பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்புப்‌ பொறியியல்‌ 81

ணிக்கை 5-க்குள் இருந்தால் அது பகுத்தறிவுக்கு உகந்ததாகவும், எளிதில் நினைவில் வைத்துக் கொள் ளத்தக்கதாகவும் இருக்கும். இந்தத் தீர்மானத்தை எடுத்தலும் இந்தக் குறிப்பிட்ட நாணயங்களுக்கான மதிப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏதாவது ஒரு மதிப்பை அடையப் பயன்படுத்தும் நாணயங் களின் எண்ணிக்கையை மிகக் குறைந்த அளவின தாக்கும்படி இந்த மதிப்பளவுகளை வடிவமைக்க வேண்டும். தற்போதுள்ள முறையின்படி (1,5,10, 25, 50 சென்டுகள் 94 அல்லது 99 சென்டுகளைப் பெற ஏறத்தாழ 8 நாணயங்கள் தேவை. 1,3,7, 18, 40 சென்டு மதிப்புள்ள நாணயங்களைப் பயன் படுத்தினால் 1 முதல் 99 சென்டுகள் வரையுள்ள 1 ஏதாவது ஒரு மதிப்பைப்பெறப் பேரளவாக 6 நாண் யங்கள் மட்டும் இருந்தால் போதும். 8 நாண யங்கள் தேவைப்படா. என்றாலும் இத்தகைய உகப்புநிலைப்பாடு மனிதப் பயன்பாட்டுக்கு ஏற்ற தாகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறது. மனித இயல்பு 5, 10-களைக் கூட்டத் தான் எளிதாகப் பழகியுள்ளது. எனவே இந்தக் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொள்ளும்போது 1,5 10,25,50 என்பன குறிப்பிட்ட நாணயங்களுக்கு மிக வசதியான தேர்ந்தெடுப்புகளாக அமைகின்றன. இந்த அமைப்பை உருவாக்க அமெரிக்க ஒன்றிய நாடுகளில் அமைப்புப் பொறியியலின் கோட்பாடுகள் பயன்படுத்தப்பட்டன. சொற் குறியீடுகள் (Word codes). அமைப்புப் பொறியியலில் மிக இயல்பான பயன்பாட்டை விளக் கப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். மோர்ஸ் அமைப்புப் பொறியியல் 81 குறியீடும், பிரெய்ல் (Braille) நெடுங்கணக்கும் (alpha. phet) 19ஆம் நூற்றாண்டின் இடையிலிருந்து வழங்கி வருவனவே. இவை ஒவ்வோர் எழுத்தின் சார்பு அடுக் கங்களைப் (relative frequencies) பயன்படுத்தி உரு வாக்கப்பட்டனவே. மிக அடிக்கடி வரும் E என்ற எழுத்து ஒற்றைப்புள்ளிக் குறியீட்டால் குறிக்கப்படு வது இதனாலேயேயாகும். நடைமுறைப் பயன்பாட் டையும் பட்டறிவையும் பொறுத்துப் பார்வை இழந்த வர்கள் ஒருநிமிட நேரத்தில் 30 சொற்களைப் படிக் கின்றனர். நல்ல பார்வை உள்ளவர்கள் மணிக்கு 60 பக்கங்கள் படிப்பதாகக் கொண்டால் அவர் ஒரு நிமிடத்தில் 300 சொற்களைப் படிப்பார். அமெரிக்க ஒன்றிய நாடுகளின் கப்பல்படை இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தியசொல் உச்சரிப்புக் குறியீடு இரைச்சலைக் குறைத்துச் செய்தியைத் துல்லியமாக அனுப்ப உதவியது (படம் 3). அண்மைக் காலத்தில் எல்லாநாட்டின் மக்களின் பேச்சுக்களையும் ஆராய்ந்து அவற்றுக்குப் பொதுவான ஒலிப்பு முறைகளைப் பயன்படுத்தி மிக எளிய அனைத்துலக முறையொன்று உருவாக்கப்பட்டுள்ளது. தொலைவரைவியல் (telegraphy). எழுத்து காண்க. தன்னியக்கக் கட்டுப்பாடு (Automotive control). அமைப்புப் பொறியியலின் கருத்துக்கள் பொது அறிவோடு மிக நெருங்கி அமைவதால் புதிய அமைப் பியல் அணுகுமுறையின் சிறப்பான பயன் என்ன? இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிகள் எல்லாவிதப் பிரச்சினை களையும் அமைப்பியல் அணுகு முறையால் அணுகத் தக்க வளர்ச்சியை உருவாக்கியுள்ளன. இதில் ஒன்று M D N Q R T X Y Z படம் 2. பிரெயில் நெடுங்கணக்கு எழுத்துகள் புள்ளிகளால் காட்டப்பட்டுள்ளன. உயரமாக உள்ள புள்ளிகளைத் தொட்டுக் கண் தெரியாத ஒருவர் படிக்க முடியும் அ.க-2-11