாற்றைத் தடவப் படை நோய் போகும். பூக்களுக்குச் சிறுநீரைப் பெருக்கும் தன்மை உண்டு. விதை, பூ ஆகியன சுறுசுறுப்பைத் தரும். திருநீற்றுப்பச்சையின் இலைகளைத் தூய்மையாக்கிச் சாறெடுத்துக் காதுநோய்களுக்குச் சில துளிகள் விடலாம். இது மூக்கு நோய்க்கும் உதவும். இலைச்சாறு 10 துளியுடன் 10 துளி தூதுவளை இலைச்சாற்றை கலந்து கஸ்தூரி மாத்திரையைத் தேனில் குழைத்து 100 மி.லி. பால், சிறிதளவு பனங்கற்கண்டைச் சேர்த்துக் காலை வேலைகளில் மட்டும் அருந்தி வரக் கபநோய், மார்புச்சளி, சயரோகம், குருதி கலந்து சளி வருதல் போன்றவை நீங்கும். இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சிச் சாறு சுண்டியபின் எடுத்துப் புட்டியில் சேகரித்து வைத்துக் கொண்டு வலியுள்ள காதுகளில் 2 துளி விட்டுப் பஞ்சு வைத்துக் காது நோயினைப் போக்கலாம். திருநீற்றுப்பச்சை இலை, கற்பூரவல்லி இலை,மஞ்சள் கரிலாங்கண்ணி இலை ஆகிய ஒவ்வொன்றும் 100 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஒவ்வொன்றும் 15 கிராம் எடுத்து மைபோல் அரைத்துச் சுண்டைக்காயளவு உருண்டைகளாக்கி நிழலில் உலர்த்தி நாளும் காலை, மாலை ஒரு மாத்திரை வீதம் 40 நாள்கள் சாப்பிட்டுப் பால் அருந்தி வரத் தொண்டையில் சதை வளர்தல், இருமல், தும்மல், மூக்கடைப்பு நீங்கும். -கோ.அர்ச்சுணன் திருப்பம் உயிரினங்களில் முழு உடலோ உறுப்புகளோ ஒரு நிலையிலிருந்து வேறு நிலைக்கு மாறி அமையும் நிகழ்ச்சிக்கு அசைவு (movement) என்று பெயர். தன்னிச்சையாகவோ