78 அமைப்புப் பொறியியல்
78 அமைப்புப் பொறியியல் உணவுகளை முன்னதாகச் செய்யலாம். சமையல் நேரமும் முயற்சியும் ஒப்புக்கொள்ளத்தக்க நடை முறை மரபுகளின்படி அமைய வேண்டும். RESP ஒரு நகரத்தின் போக்குவரத்து நெரிசலை வழிப் படுத்தும் பல்லாயிரக் கணக்கான விளக்குகளின் நேரங்களைக் கட்டுப்படுத்தல் மேலும் சிக்கலான ஒரு பிரச்சினையாகும். இதற்கு நிகழும் ஊர்திப் பயணங்க ளின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வோர் ஊர்தியின் தொடக்கம், அதன் பயண முடிவு, அது செல்லும் பயணவழி ஆகியவை தேவை. இந்த அமைப்பின் செயல் திறமையை அளப்பது மிகவும் சிக்கலான தாகும். ஊர்தியின் சராசரி வேகத்தைப் பெருமமாக்க. லாம் (maxmise); மோதல்களைத் தவிர்க்கலாம்; நெருக்கடி ஊர்திகளை ஓட்டுவதற்கு ஏற்றபடி தக்க வழிவகை செய்யலாம். இந்த அமைப்பை ஒரேஒரு தனி மனிதனால் அறிவுத் திறமையுடன் கட்டுப்படுத்த முடியாது. எல்லாச் செய்திகளும் கிடைத்தாலும் இந்து M அமைப்பைக் கட்டுப்படுத்த ஒரு கணிபொறி (computer) தேவை. தொழிலகத்தை எந்திரமயப்படுத்துதல் (industrial automation) முதல் போர்ப்படைக்கலங்களைக் கட்டுப் படுத்தல், விண்வெளிக் கலங்களை ஓட்டுதல் வரை பல்வேறுபட்ட நடைமுறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைப்புப் பொறியியலின் நுட்பங்களைப் பயன்படுத்தலாம். ஒரு நகராட்சியின் வரம்புள்ள வளங்களைக் கொண்டு தக்க வீட்டு வசதியையும் வேலைப் பயிற்சிகளையும் நலப்பணிகளையும் (wel- fare)குறிப்பிட்ட fare) குறிப்பிட்ட காலத்திற்குள் பேரளவு முன்னேற் றம் அடையும்படி செய்யலாம். இதேபோல காவலர் களின் பயன்பாட்டை உகப்பு நிலைப்படுத்த, குற்ற முறைகளுக்கேற்பச் சரியான விகிதத்தில் காலாள் காவலர்களையும், பொறி மிதிவண்டி (motor cycle) காவலர்களையும், சிற்றுந்து (car) வசதிகள் உள்ள காவலர்களையும் அமைக்கலாம். சூழல் மாசுக் கட்டுப் பாட்டிலும் அமைப்புப் பொறியியல் நுட்பங்களைப் பயன்படுத்தலாம். ஒரு நகரத்தின் பல்வேறு வகைப் பட்ட காற்று மாசுகளைத் தொடர்ந்து அளந்து அவற் றின் மூல வாயில்களைக் கண்டறிந்து மாசு மட்டங் களை மனித நலத்துக்கு உகந்தவாறு கட்டுப்படுத்த லாம். சூழலைப் பாதுகாப்பதற்கும் அதே நேரத்தில் தொழிலகங்கள் எவையும் நகரத்தைவிட்டு வெளி யேற்றிவிடாமல் பொருளாதாரப் பிரச்சினைகளைக் குறைந்த அளவாக்கவும் ஏற்றபடி ஒரு கட்டுப்பாட்டுத் திட்டத்தை உருவாக்கலாம். ஓர் அமைப்புக்கான படி மத்தை உருவாக்க முடிந்தால், அதாவது அமைப்பு உறுப்புகளை வலைகளாக விளக்கி, அந்த அமைப்பின் செயல் திறமையை அளந்து பேரளவாக்கும் வழிவகை