பக்கம்:அறிவியல் களஞ்சியம் 18.pdf/972

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இம்முறை உதவுகிறது. சிலவகை தீவனப்புல் லோலியம் மல்ட்டிஃபுளோரம் (Lolium multiflorum) ரகங்களின் வேர்கள் புற ஊதாக்கதிர் வெளிச்சத்தில் ஒளிரும் தன்மையைக் கொண்டிருக்கும். ஆனால் லோலியம் பெரன்னி ரகத்தில் பெரும்பான்மையான வேர்கள் ஒளிரும்தன்மை கொண்டிருக்காது. எனவே, இந்த ஒரு முறையை மட்டும் நம்பி இனம் கண்டறிவது தவிர்க்கப்பட வேண்டும். வளர்ப்பு அறைகளி குறைந்தது நூறு விதைகளையாவது ஊன்றி தகுந்த சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புடன் பயிரின் குணாதிசயங்கள் முழுமையாக வெளிப்படும் வண்ணம் வளர்த்திட வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குப் பின் பயிர்கள் துல்லியமாக ஆராயப்பட்டு இளம் பிரிக்கப்படுகின்றன. அடையாளம் வயல்வெளி ஆய்வில் பயிர் வளர்ப்பு செய்து பாரம்பரிய குணங்களை அறிய முடிகிறது. பயிர் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துக் காரணிகளும், ஏற்றதாக இருப்பின் பாரம்பரிய குணாதிசயங்கள் முழுமையாக வெளிப்பட்டு ரகங்களை எளிதில் கண்டுகொள்ள இயலும். சோதிக்கப்படுகிற ரக விதைகளை வரிசையில் விதைக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் ஒப்பீட்டு மாதிரி விதைகளையும் வரிசையாக விதைக்க வேண்டும். குறிப்பாக அயல் மகரந்தச் சேர்க்கை உள்ள பயிர்களுக்கு இம்முறை மிகவும் இன்றியமையாத தாகும். வளர்ச்சிக் கட்டத்தில் சோதிக்கப்படும் ரகங்களின் பண்புகள் மாதிரி ரகங்களின் பண்புகளோடு ஒப்பிடப்பட்டு ரக வேறுபாடுகள் அறியப்படுகின்றன. அனைத்து நாடுகளிலும் விதை இளம், அறிய எனத் தனியான அறிமையங்கள் இல்லை. அதிகார பூர்வமான அல்லது வணிக விதைப் பகுப்பாய்வுக் கூடங்களில் ஒரு பகுதி விதை இனமறி மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன. இதற்கென தனியாக விதை இளமறி மையம் 953


அலுவலர்கள் நியமிக்கப்படுவதில்லை. பெரும் பாலான நாடுகளில் அரசால் அறிவிக்கப்பட்ட விதைப்பகுப்பாய்வுக் கூடத்தின் விதைப் பகுப்பாய்வு அலுவலரே இப்பணியை மேற்கொள்கிறார். இக்கூடங்கள் அனைத்தும் அனைத்துலக விதைப் பகுப்பாய்வுக் கூட்டமைப்பிள் (international seed test- ing association) கீழ் இயங்கி வருவதாகும். வடஅமெரிக்காவில் உள்ள மத்திய மாகாண மற்றும் மாவட்ட அளவிலான விதைப் பகுப்பாய்வுக் கூடங்கள் அதிகாரப்பூர்வ விதைப் பகுப்பாய்வாளர் கூட்டமைப்பின் (Association ofofficai Seed Ana- lysts - A.O.S.A) கீழ் இயங்கி வருகின்றன. விதை இனம் அறிய இரண்டு முக்கிய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பயிற்சி பெற்ற முழுநேர இனம் கண்டறியும் வல்லுநர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். முதலாவது லெளின்கிரேடு நகரத்தில் உள்ள என்.ஐ.லாவிலோவ அகில இந்திய ஐக்கிய தாவரத் தொழில் நிறுவனம் (N.I.Vavilov All Union Institute ofPlant Industry), இரண்டாவது அமெரிக்காவில் உள்ள புதிய பயிர் ஆராய்ச்சிக் கிளை (New crop Research Branch) ஆகும். முந்தைய நிறுவனத்தில் 1,75,000 விதை இன மாதிரிகளும், இரண்டாவதில் 90,000 விதை இன மாதிரிகளும் சேமிக்கப்பட்டுள்ளன. இவை தவிர. ஃபோர்ட்கோலின்ஸ் கொலராடோவில் உள்ள தேசிய விதை சேமிப்பு ஆய்வுக் கூடத்தில் 85,000 விதை மாதிரிகள் இனம் வாரியாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. துணைநூதல்கள். R.L.Agar wal, Seed Tech- nology, Oxford & IBH Publishing Co., New Delhi, 1982.