அமைப்புப் பொறியியல் 79
இதற்குச் சுரங்கத்தின் ஒவ்வொரு சந்திலும் சிற்றுந்து கள் சம அளவில் செல்லும்படி கட்டுப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். இந்த எடுத்துக்காட்டிலிருந்து அமைப்புப் பொறி யியலின் சில சிறப்பியல்புகளை அறியலாம். ஒரு குறிப்பிட்ட பிரச்சினை தீர்க்கப்பட்டதும் அமைப்புப் பொறியாளர் மூலப் பிரச்சினையை மேலும் விரிவான பின்னணியில் ஆய்தல் வேண்டும். சுரங்கக் கட்டுப் பாட்டு அமைப்பை வடிவமைத்ததும் இந்தச்சுரங்கக் கட்டுப்பாட்டுப் பிரச்சினையை இதனுடன் தொடர் புள்ள சுரங்கத்தின் வாயிலையும் வெளிப் பகுதியை யும் சார்ந்த பிற தெருக்களில் உள்ள போக்குவரத்து நெரிசலின் பின்னணியில் பகுத்தாய வேண்டும். மிகத் திறமையாக வடிவமைக்கப்பட்ட சுரங்கக் கட்டுப்பாட்டு அமைப்பு தெருப் போக்குவரத்தில் ஏற்படும் நெரிசலால் குலைவுறும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நம்முடைய முதனிலை நோக்கம் பொருளும் பயணிகளும் வேகமாக இயங்குதலே. ஆனால் ஒரு நகரின் ஒட்டுமொத்தப் போக்குவரத்து அமைப்பு மிகவும் சிக்கலானது. ஆகையால் அவற் றைத் தனித்தனி உள்ளமைப்புகளாகக் கருதி, உள் ளமைப்புகளை முதலில் வடிவமைத்து, பிறகே நகரின் ஒட்டுமொத்தப் போக்குவரத்து அமைப்பை உகப்பு நிலைப்படுத்த வேண்டும். ஓர் அமைப்பைச் செம்மைப் படுத்தும்போது அதற்கான கட்டுப்பாடுகளும் அதிக மாகின்றன. காண்க, போக்குவரத்து நெரிசல் கட்டுப் பாட்டு அமைப்புகள். உகப்பு நிலைப்படுத்தல். ஓர் அமைப்பின் செயல் திறமையின் தரத்தை அளக்கும் அளவியலான வழி முறையால் அந்த அமைப்பை உகப்பு நிலையில் இயங் கும்படி வடிவமைக்க ஓர் அமைப்புப் பொறியாளர் முயற்சி எடுக்கிறார். எடுத்துக்காட்டாக, சுரங்கப் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையில் சிற்றுந்து களின் நுழைவையும் வேகத்தையும் அந்தச் சுரங்கம் ஒரு மணியில் மிகப் பேரளவு சிற்றுந்துகளை விடுவதற் கேற்றபடி கட்டுப்படுத்தி வடிவமைக்கிறார். இந்தப் பிரச்சினையில் உகப்புநிலைப்படுத்துவதற்கான வழி முறை மிகவும் எளியது. அது வெறும் எண்ணால் அதாவது, சுரங்கம் வழி விடும் சிற்றுந்துகளின் எண்ணிக்கையால் வரையறுக்கப்படுகிறது. பல சூழ்நிலைகளில் இந்த வழிமுறை நிகழ்தக வியல்பு உடையதாகவே அமைகிறது. எனவே அமைப் புப் பொறியாளர் அமைப்பின் நிகழ்தகவியல்பு நடத் தையை உகப்புநிலைப்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஒரு நகரின் தெரு அமைப்புக்குள் ஒரு நெருக்கடிக் காலத்தே ஊர்தியை வழிப்படுத்துதல் ஒரு சிக்கலான பிரச்சினையாகும். இந்தச் சூழ்நிலை படம் 1இல் காட்டப்பட்டுள்ளது. படத்தில் ஒரு அமைப்புப் பொறியியல் 79 படம் 1, A, B என்ற இடங்களில் தீயணைப்பு நிலையங் களுள்ள நகரத் தெருக்களின் அமைப்பு C இல் உள்ள தீ ஏற்பட்ட இடத்தில் தீயை அணைக்க வேண்டும். கட்டிடத் தொகுதிகள் எண்களால் குறிப்பிடப்பட்டுள்ளன. தீயணைப்பு வண்டி A அல்லது B இலிருந்து புறப் பட்டு Cஇல் தீயை அணைக்க வேண்டும். நகரின் போக்குவரத்து நெரிசலைக் கண்காணிக்கும் ஒளிக்கட் டுப்பாட்டு அமைப்பு ஒரு கணிபொறியால் இயக்கப் படுகிறது. இப்பொழுது கணி பொறிக்கு ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொரு தெருவிலுள்ள போக்குவரத்து அடர்த்தியும், போக்குவரத்துப் பாய்வின் விகிதமும் தரப்படுகின்றன. எனவே ஒவ்வொரு கணத்திலும் அதாவது ஒரு புள்ளியில் தீ ஏற்பட்டுள்ளதாக அறி விக்கப்பட்டால் ஒவ்வொரு தெருவிலுள்ள போக்கு வரத்து நெரிசலைப்பற்றிய செய்தியைக் கணிபொறி அறிந்திருப்பதால் அந்தச் செய்தியை வைத்துக் கொண்டு மிகச்சில நொடிகளில் கணிபொறி A இலிருந்து C -க்கு அல்லது B இலிருந்து C-க்கு செல்லத் தேவையான குறைந்த அளவு நேரத்தைக் கணக்கிடு கிறது. இந்தக் குறைந்த நேரத்தில் தீயணைப்புப் பொறி A அல்லது B என்ற இருப்பிலிருந்து தானாக அனுப்பப்படுகிறது. இந்தக் கணிபொறி ஓட்டுநருக் குத் தேவையான எதிர்பார்க்கும் குறைந்த அளவு நேரப் பயணத்தின் அளவையும் பயண வழியையும் தருகிறது. இந்தக் கணிப்பு நிகழ்தகவியல்புடையது. ஏனென் றால் கணிபொறி ஒவ்வொரு பகுதியிலும் ஊர்திப்