அமைப்புப் பொறியியல் 77
களில் இந்த நோக்கங்கள் நிறைவு தருபவையாகவோ முரணியல்புடையனவாகவோ அமைகின்றன. எனவே ஓர் அமைப்பின் செயல்திறம் பற்றிய ஒரு தனித்த உரைமுறையை (criterion) உருவாக்கிவிட முடியாது. நல்லவேளையாக இத்தகைய பிரச்சினைகளை ஒப்புரு வாக்கம் என்ற முறை மூலம் படிக்கலாம். அமைப்பை மாற்றாமல் ஓர் அமைப்பிலுள்ள பல்வேறு வாய்ப்பு நிலைகளை ஒப்புருவாக்கத்தின் மூலம் மின்துகளியல் வேகத்தில் (electronic speed) அந்த அமைப்பிலுள்ள மக்களின்பால் விளைவேதும் ஏற்படுத்தாமல் படிக்க லாம். காண்க, ஒப்புருவாக்கம். முடிவுகள். பெரும்பாலான அமைப்புகளைப் படிக்க பேரமைப்புகளைப் பற்றிய கோட்பாடுகள் தேவைப் படுகின்றன. சமூகம் பல்வேறு பேரமைப்புகளால் உருவாக்கப்பட்டதாகும். நாம் அச்சமூகத்தில் வாழ அதைப்பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண் டியது இன்றியமையாததாகையாலும் கட்டுப்பாட்டுக் கோட்பாட்டைப் பயன்படுத்தாமல் இது இயலாது து என்பதாலும் மேற்கூறிய தேவை ஏற்படுகிறது. பேரமைப்புக்களுக்கான சில எடுத்துக்காட்டுகளாகப் பொருளாதாரம், கல்வி, நகர அமைப்புகள், போக்கு வரத்து, ஆற்றல், சூழ்நிலை ஆகிய அமைப்புகளைக் குறிப்பிடலாம். இந்த அமைப்புகள் ஒன்றையொன்று சார்ந்தவையல்ல. எனவே இவற்றோடு தொடர் புடைய பிரச்சினைகள் ஆர்வமூட்டக்கூடியனவாயும் சிக்கலானவையாயும் உள்ளன. எடுத்துக்காட்டாகச் சூழ்நிலையைச் சார்ந்த பிரச் சினைகள் முதன் மையாக ஆற்றல் பயன்பாட்டின் விளைவால் ஏற்படுவன. இந்தப் பிரச்சினைகளைக் குறைக்கவோ அல்லது முற்றிலும் நீக்கவோ முடியும். சூழ்நிலைச் செந்தரங்கள் பற்றிய கச்சிதமான கொள் கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இதைச் சாதிக்கலாம். என்றாலும் தொழில்நுட்பக் குறை பாடுகளின் காரணமாக மிகக் கச்சிதமான கொள் கையை நடைமுறைப்படுத்துவது, சமூகத்தின் இயல் பான செயல்பாடுகளைக் குலைத்துப் பொருளாதார இக்கட்டுகளை உண்டாக்கும். எனவே ஆற்றல், சூழ் நிலை, பொருளாதாரம் மூன்றும் ஒன்றோடொன்று நெருக்கமாகப் பின்னிப் பிணைந்தபடி பரவி நிலவு வன. மேலும் அரசின் கொள்கைகள் ஒருங்கிணைந்த அமைப்புகளில் வலிமை மிக்க விளைவுகளை ஏற்படுத் துகின்றன. காண்க, அமைப்புச் சூழலியல் (systems ecology). வளர்ந்து வரும் கணிபொறிக் காலக்கட்டம், பல்வேறு அளவியலான நுட்பங்களை, அமைப்புகளை ஆய்வதில் பரவலாகப் பயன்படுத்தத் தூண்டினாலும் சில பேரமைப்புகளைப் படிப்பதில் அவ்வளவு வல்லயை உடையதன்று என்பதும் அறியப்பட்டு வரு அமைப்புப் பொறியியல் 77 கிறது. குறிப்பாக மனிதச் சிந்தனையும் தீர்ப்பும் தீர் மானங்களும் செறிவாக அமையும் பேரமைப்புகளைப் படிப்பதிலும் அவற்றின் செய்திகளைத் தொகுத்து அவற்றைக் கட்டுப்படுத்தி மேலாள்வதிலும் இவ் வுண்மை தெளிவாகி வருகிறது. ஆற்றல், சூழலியல், பொருளாதாரம் போன்ற ஒருங்கிணைந்த பேரமைப் புகளைப் பற்றி அரசு மேற்கொண்டுவரும் வட்டார நிறுவனக் கொள்கை ஆய்வு இதற்கோர் எடுத்துக் காட்டு. காண்க, தீர்மானிப்புக் கோட்பாடு (decision theory), நேரியல் அமைப்புகளின் பகுப்பாய்வு (linear system analysis), உகப்பு நிலைப்படுத்தல் (optimiza- tion), அமைப்புப் பொறியியல் (systems engineering). நூலோதி McGraw-Hill Encyclopaedia of Science and Techno- logy. Vol. 13, McGraw-Hill Book Company, New York, 1977. அமைப்புப் பொறியியல் ஓர் அமைப்பின் தேவையான குறிப்பிட்ட ஒரு செயல் திறமை பெருமமாகும்படி பல்வேறு உறுப்புகளா வான சிக்கலான அமைப்பை வடிவமைத்தலே அமைப் புப் பொறியியலின் (system engineering) பணி ஆகும். இதில் படிமம் உருவாக்கல் (modelling), உகப்பு- நிலைப்படுத்தல் (optimisation) என இரு பகுதிகள் அடங்கும். படிமம் உருவாக்கல் என்பது அமைப்பின் ஒவ்வோர் உறுப்பையும் அதன் செயல் திறமையை அளப்பதற்கு ஏற்ற முறையில் விவரிப்பதேயாகும். உகப்பு நிலைப்படுத்தல் என்பது இந்த அமைப்பின் செயல் திறமை, உகந்த நிலையில் அமைவதற்கு ஏற்ற படி, அதிலுள்ள உறுப்புகளின் தக்க மதிப்புகளைக் கண்டறிதலாகும். அமைப்பு அணுகுமுறையை மிக எளிய பிரச்சினை முதல் அமைப்பின் நடத்தையை மனித மனத்தால் தீர் மானிக்க முடியாத அளவுக்குச் சிக்கலாக உள்ள பிரச் சினை வரை பலவகைப் பிரச்சினைகளுக்குப் பயன் படுத்தித் தீர்வு காணலாம். ஒரு வீட்டுக்கான சமைய லின் நிகழ்ச்சி வரிசைத் தொகுப்பை இம்முறையில் திட்டமிடலாம். முதலில் வீட்டின் தலைவி தேவை யான உணவுகளின் பட்டியலைப் போடுகிறார். பிறகு அவருடைய பட்டறிவின் மூலம் ஒவ்வோர் உணவு உருப்படியையும் அது தேவையான நேரத்தில் கிடைக் கும்படிச்செய்ய வெவ்வேறு படிநிலைகளில் அமையும் படி திட்டமிட்டு அதற்கேற்ப அவற்றை வரிசைப் படுத்துகிறார். குளிர்ச்சியாகப் பரிமாற வேண்டிய