யைத் தேர்ந்தெடுக்க முடிந்தால், அமைப்பியல் அணுகு முறையைப் பயன்படுத்தி அந்த அமைப்பை வடிவ 香港 மைக்க முடியும், அமைப்பை வடிவமைக்கையிலுள்ள வெற்றி, அதன் திறமையை உகப்பு நிலைப்படுத்தலை யும், முன்னேற்று தலையும் பொறுத்தது. இதை அந்த N அமைப்பின் மாறியல்புடைய உறுப்புகளைத் தக்க அளவில் அமைத்து நிறைவேற்றலாம். அமைப்புப் பொறியியலின் அடிப்படைகள் படிமம் உருவாக்கல், உகப்புநிலைப்படுத்தல் என்ற இரு கருத்துகள் அமைப்புப் பொறியியலின் தலையாய அடிப்படைக் கூறுகளாகும். அ அமைப்பின் முதனிலைச் சிறப்பியல்புகளின் அளவியலான படப் பிடிப்பை உருவாக்குவதைப் படிமம் உருவாக்கல் என்கிறோம். இந்தப் படிமம் திரட்டப்பட்ட செய்தி விவரங்களாகவோ, பகுப்பாய்வுப் படிப்புகளாகவோ, ஆய்வுக் கூடத்தில் பெறப்பட்ட முக்கியமான அமைப் சிறப்பியல்புகளுக்காகவோ, கணிபொறி உரு வாக்கிய உண்மை அமைப்பின் ஒப்புருவாக்க புச் மாகவோ, அமையலாம். T படிமம் உருவாக்கல். ஒரு சுரங்கத்தில் அமையும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது ஒரு குறிப்பிட்ட எளிய அமைப்புப் பிரச்சினையாகும். இதை வடிவமைப்பவர் சுரங்கத்தின் வழியாக ஒரு மணியில் விடமுடிந்த சிற்றுந்துகளின் (cars) எண் ணிக்கையைப் பேரளவாக்க வேண்டும். இதை நிறை வேற்ற ஊர்தியின் வரம்பை மாற்றிச் சுரங் கத்தினுள் செல்லும் சிற்றுந்துகளின் எண எண்ணிக்கை யைக் கட்டுப்படுத்தலாம். ஓர் அமைப்பை வடிவமைக் கும் முன் பல்வேறு நெரிசல் மட்டங்களில் சுரங்கத் தின் ன் வழியாக எத்தனை சிற்றுந்துகள் எந்தெந்த எனப வேகத்தில் செல்லுகின்றன எபதை அளப்பது இன்றியமையாததாகும். இந்தச் செய்திகளுடன் சில சிற்றுந்து ஓட்டுநர்களின் சிறப்பியல்புகளும் (ஓட்டுநர் தமது சிற்றுந்துக்கும் பிற ஊர்திகளுக்கும் இடையில் எவ்வளவு இடைவெளியுடனும் எவ்வளவு முடுக்கத் துடனும் வேகத்துடனும் பயணம் செய்கிறார் என்பது போன்றன) தேவை. இந்தச் செய்திகளின் அடிப் படையில் ஒரு கணிபொறியில் இந்த இஅமைப்பின் ஒப்புருவாக்கத்தை அளவியலாக உருவாக்கலாம். பல்வேறு செயல்பாட்டு விதிகளையும் சுரங்கத்தின் ஒரு சந்தில் ஏற்படும் தடையின் விளைவுகளையும் ஓட்டுநர் குறைந்த வேக வரம்பில் ல் செல்வதால் ஏற் படும் விளைவுகளையும் ஒப்புருவாக்கம் செய்து கண் டறியலாம். காண்க, ஒப்புருவாக்கம் (simulation). படிமத்தின் மூலம் உகந்த இயக்க நிலைமைகளைச் செய்முறையாலோ பட்டறிவாலோ தீர்மானிக்கலாம். சுரங்கப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் மணிக்குண்ட 48 கி.மீ. வேகத்தில் செல்லும்போது செயல் திறமை உசுப்புநிலை அடைவதைக் கண்டறிந்துள்ளனர்.